Posts

Showing posts with the label அச்சுதராய மகாராசர் கால கல்வெட்டு

அச்சுதராய மகாராசர் கால கல்வெட்டு

Image
அச்சுதராய மகாராசர் கால கல்வெட்டு குடிமங்கலம் அரசு மருத்துவமனை அருகில் தாராபுரச் சாலையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. பூளவாடி பிராமணர் சத்திரம் கொடைக் கல்வெட்டு மன்னர் - அச்சுதராய மகாராசர் காலம் – 16ம் நூற்றாண்டு விசயநகர மன்னர் அச்சுதராய மகாராசா காலத்தில் (1529-1542) அவருடைய தென்னாட்டு ஆட்சிப் பிரதிநிதியான வாலைய தேவ மகாராசா அரசர் நன்மைக்காக ஒரு பிராமணர் சத்திரம் ஏற்படுத்தி பூளைப்பாடிக்கால்பள்ளி என்ற ஊருக்கும் பெரியமங்கலம்(குடிமங்கலம்) என்று பெயரிட்டுக் கொடையாக்க் கொடுத்த்தை இக்கல்வெட்டுக் கூறுகிறது. 12-10-1536 அன்று இக்கொடை அளிக்கபட்டது.( சகாப்தம் ௲௪௱௫௰௮, அப்பசி துவாதசி. இதன் ஆங்கில வருடம் 1536 ஆம் வருடம் அக்டோபர் 12) நிலக்கொடை என்பதால்மகாகவிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் பெற்ற “வாமனா அவதராம் உருவம் பொறித்து இக்கல்வெட்டு வெட்டப்பட்டள்ளது. 1. ஸ்வஸ்திஸ்ரீ விசையாபுதய சாலிவாகன சகாத்தம் 2. மேல் செல்லாநின்ற துன் 3. ழகி அற்பசி உயஎ(27) துவாபதசியும் புத 4. வாரமும் உத்திர நக்ஷத்திரம் பெற்ற னாள் ஸ்ரீ 5. மன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீவீரப்ப 6. றதாய ஸ்ரீ வீர அச்சுதராய மகாராயர் பிறுது 7. வி...