Posts

Showing posts with the label ஊமைத்துரை Oomaithurai

16. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாஞ்சையின் ஜிப்ரால்டரை கண்டு வியந்தது.

Image
பாஞ்சாலங்குறிச்சியின் ஊமையன் கோட்டை ஸ்பெயின் நாட்டின் ஜிப்ரால்டர் (Gibraltar) கோட்டைக்கு நிகராக ஒப்பீடு செய்தல் முதல் நாள் கடும் தாக்குதலை சந்தித்த பின்னர் அன்றிரவு பசுவந்தனையில் பாசறை அடித்து தங்கிவிட்டு மார்ச் 31 ந் தேதி காலையில் பாஞ்சை நோக்கி வந்து கோட்டைக்கு வடமேற்கே ஒரு மையில் தூரத்தில் ஆத்தலோடை என்னும் இடத்தில் கும்பெனியர்படை கூடாரங்கள் போட்டு பாசறை அமைத்தது. பட்டாளங்கள் குவிந்தனர். யுத்த தளவாடங்களை ஒருங்கே நிறைத்தனர். ஆகவேண்டிய ஆயத்தங்களை விரைந்து செயதனர். இந்த நிலையில் கோட்டையை நெருங்கிய நிகழ்வை கர்னல். ஜேம்ஸ்வெல்ஷ் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். "The next day, the 31st of March, we advanced towards the Gibraltar of these insurgents." "மறுநாள் மார்ச் மாதம் 31ந் தேதி, இந்த கிளர்சியாளர்களின் ஜிப்ரால்டரை (கோட்டையை) நோக்கி முன்னேறினோம்." ஜிப்ரால்டர் என்பது ஸ்பெயின் தேசத்தின் தென்கோடியில் உள்ள திரனான அரன் கொண்ட கோட்டை ஆகும். அதோடு இந்த கோட்டையை பிற்காலத்தில் எழுதும்போது ஒப்பிட்டுருக்கிறார். காரணம் அத்தனை சாகசங்களை அவர் முன்னே நிகழ்த்திக...

15. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாஞ்சாலங்குறிச்சி படுகளத்தின் கோர சரித்திரம், பசுவந்தனை போர்

Image
பாஞ்சையர் உளவு கண்டது கும்பெனி படையினர் வரவை பாஞ்சை பதியினர் எதிர்பார்த்து நின்றனர். ஒரு வாரம் முன்பே அரசமுத்து, வீரமணி என்னும் ஒற்றர்களை ஊமைத்துரை யாரும் அரியா வண்ணம் ஏவியிருந்தார். அவர்கள் குதிரைகளுக்கு புல்லுக்கட்டுகள் விற்பவரை போல் உள்ளே புகுந்து முறையே உலவரிந்து படையெழுச்சி செய்யப்படும் தேதியை அறிந்தவுடன் பாஞ்சை வந்து நிலையை தெரிவித்தனர். உடனே படையைத் தாயார் செய்தார் ஊமைத்துரை. வரும் வழியே இடைமறித்து அடியோடு ஒழிக்க தீர்மானித்தார். பாஞ்சை மீது படை எடுக்க துணிவு கொண்டது பாளையங்கோட்டைவிருந்து 27.03.1801ந் தேதி காயத்தாறு வந்து சேர்ந்த மேஜர் மெக்காலே இரண்டு தினங்களாக  அங்கேயே தங்கி அதாவது 29ந் தேதி  தளபதிகளோடு கலந்தாலோசித்து ஊமைத்துரையின் செயல்திறன்களை தெளிவாக விளக்கினார். படையெழுச்சி செய்யவேண்டியதையும், வழியிடையே  அபாயங்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.  படையெழுச்சி மார்ச் மாதம் 30ந் தேதி காலை சூர்ய உதயத்திற்கு சற்றே முன்னர் பாஞ்சை மீது படையெடுக்க தளபதிகளுக்கு உத்தரவு கொடுத்தார். பீரங்கி வண்டிகள் முன்னே செல்...

14.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பெரும் போருக்கு இருதரப்பும் ஆயத்தம் ஆகுதல்.

Image
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைகளை பலப்படுத்துதல் மாசி மாதம் சிவராத்திரி தோரும் குலதெய்வமான ஜக்கதேவிக்கு பூஜைகள் செய்து தொழுவது பாஞ்சை மரபினர் வழக்கம். அதுபோல் இந்தமுறையும் பூஜைகள் செய்யப்பட்டு சில முடிவுகள் எடுக்க அனைத்து தளபதிகளும் பூஜையில் ஒருங்கே கூடினர். பூஜை முடிந்து, ஊமைத்துரை, துரைசிங்கம்,  காரியதரிசி சங்குபிள்ளை மற்றும் அனைத்து தளபதிகளும் அரங்கமால்  என்னும் அரச சபையில் கூடினர். இதற்கு முன்னரே பாஞ்சை பாளையத்தின் எல்லைகளை பலப்படுத்த பத்து நில மண்டலங்களாக பிரித்து அவற்றுக்கு தக்க தலைவர்களை நியமித்திருந்தனர். அவை முறையே  பசுவந்தணை, பட்டனமருதூர்,  புதியம்புத்தூர்,  ஆதனூர்,  கெவுணகிரி,  வேடநத்தம்,  தூத்துகுடி,  புதுக்கோட்டை,  பேரூரணி,  ஆத்தூர் ஆகும். இவற்றின் தலைவர்களாக  சின்னபொம்மையா,  முத்தையா,  முத்துக்குமாரசாமி,  பால்ராஜா,  வீரதளவாய்,  ரணவீரமுத்து,  ஜகவீரராமு,  பராக்கிராமபாண்டியன், பால்பாண்டியன், பூலோகபாண்டியன் முறையே நியமிக்க பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சபையில் க...

13. மாவீரர் ஊமைத்துரை வரலாறு- தூத்துக்குடி இராணுவ மற்றும் நிர்வாக(Regimental officer) முதன்மை அதிகாரி சிறை பிடிப்பும் அவர் மனைவியின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்த மாண்பும்.

Image
தூத்துக்குடி இராணுவ மற்றும் நிர்வாக(Regimental officer) முதன்மை அதிகாரி பக்கட் (Baggatt) சிறை பிடிப்பு தூத்துக்குடி பிடிப்பட்டவுடன் படைத்தலைவன் பிடிக்கப்பட்டு தோணியில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பிய பிறகு, அந்த ரெஜிமெண்ட்டின் முதன்மை அதிகாரி வெளியில் வராமல் இருந்தான், வீரர்கள் அவனை தேடிப்பிடித்து கைதும் செய்தனர். அவனது பெயர் பக்கட் (Baggatt) . அவனோடு, கைப்பற்றிய போர்க்களன்களையும் எடுத்துக்கொண்டு பாஞ்சை நோக்கி புறப்பட்டனர். மீளவிட்டான் என்னும் ஊர் வழியாக வெற்றி பெற்று வெள்ளை துறையை கைது செய்து கொண்டு  பாஞ்சை நோக்கி செல்வதை வழிநெடுகே பார்த்த மக்கள் வியந்து வீரர்களை போற்றினர். பாஞ்சையை அடைந்து மன்னருக்கு வெற்றிச் செய்தியையும், அதிகாரி கைதுசெய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளதையும் அறிவித்தனர். வெற்றியை கேட்டு மகிழ்ந்த ஊமைத்துரை, அதிகாரி பிடிக்கப்பட்டு வந்துள்ள செய்தி அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. கட்டபொம்மு மன்னரை கொன்றதற்கு அதேபோல் இவனை கொன்று கும்பெனியருக்கு தங்கள் எதிர்ப்பை காட்டலாம் என்று நினைத்த வீரர்கள் அனைவருக்கும் ஊமைத்துரையின் செயல் மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இரு...

12. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - தூத்துக்குடி மீட்பு போர் - கும்பெனி தளபதியை படகிலேற்றி தாய் நாடு அனுப்பியது.

Image
"High Spirited People - உயர்ந்த உணர்ச்சியுள்ள மக்கள்" மாணமும் வீரமும் நேர்மையும்  பரம்பரையாகவே கொண்ட மரபினர் மீது கொடுங்கோபத்தை மூட்டி வீண் பகைமையை வளர்த்தமையால் கும்பெனியற்கு தொல்லைகலும், அல்லல்களும் வம்பாக வந்தமைந்தன. பிறர் புரிந்த ஈன இழிவுகளைச் சகித்துக்கொள்ள முடியாமல் கொதித்தெழுந்து  மான உணர்ச்சியோடு நேரே எதிர்த்து போராட துணிந்தனர்.. தூத்துக்குடி கும்பெனியர் கோட்டையை மீட்க திட்டம் தீட்டுதல்: எதிரிகள் சேனையையும், ஆயுத கலன்களை பெருக்குவதையும் ஊமைத்துரை அறிந்தார். அவர்களுடைய ஆற்றல்களை குறைக்க வேண்டும் என எண்ணினார், அதற்கு கும்பெனியரின் முக்கியமான இடங்களை எல்லாம் குறிவைத்து மீட்கும் படலத்தை இன்னமும் விரைந்து முடிக்கினார். அதற்க்கான அடுத்த குறி தூத்துக்குடியை மீட்பது என தீர்மானித்தார். ஏனெனில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உப்பளங்கள் பல இவரது பாளையத்துக்கு உரிமையாய் இருந்தன, ஆகையால் அந்நகரை மீட்டே தீர்வோம் என சபதம் ஏற்றார். திட்டம் தீட்டுவதில் ஊமைத்துரைக்கு நிகர் வேறு எவரும் இல்லை. வெள்ளையர் நெஞ்சம் வெந்து கலங்கியது: கடல்வழியே சென்று வருவ...

10. மாவீரர் ஊமைத்துரை வரலாறு- காடல்குடி போரும், குசல வீரகஞ்சய பாண்டியனும், தோற்று ஓடிய கேப்டன் ஹாசார்டும்

Image
காடல்குடி பாளையம் - குசல வீரகஞ்சய பாண்டியன் கி.பி. 1801 பிப்ரவரி மாதம் 2 ந் தேதி பாளையங்கோட்டை சிறை தகர்ப்பிற்கு பிறகு   புரட்சி படையினர் இழந்த பாளையங்கள் அனைத்தையும் மீட்டிருந்தனர் அவற்றுள் முக்கியமானது காடல்குடி பாளையம். பாஞ்சாலங்குறிச்சியும் காடல்குடியும் மிகநெருங்கிய இரத்த உறவுகள். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை சகோதரர்களின் தாயார் ஆறுமுகத்தம்மாளும் , காடல்குடி மன்னர் வீர கஞ்சய பாண்டியன் அவரது மனைவி சண்முகத்தாய் அம்மாளும் உடன்பிறந்த சகோதரிகள். காடல்குடி மன்னரும், கட்டபொம்மனை போன்று வரிசெலுத்த மறுத்தவர், அதனால் ஆங்கிலேயர்கள் காடல்குடி மீது படையெடுத்து கைப்பற்றினர், பல இன்னல்களை சந்தித்தவர், பாளையம் தாக்கப்பட்ட பின்னர் பாஞ்சாலங்குறிச்சி சென்று அங்கு நடந்த போரில் களம் கண்டவர். கட்டபொம்மன் தண்டிக்கப்பட்ட அதே நாளான 16.10.1799 இல் வீரகஞ்சய பாண்டியனும் தூக்கிலிடப்பட்டார்.. அவருக்கு லவ வீரகஞ்சய பாண்டியன் மற்றும் குசல வீரகஞ்சய பாண்டியன் என இரு பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் குசல வீரகஞ்சய பாண்டியன் ஊமைத்துரையை சிறையிலிருந்து மீட்டதில் இவரின் பங்கு மிகப்பெரியது. இங்குதான் திட்ட...

9. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - இழந்த பகுதிகளின் உரிமைகளை மீட்டது மற்றும் ஆயுதச்சாலைகளை ஆயத்தம் ஆக்கியது..

Image
பாஞ்சையர் பலம்  மேலோங்கியது இரண்டாம் முயற்சியில் போர் செய்யவந்த கும்பெனி படைகள் புறமுதுகிட்டு பின்வாங்கிய நிகழ்வு மக்கள் மத்தியிலும், வீரர்கள் மத்தியிலும் ஒரு புத்துயிர் பிறந்ததை உணந்தனர். இதற்கு மீண்டும் கட்டப்பட்ட கோட்டையும், அரணை பலப்படுத்தியதுமே முக்கிய காரணமாக அமைந்தது.  இழந்த உரிமைகள் மீட்டது நெல்லைச்சீமையில்  ஏற்கனவே இழந்த தமக்கு உரிமையுள்ள  எல்லா பகுதிகளையும் ஊமைத்துரை மீட்டெடுத்தார். மேலும் எதிரிகளின் இயல்புகளையும், செயல்களையும், மதியூகங்களையும் ஒற்றர் மூலம் கண்காணித்து வந்தார், சேனைகளளை அதிகரிக்க அவர்கள் முயற்சிப்பதையும் அறிந்தார்.  ஆயுத சேமிப்பு அடுத்ததாக ஆயுத சாலைகளை தக்கபடி ஆயத்த படுத்த வேண்டும் என உறுதி பூண்டார். முன்னர் தங்களிடமிருந்து கவர்ந்த ஆயுதங்களை எல்லாம் சிந்துபூந்துரை மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆயுத சேமிப்பு கிடங்கில் சேர்த்து வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வேல், வாள், வளரி, வெடிபொருட்கள் மற்றும் நிறைய போர்க்கருவிகள் அங்கே சேர்த்து வைத்திருந்தனர். திட்டம் வகுக்கப்பட்டு எழுநூறுக்கும் மேற்பட்ட வீரர்களை தயார்செய்து வீரலக்கு, ரணவீரசின்னு,...

8.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - சீமைத்துரைகள் வாஞ்சையுடன் எழுதி வைத்துள்ள ஊமைத்துரையின் கீர்த்தியும், பாஞ்சாலங்குறிச்சியின் புகழும்

Image
உறக்கமில்லாத இரவுக்கு மீண்டும் ஓர் பேரிடி கோட்டையை எளிதாக அழித்து விடலாம் என்ற கனவோடு வந்த மேஜர் மெக்காலே திகைத்து நின்றான். அவனுடன் வந்த தளபதி அந்த நிகழ்வை இவ்வாறு எழுதுகிறான்    "After a sleepless night, we marched the next morning and reached a plain close to Panchalamcoorchy by nine 'o' clock, when, to our utter astonishment, we discovered that the walls, which had been entirely levelled, were now rebuilt, and fully manned by about fifteen hundred Polegars"               " உறக்கமில்லாத இரவுக்குப் பிறகு, மறுநாள் காலை நாங்கள் அணிவகுத்து, ஒன்பது மணிக்கு பாஞ்சாலம்கூர்ச்சிக்கு அருகில் உள்ள ஒரு சமவெளியை அடைந்தோம், எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், முற்றிலும் சமன்படுத்தப்பட்ட மதில்கள் இப்போது மீண்டும் கட்டப்பட்டு, முழுமையாகக் கட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம்.  மேலும் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பாளையக்காரர்கள் ஆயத்தமாய் இருந்தனர்"                  - The second polegar war- அரனும...

7. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - ஊமையன் கோட்டையும், நெல்லைச்சீமை புரட்சியும்

Image
ஊமையன் கோட்டையை கண்டு கும்பெனியர் பின்வாங்குதல் குலசேகர நல்லூரில் தோற்று ஓடிய ஆங்கிலேயே படைவீரர்கள் ஆறுபேர் மாண்டு இருந்தனர்,. ஆனால், ஆங்கிலேயர் பெரும்படையுடன் 09-02-1801 அன்று மறுபடியும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை நோக்கி நெருங்கி வந்தனர். எளிதாக ஊமைத்துரையை தோற்கடித்து அழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அவர்கள் கோட்டையின் தோற்றத்தைக் கண்டு மனம் தளர்ந்தனர்.  கோட்டையில் காணப்பட்ட பத்தாயிரக்கணக்கான வீரர்களைக் கண்டு தங்களது படை தோல்வியடைந்துவிடும் என்பதால் மேஜர் மெக்காலே தமது படையுடன் பின்வாங்கி 10-02-1801 அன்று பாளையங்கோட்டை சென்றடைந்தான். நெல்லை சீமையில் புரட்சியை தொடங்கிய ஊமைத்துரை நெல்லைச் சீமையில், புரட்சியைத் தொடங்கினார். விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகள் அடுத்தடுத்து ஊமைத்துரையின் வசமாயின. பசுவந்தனையில் இருந்த ஆங்கிலப் படையின் முகாம் மீது சுதேச வீரர்கள், நள்ளிரவு நேரத்தில் கொரில்லா தாக்குதல் நடத்தினர். அந்த வீரப்போரில் ஆங்கில வீரர்கள் 64பேரும், பாஞ்சை வீரர்கள் 96 பேர் விண்ணுலகம் அனுப்பப்பட்டனர்.  தூத்துக்குடியை கைப்பற்றுதல் வெற்ற...

6. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - மன்னனின் மாட்சிமைக்குக் கோட்டை ஒரு சாட்சியாய் எழுந்து நின்றது

Image
மன்னனின் மாட்சிமைக்குக் கோட்டை ஒரு சாட்சியாய் எழுந்து நின்றது. தேசபக்தியும், இராச விசுவாசமும் நிறைந்த மக்கள் மிகுந்திருந்த -மையால் இடித்து தரையோடு தரைமட்டமாக்கப்பட்ட கோட்டையை மீள்உருவாக்கம் செய்வதில் அணைவரின் பங்கும் இருக்க வேண்டும் என்று மக்களுக்குள் ஒரு உத்வேகம் காணப்பட்டது. தங்களது மன்னரை தூக்கிலிட்ட கும்பெனியர் மீது கடுங்கோபம் கொண்டனர். அதன் வெளிப்பாடே ஒரே வாரத்திற்க்குள் கோட்டை கம்பீரமாய் எழுந்து நின்றது. மக்களின் மனதை வென்ற பாஞ்சை மன்னர் கோட்டை பீரங்கிகளின் எதிர்ப்பை தாங்கி நிற்க ஏதுவாக அதன் மதிலை கட்டமைத்தனர். கம்மஞ்சக்கையை இழைத்து குழைத்த மண்ணோடு சேர்த்து அதோடு கருப்பட்டிச்சாரு, கடுக்காய், பதநீர் சேர்த்து  படை படையாக மதிலை தொடுத்து கட்டினர். தென் திசைகளில் இருந்து பதநீர் குடங்கள் குடங்களாக நட்டாத்தி   என்னும் ஊரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை மக்கள் சங்கிலி தொடர்போல் நின்று கொன்று குடங்களை கைமாற்றி கோட்டையை கட்டுவதற்கு விரைந்து அனுப்பினர்.அதுபோல் மண்ணும்,கல்லும் வந்து சேர்ந்தது. உணவையும், உறக்கத்தையும் மறந்து, இரவு பகல் என்று பாராமல் உள்ளுருமையோ...

5.மாவீரர் ஊமைத்துரை வரலாறு- மீண்டும் பாஞ்சையில் கம்பீரமான கோட்டை எழுப்புதல்

Image
ஊமைத்துரை கட்டிய கம்பீரமான கோட்டை 02.02.1801 அன்று பாளையங் கோட்டை சிறை தகர்க்கப்பட்டு தப்பியவுடன் உனடியாக கூடி ஆலோசிக்க பட்டது.  மேஜர் ஷெபர்டு   03-02-1801 ஆம் நாள் சங்கரன்கோவிலிருந்த படையுடன் புறப்பட்டு பாளையங்கோட்டை வந்தான். மற்ற பகுதிகளில் இருந்தும் படைகள் வர ஏற்பாடாயின. ஊமைத்துரை தப்பி பாஞ்சை. வந்த செய்தி அப்பகுதி மக்களிடையே தீயாய் பரவியது, மக்களையும் பக்கத்து பாளையங்களில் இருந்த புரட்சிக்காரர்களையும் ஒருங்கிணைத்தனர். தீவிரமாக ஆலோசிக்கபட்டு கோட்டையை மீண்டும் கட்டி எழுப்புவதென முடிவு செய்யப்பட்டு களத்தில் இறங்கினர். மக்களின் ஆதரவு இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கிணங்க ஒரே வாரத்தில் நினைத்ததை சாதித்தும் காட்டினார். வரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை -  ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஆங்கிலேய மேஜர் பானர்மென்னால் தரைமட்ட மாக்கப்பட்ட பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை மறுபடியும் ஊமைத்துரை  ஒரு வாரத்துக்குள் 08.02.1801 காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள். ...

4.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - சிறைமீட்பில் கோட்டைவிட்ட கும்பெனியர்

Image
ஊமைத்துரை சிறைமீட்பில் கோட்டைவிட்ட கும்பெனியர் அதீத நம்பிக்கை, பேர் இடியாய் அமைந்தது. 05.09.1799 பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து வந்த ஜான் பானெர்மேன் (John Banneeman) தலமையில் நடந்த முதல் பாஞ்சை போர் 16.10.1799 ல் முடிவுக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாரில் தூக்கலிடப்படுகிறார், கோட்டையும் தரைமட்ட மாக்கப்பட்டது, உதவிய மற்ற பாளையகாரர்கள் சிலரை தூக்கிலிட்டும், சிலரை சிறையிலும் அடைத்தனர். அத்தோடு மற்ற பாளையக் காரர்கள் யாரேனும் கும்பெனியரை எதிர்த்தால் இதுதான் கதி என்றும் பிரச்சாரம் செய்தனர். கட்டபொம்மன் இறந்துவிட்டான், கோட்டையும் அழிந்துவிட்டது இனி யாரும் கலகம் செய்யமாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையோடு இருந்த கும்பெனியாருக்கு ஊமைத்துரை சிறைமீட்பு நிகழ்வு ஓர் பேர் இடியாய் அமைந்தது. தவறை ஆராயத் தொடங்கினர். .               Colin Macaulay தவறுக்கு காரணம் பாளையங்கோட்டை சிறைச்சாலை அருகில் ஒரு மைல் தூரத்தில் ஓர் கோட்டை இருந்தது அதில் தான் படைகளும், அதிகாரிகளும் தங்கி இருந்தனர். முதல் பாஞ்சை போர் முடிந்தவுடன்  மேஜர் பானர்மேன்  சீமைக்கு ...

3.மாவீரர் ஊமைத்துரை வரலாறு- பாளையங்கோட்டை சிறைமீண்ட பின்னணி

Image
பாளையங்கோட்டை சிறைமீண்ட பின்னணி பாளையங்கோட்டை சிறைச்சாலை தகர்த்தெறியப்பட்டு சிறையை விட்டு ஊமைத்துரை வெளியே வந்ததும், தமது இனத்தவர் மற்றும் திறண்டு இருந்த மானமுள்ள வீரர்கள் கூட்டத்த்தை பார்த்து மனதிற்குள் பெருமகிழ்ச்சி கொண்டார்.  அந்த நிலையிலேயே கும்பெனியர் மீது பாய்ந்து அங்குள்ள அதிகாரிகள், சேனதிபதிகள், பட்டாளங்களை வேட்டையாடிய பின்னரே பாஞ்சைக்கு போக வேண்டும் என்று வெகுண்டெழுந்தார். ஆனால் அங்கிருந்தவர் அவரை தடுத்து "இப்பொழுது வேண்டாம், பின்பு பார்த்துக்கொள்வோம்" என்று முறையிடவே அதற்கு சம்மதித்தார். ஆனால் அது ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம் அது நடந்திருந்தால் கும்பெனியாருக்கு பெருத்த சேதம் அடைந்திருக்கும், அதன் விளைவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு எழுதி வைத்துள்ளனர் என்பது வரலாறு.அந்த சந்தர்ப்பம் நழுவிப்போனது பாஞ்சை பதிக்கு தீங்குமாய் வெள்ளையருக்கு சாதகமாய் அமைந்து விட்டது. என்ன செய்வது விதி வலியது என்றுதான் சொல்ல முடியும். பாளையங்கோட்டை சிறைச்சாலை ரகசிய  மீட்பில் கலந்து கொண்டவர்கள் முந்நூற்றி முப்பதியாரு பேர் என்றும் அதில் முன...

1.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - முதல் பாஞ்சை போரும், முடிவும்

Image
முதல் பாஞ்சை போரும், முடிவும் --------------------------------------------------------- Follow: விஜயநகர பேரரசு வரலாற்று களஞ்சியம்  https://www.facebook.com/profile.php?id=100077963244931  ________________________________________ பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஜெகவீர கட்டபொம்மு, ஆறுமுகத்தம்மாள் தம்பதியரின் மகனான வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பட்டமேற்று1790-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு  ஊமைத்துரை (குமாரசாமி), துரைசிங்கம் (சுப்பா நாயக்கர்/சிவத்தையா) என்ற 2 தம்பிகள் இருந்தனர்.இவர்கள் இருவரும் அண்ணன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உறுதுணையாக இருந்து வந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையர்களை எதிர்த்து அவர் களுக்கு வரி கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை பிடித்து தூக்கிலிடவேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்கள் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். கர்னல் பானர்மேன் தலைமையின் கீழ்வந்த படை கோட்டையை முற்றுகை இட்டு முதல் பாஞ்சை போரை துவக்கினர். தீரத்தோடு எதிர்த்து போரிட்டு கோட்டையையும் மக்களையும் காக்க போராடினர். போரின் முடிவில் தளபதி வெள்ளையதேவன், வீரன்...

2.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாளையங்கோட்டை சிறை மீட்பு

Image
02.02.1801 பாளையங்கோட்டை சிறை தகர்ப்பும், ஊமைத்துரை சிறை மீட்பும்  வரலாற்றில் ஒரு வீர நிகழ்வு வரலாற்றில் மாபெரும் வீரர்       வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும்!      கட்டபொம்மனும் அவருக்கு உதவிய பாளையக்காரர்களும்    16-10-1799 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டபின்னர், ஊமைத்துரையும் , பாளையக் காரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களால் சிறையில் இரண்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  ரகசியதிட்டமும் காவடியாட்டமும்      ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார். ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது. புரட்சியாளர்கள் இருநூறு பேர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் உடையணிந்து , காவடிகளைத் தூக்கிக் ...