5.மாவீரர் ஊமைத்துரை வரலாறு- மீண்டும் பாஞ்சையில் கம்பீரமான கோட்டை எழுப்புதல்
ஊமைத்துரை கட்டிய கம்பீரமான கோட்டை
02.02.1801 அன்று பாளையங் கோட்டை சிறை தகர்க்கப்பட்டு தப்பியவுடன் உனடியாக கூடி ஆலோசிக்க பட்டது. மேஜர் ஷெபர்டு 03-02-1801 ஆம் நாள் சங்கரன்கோவிலிருந்த படையுடன் புறப்பட்டு பாளையங்கோட்டை வந்தான். மற்ற பகுதிகளில் இருந்தும் படைகள் வர ஏற்பாடாயின.
ஊமைத்துரை தப்பி பாஞ்சை. வந்த செய்தி அப்பகுதி மக்களிடையே தீயாய் பரவியது, மக்களையும் பக்கத்து பாளையங்களில் இருந்த புரட்சிக்காரர்களையும் ஒருங்கிணைத்தனர். தீவிரமாக ஆலோசிக்கபட்டு கோட்டையை மீண்டும் கட்டி எழுப்புவதென முடிவு செய்யப்பட்டு களத்தில் இறங்கினர். மக்களின் ஆதரவு இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கிணங்க ஒரே வாரத்தில் நினைத்ததை சாதித்தும் காட்டினார்.
வரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை - ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஆங்கிலேய மேஜர் பானர்மென்னால் தரைமட்ட மாக்கப்பட்ட பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை மறுபடியும் ஊமைத்துரை ஒரு வாரத்துக்குள் 08.02.1801 காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள்.
இப்படி ஒரு வீரனையும் ஆளுமை திறன் படைத்தவனையும் நான் கண்டதில்லை - என்று வெள்ளை படை தளபதி ஒருவர் பதிவு செய்தது உள்ளார்.
அக்கோட்டைக்குள் மக்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஆங்கிலேயருக்கு எதிரான போரை வலிமைப்படுத்தினர். ஆங்கிலேயரிடம் வீழ்ந்த பாளையங்களைக் கைப்பற்ற செயல்திட்டம் வகுத்தனர்.
பீதியடைந்த ஆங்கிலேய அரசாங்கம் ஊமைத்துரையை உயிருடன் பிடிக்க மேஜர் மெக்கலே என்பவன், ஆங்கிலேயப் படைப் பிரிவுகளை அனைத்துப் பகுதி களிலிருந்தும் வர வைத்தான். கேப்டன் மார்டின், மேஜர் ஷெபர்டு, லெப்டினென்ட் வெல்லி ஆகியோர் மேஜர் மெக்காலேக்கு உதவி புரிய வந்தனர்.
ஆங்கிலேயப்படை 08-02-1801 அன்று குலசேகர நல்லூர் என்னும் இடத்தை அடைந்தது. ஆனால், புரட்சியாளர்கள் குலசேகர நல்லூரில் ஆங்கிலேயப் படையைத் தாக்கியதால், அப்படைகள், மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, மூன்று திசைகளில் சிதறி ஓடியது. ஊமைத்துரையின் படையில் நாற்பது புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர்
சுதந்திரத்திற்காக தமிழர்களில் ஊமைத்துரை பல பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் கால்படாத கோட்டைகளே இல்லை. அவர் முயற்சிக்காத யுக்திகளே இல்லை. அவர் கால் சுவட்டில் தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் பயனிகின்றனரா? என்ற கேள்வி மக்களிடம் எழாமல் இல்லை.
#முரசு5
Comments
Post a Comment