Posts

Showing posts with the label "கட்டபொம்மு சரித்திரக்கும்மி"3

"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"3

Image
"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"3          மன்னன்‌ கொலு  பொம்மக்காள்‌ கோவிலின்‌ முன்பாகக்‌ கட்ட  பொம்முதுரையும்‌ பேரன்பாக    கம்மவார்‌ சில்லவார்‌ தோக்குலவார்‌ நல்ல  கம்பளத்தாருங்‌' கொலுவிருக்க  நித்யகல்யாணி மேடையிலே நவரத்ன  நாற்காலி தான்போட்டு  சித்ர விஸ்தாரமாய்‌ மெத்தை விரித்ததில்‌  திண்டுவைத்து முல்லைச்‌ செண்டுவைத்து  வாசம்‌ பொருந்தவே கட்டபொம்மு துரை  ராசன்‌ மகிழ்ந்து கொலுவிருக்க  ஊமைத்துரையுஞ்‌ சிவத்தையா முத்தையா  வீமன்கருத்தய்யா வெள்ளைய்யாவும்‌  சாமித்துரையான வேடப்பட்டித்துரைச்‌  சாமியும்‌ வந்து கொலுவிருக்க  சன்னத்தளவாய்‌ பெரிய தளவாயும்‌  மன்னன்‌ புலிகுத்தி நாயக்கரும்‌    வர்ணப்பணிகள்‌ துலங்கிடவே நல்ல  மாப்பிள்ளை நாய்க்கமார்‌ வந்திருக்க  தேசம்‌ புகழுஞ்‌ செகவீரபாண்டியன்‌  செல்வன்கட்டபொம்மு ராச துரை  ராசதுரை வாசல்‌ தானாபதியான  நல்லசிவ சுப்ரமண்யபிள்ளை  கங்கைக்‌ குலாதுபன்‌ மங்களக்‌ கல்யாண  துங்கன்‌ அதிகாரம்‌ பார்த்திருக்க....