அச்சுதராய மகாராசர் கால கல்வெட்டு
அச்சுதராய மகாராசர் கால கல்வெட்டு
குடிமங்கலம் அரசு மருத்துவமனை அருகில் தாராபுரச் சாலையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. பூளவாடி பிராமணர் சத்திரம் கொடைக் கல்வெட்டு
மன்னர் - அச்சுதராய மகாராசர்
காலம் – 16ம் நூற்றாண்டு
விசயநகர மன்னர் அச்சுதராய மகாராசா காலத்தில் (1529-1542) அவருடைய தென்னாட்டு ஆட்சிப் பிரதிநிதியான வாலைய தேவ மகாராசா அரசர் நன்மைக்காக ஒரு பிராமணர் சத்திரம் ஏற்படுத்தி பூளைப்பாடிக்கால்பள்ளி என்ற ஊருக்கும் பெரியமங்கலம்(குடிமங்கலம்) என்று பெயரிட்டுக் கொடையாக்க் கொடுத்த்தை இக்கல்வெட்டுக் கூறுகிறது. 12-10-1536 அன்று இக்கொடை அளிக்கபட்டது.( சகாப்தம் ௲௪௱௫௰௮, அப்பசி துவாதசி. இதன் ஆங்கில வருடம் 1536 ஆம் வருடம் அக்டோபர் 12)
நிலக்கொடை என்பதால்மகாகவிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் பெற்ற “வாமனா அவதராம் உருவம் பொறித்து இக்கல்வெட்டு வெட்டப்பட்டள்ளது.
1. ஸ்வஸ்திஸ்ரீ விசையாபுதய சாலிவாகன சகாத்தம்
2. மேல் செல்லாநின்ற துன்
3. ழகி அற்பசி உயஎ(27) துவாபதசியும் புத
4. வாரமும் உத்திர நக்ஷத்திரம் பெற்ற னாள் ஸ்ரீ
5. மன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீவீரப்ப
6. றதாய ஸ்ரீ வீர அச்சுதராய மகாராயர் பிறுது
7. வி ராச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்து அந்
8. த அச்சுதராய மகாராயற்கு தெக்ஷிணாபுய தென்
9. டயாண காவேரி வல்லபன் கடக்குறைக் கா
10. றன் விருதன் வாயவந்தி விருதுகஜசில்கண் பெ
11. க்கெத்துரகல் ஓக்பிகத்துகண்டன் மண்டவி
12. கமகபராசன் உறையூற் புரவர்திகரன் பொன்ன
13. ம்பயநாத ஸ்ரீபாதசேகர காசிப கோத்திரக்
14. து ஆமஸ்கம்ப சூத்திரத்து சூரிய வங்கிஷத்திய் கோ
15. ழவெ(ம்) ஓங்கச் சென்னையதேவ மகாராசாவின் பு
16. கதாரான ஸ்ரீமான் மகாமண்டவேசுர வானய்யதேவ மகா
17. ராசர் நம்முடைய சுவாமி அச்சுதராய மகாராயற்கு பு
18. ண்ணியமாக எதன் பொங்கலூர்கா நாட்டுப் பூளை
19. ய்ப்பாடிக்காய்பள்ளியான பெரியமங்கலம் நம்முடை
20. ய சுவாமி அச்சுதராயற்கும் புண்ணியமாக பிராம
21. ணர் சத்திரத்துக்கு லட்சுமி நாராயணம் பிறிதியாக
22. வாபிதமி புண்ணிய காயத்திய் உயிரண்ணிய உதகமா
23. க தாநம் தாராபூருவமாக சனுவமானியமாக கு
24. டுகையில் இந்த பிராமண சத்திரத்து பெரிய ம
25. ங்கத்து னாற்பாக்கெல்லைக்கு விமரம் கீழ்பா
26. ங்கு எல்லை உடையார்கோயில் குளத்தேரி வ
27. டகிழைமூலை தான்தோன்றிக்கு வழிக்கு மேற்று
28. நாச்சியப்ப நயினான் காட்டுக்கு வடக்கு நட்ட வாம்
29. ன முத்திரைக்கல் தென்மேலை மூலைக்கு எல்
30. லை சுங்காரி முடகக்க கரையில் ஒற்றைப் புளியி
31. ல் நட்ட வாமன முத்திரைக் கல்லு வடமேலைமூலை
32. க்கு எல்லை தும்முரேவுக்குக் கிழக்கு கொண்டன்
33. பட்டி எல்லைக்கு தெற்கு நட்ட வாமன முதடதிரைக்
34. கல்லு வடகீழைமூலைக்கு எல்லை பூளைப்பா
35. டி வழிக்கு மேற்கு பிள்ளையாண்டன் எல்லை
36. க்கு தெற்கு நட்ட வாமன முத்திரை கல்லு இடுத்னத
37. ற்பாங்டிகல்லைக்கு உட்பட்ட நஞ்சை புஞசை
38. தோட்டம் தொடுகை மாவடை மரவடை காரமடை
39. ......ட மக்கம் மகிமை கத்தி காவிலி புறகூலி பு
40. .....க வன்றாதாயம் நிதி நிகேசமம் கல தடு பாஷா
41. ணம் அக்ஷணி ஆகாமி சித்த சாத்தியம் முதயான மற்
42. றும் எப்பேறபட்ட சகய சுவாமியங்களும் பெரி
43. ய மங்கலத்தில் பிராமண சத்திரத்துக்கு நடந்து வ
44. ரக்கடவதாகவும் இந்த தன்மம் சந்திராதித்த வரையும்
45. கெல்லச் கடவதாகவும் என்று ஸ்ரீமன் மகாமண்ட
46. லேசுர வானவயதேவ மகதராசர் நம்முடைய சுவா
47. ம் அச்சுதராயற்கும் புண்ணியமாக பிராமண
48. சத்திரத்து வைத்த தென் பொங்கலூர்கா
49. நாட்டுப் பெரியமங்கலத்துப் பிராமண சத்தி
50. ரத்து தன்மம் சாதனம் இந்த சத்திரத்தை பிராம
51. ணரின் ஆராகிலூம் நன்றாக நடத்தி வந்தாய் அ
52. ந்த பிராமண்னே இந்த கிராமத்தையும் அனு
53. பவித்துக் கொண்டு இந்த பிராமண சத்திரத்தையும்
54. நன்றாக நடத்திக்கொண்டு வரக்கடவானாகவும்
55. இந்த தர்மத்துக்கு யாதொமவர் அகிதம் பண்
56. ணினவர்கள் கெல்லக்கட தரையிலே கபிலை
57. ப்பக்வையும் பிராமணரையும் மாதா பிதாவை
58. யும் குருக்களையும் கொன்ற பாவத்திஆய போக்க
59. கக்கடவராகவும் ஸ்வதக் கான்வி மணம் புண்யம் பர
60. தத்தாந்பாயனம் பரதத்தாப ஹாரேண ஸ்வதத்தம் நிஷ்
61. பயம் பவேது. தான பாவன யோர்மத்யே தானா ஸ்ர
62. யோனு பாயனம் தானாத“ ஸ்வர்க்க மயாய்கோழி பாம
63. நாத் சுச்சுதம் பதம் சுபமஸ்து
64. பூவிரியும் காஷறை தென்பொவ்க....
65. ந் தாமன்னினையால் தென்னுடைய...........ன
66. அம்ளாய் மறையோக்கு சுன்னயிட...........வ்
67. கண்டான்...........................ள்ள
++++++++++++++++++++++++++++++++++++
Source: தென் கொங்கு சதா சிவம்
21 September 2013 · FB
Comments
Post a Comment