2.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாளையங்கோட்டை சிறை மீட்பு

02.02.1801 பாளையங்கோட்டை சிறை தகர்ப்பும், ஊமைத்துரை சிறை மீட்பும் வரலாற்றில் ஒரு வீர நிகழ்வு

வரலாற்றில் மாபெரும் வீரர்
      வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும்!

     கட்டபொம்மனும் அவருக்கு உதவிய பாளையக்காரர்களும்    16-10-1799 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டபின்னர், ஊமைத்துரையும் , பாளையக் காரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களால் சிறையில் இரண்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

ரகசியதிட்டமும் காவடியாட்டமும்

     ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார். ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது.

புரட்சியாளர்கள் இருநூறு பேர் 01.01.1801 ஆம் நாள்,

திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் உடையணிந்து , காவடிகளைத் தூக்கிக் கொண்டு, இடுப்பில் மஞ்சள் கச்சையணிந்து மந்திரங்களை வாயில் முணுமுணுத்துத் திருநீறைப் பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டே பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு அருகில் வந்தனர். பின்னர், அவர்கள் தங்களது வேடங்களைக் கலைத்துவிட்டு , விறகுகள் மற்றும் வாழை இலைகள் , பழங்கள் ஆகியவைகளை விற்கும் வியாபாரிகளாகத் தங்களை மாற்றிக் கொண்டனர். 


இத்தருணத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்கள் சிறைக் காப்பாளர்களிடம் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்ய இப்பொருள்களை வாங்க அனுமதி பெற்றனர். உடனே தெரு வியாபாரிகள் கோட்டைக்குள் நுழைந்து சிறைவளாகத்திற்குச் சென்று ஊமைத்துரையும் அவரது தோழர்களும் அடைக்கப்பட்டிருந்த இடத்தையும் கண்டறிந்தனர்.

சிறையில் பெரியம்மை நோய் பரவியிருந்ததால் சிறைக் கைதிகள் கைவிலங்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். 

தகர்த்தெரியப்பட்ட சிறைச்சாலை

       ஊமைத்துரையிடமிருந்து சைகை கிடைத்தவுடன் விடுதலை வீரர்கள், விறகுக் கட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப் பட்டிருந்த கைத்துப்பாக்கிகள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் இதர ஆயுதங்களையும் வெளியே எடுத்து சிறைக்கதவுகளை உடைத்தெறிந்தனர்.

 சிறைக்காப்பாளர்கள் தாக்கப்பட்டு வெளியே தூக்கியெறியப்பட்டனர். ஊமைத்துரை விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேயப் படையினர் தாக்கப்பட்டு சீர்குலைக்கபட்டனர். இந்த வீர நிகழ்ச்சி 02-02-1801 ஆம் நாள் நடை பெற்றது என்பது வரலாறு!

சிறைமீண்டு பாஞ்சை அடைதல்

      சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரையும் அவரது தோழர் களும் பாஞ்சாலங் குறிச்சியை நோக்கி முன்னேறினார். ஊமைத்துரையின் படையினர் ஆங்கிலேயரின் கண்காணிப்பு இடங்களையும் , அவர்களது உணவுக் களஞ்சியங்களையும் சூறையாடினர். ஆங்கிலேயர் வசம் இருந்த பகுதிகளான ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , காடல்குடி, நாகலாபுரம், கோலார்பட்டி, தூத்துகுடி ஆகியன புரட்சியாளர்கள் வசம் வந்தன.

#முரசு2



Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)