Posts

Showing posts with the label சலகெருது ஆட்டம்

சலகெருது ஆட்டம்

Image
பாரம்பரிய கலையான சலகெருது ஆட்டம்;  பொங்கலை முன்னிட்டு கொண்டாட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பாரம்பரிய கலைகளை ஆடியும், விழாவை கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் இந்தாண்டும் பண்டிகையை, பாரம்பரிய கலைகளுடன் கொண்டாடி வருகின்றனர். அதில், ஆனைமலை அருகே கரியாஞ்செட்டிபாளையத்தில் பாரம்பரியம் மாறாமல் சலகெருது ஆட்டம் விளையாடி வருகின்றனர். இறைவன், கால்நடை உருவில் வரம் அளிப்பதாக கருதும் கிராம மக்கள், பாரம்பரிய கலையை பாதுகாக்கின்றனர். பொங்கல் தினத்தன்று, மாடுகள் ஈன்றெடுக்கும் காளைக் கன்றுகள், இறைவனுக்கு சொந்தமானது என கருதப்படுகிறது. ஆகையால், இந்த கன்றுகள் கோவில்களுக்கு தானமாக அளிக்கப்படுகிறது. அதனை தத்தெடுக்கும் கிராம மக்கள், அவற்றை சலங்கை மாடுகளாக மாற்றுகின்றனர். ஒவ்வொரு கிராமத்தினரும், ஒரு சலங்கை மாட்டை தேர்ந்தெடுத்து, 'சலகெருது' என பெயரிட்டு, ஆல்கொண்டமாலனுக்கு உரியதாக போற்றப்படுவதால், இந்த கால்நடைகளுக்கு மூக்காணங்கயிறு கூட அணிவிப்பதில்லை. இந்த கன்றுகள், கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரியும். மார்கழி மாத இ...