"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"3
"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"3
மன்னன் கொலு
பொம்மக்காள் கோவிலின் முன்பாகக் கட்ட
பொம்முதுரையும் பேரன்பாக
கம்மவார் சில்லவார் தோக்குலவார் நல்ல
கம்பளத்தாருங்' கொலுவிருக்க
நித்யகல்யாணி மேடையிலே நவரத்ன
நாற்காலி தான்போட்டு
சித்ர விஸ்தாரமாய் மெத்தை விரித்ததில்
திண்டுவைத்து முல்லைச் செண்டுவைத்து
வாசம் பொருந்தவே கட்டபொம்மு துரை
ராசன் மகிழ்ந்து கொலுவிருக்க
ஊமைத்துரையுஞ் சிவத்தையா முத்தையா
வீமன்கருத்தய்யா வெள்ளைய்யாவும்
சாமித்துரையான வேடப்பட்டித்துரைச்
சாமியும் வந்து கொலுவிருக்க
சன்னத்தளவாய் பெரிய தளவாயும்
மன்னன் புலிகுத்தி நாயக்கரும்
வர்ணப்பணிகள் துலங்கிடவே நல்ல
மாப்பிள்ளை நாய்க்கமார் வந்திருக்க
தேசம் புகழுஞ் செகவீரபாண்டியன்
செல்வன்கட்டபொம்மு ராச துரை
ராசதுரை வாசல் தானாபதியான
நல்லசிவ சுப்ரமண்யபிள்ளை
கங்கைக் குலாதுபன் மங்களக் கல்யாண
துங்கன் அதிகாரம் பார்த்திருக்க.
சிங்கார மாகவே பாஞ்சால நாட்டினில்
சங்கீத மேளந்தயாராக |
பேரிகைச் சத்த முழங்கிடவே சங்கு |
பேசுந் தொனியு முழங்கிடவே
காரியக் காரர்கள் காணிக்கரும் நல்ல
கம்பளச் சேருவைக் காரர்களும்
கெம்பீரமாகச் சபை கூடிச் சேவல் ?
கட்டிவிட்டங்கே விளையாடி
சேயிழை மாதர் செயம் பாட ஓயில் ?
செல்வக் குமாரர் விளையாட
வாய்பேசாப் பாண்டியன் ''ஊமைத்துரைச்சாமி
ஞாயம் விசாரணை தான் கேட்க
பாஞ்சால நாட்டுத் துரை மார்கள் நல்ல
பார்வைக் கேற்ற ஓயில்க் காரா
பூஞ்சட்டுத் துப்பட்டா மேல் போட்டு ராச
போச மகாராசன் சீறாட்டு
வட்டப் பொட்டுக்காரன் மைக்காரன் வில்காரன்
வாரகுள்ள வெள்ளையன் சீராட்டு
தஇட்டங்களாகவே கட்டபொம்மு துரை
செய்தியைக் கேளுங்கள் நல்லோரே
மாப்பிள்ளை மார் போல வருவதுவும் சப்ர
மஞ்சத்தில் மெத்தை விரிப்பதுவும்
ஆமி மனோன்மணி சக்கதேவி பொம்மு
அம்மன் பூசை இன முடிப்பதுவும்
ஞாயம் விசாரணை கேட்பதுவும் அந்த
ஞாயம் பைசல் பண்ணித் தர்ப்பதுவும்
ஏமை பரதேசிக் கன்னங் கொடுப்பதுவும்
இந்திரன் போல் கொலு விருப்பதுவும்
பாளையக்காரர் பவிசக்காரர் வீரபாண்டியார்
பாஞ்சைப் பதிராசர்
இப்படியாகத் துரைத்தனஞ் செய்து கொண்
டேயிருந்தார் கட்டபொம்முதுரை
Comments
Post a Comment