3.மாவீரர் ஊமைத்துரை வரலாறு- பாளையங்கோட்டை சிறைமீண்ட பின்னணி

பாளையங்கோட்டை சிறைமீண்ட பின்னணி
பாளையங்கோட்டை சிறைச்சாலை தகர்த்தெறியப்பட்டு சிறையை விட்டு ஊமைத்துரை வெளியே வந்ததும், தமது இனத்தவர் மற்றும் திறண்டு இருந்த மானமுள்ள வீரர்கள் கூட்டத்த்தை பார்த்து மனதிற்குள் பெருமகிழ்ச்சி கொண்டார். 

அந்த நிலையிலேயே கும்பெனியர் மீது பாய்ந்து அங்குள்ள அதிகாரிகள், சேனதிபதிகள், பட்டாளங்களை வேட்டையாடிய பின்னரே பாஞ்சைக்கு போக வேண்டும் என்று வெகுண்டெழுந்தார். ஆனால் அங்கிருந்தவர் அவரை தடுத்து "இப்பொழுது வேண்டாம், பின்பு பார்த்துக்கொள்வோம்" என்று முறையிடவே அதற்கு சம்மதித்தார். ஆனால் அது ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம் அது நடந்திருந்தால் கும்பெனியாருக்கு பெருத்த சேதம் அடைந்திருக்கும், அதன் விளைவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு எழுதி வைத்துள்ளனர் என்பது வரலாறு.அந்த சந்தர்ப்பம் நழுவிப்போனது பாஞ்சை பதிக்கு தீங்குமாய் வெள்ளையருக்கு சாதகமாய் அமைந்து விட்டது. என்ன செய்வது விதி வலியது என்றுதான் சொல்ல முடியும்.

பாளையங்கோட்டை சிறைச்சாலை ரகசிய  மீட்பில் கலந்து கொண்டவர்கள் முந்நூற்றி முப்பதியாரு பேர் என்றும் அதில் முன்னின்று தலைமை ஏற்று நடத்தியவர்கள் 12 பேர் அவர்களின் பெயர்கள்
1. ஆதிராமு நாயக்கர்
2. வீரசிங்கு நாயக்கர்
3. நாகம நாயக்கர்
4. அன்னகாமு நாயக்கர்
5. சென்னவ நாயக்கர்
6. சின்னபாலு நாயக்கர்
7. வீரலக்கு நாயக்கர்
8. விசயதளவாய் நாயக்கர்
9. அரசமுத்து நாயக்கர்
10. பாயும்புலி நாயக்கர்
11. ரணவீர நாயக்கர்
12. ராஜபொம்மு நாயக்கர் ஆகியோராவார். சிறைமீட்பில் ஈடுபட்ட அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துகொண்டார் ஊமைத்துரை.

சிறை மீட்பில் கோட்டைவிட்ட கும்பெனியரின் தோல்விக்கு காரணம். 

அடுத்த பதிவில்.....

#முரசு3


Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)