7. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - ஊமையன் கோட்டையும், நெல்லைச்சீமை புரட்சியும்
நெல்லை சீமையில் புரட்சியை தொடங்கிய ஊமைத்துரை
நெல்லைச் சீமையில், புரட்சியைத் தொடங்கினார். விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகள் அடுத்தடுத்து ஊமைத்துரையின் வசமாயின. பசுவந்தனையில் இருந்த ஆங்கிலப் படையின் முகாம் மீது சுதேச வீரர்கள், நள்ளிரவு நேரத்தில் கொரில்லா தாக்குதல் நடத்தினர். அந்த வீரப்போரில் ஆங்கில வீரர்கள் 64பேரும், பாஞ்சை வீரர்கள் 96 பேர் விண்ணுலகம் அனுப்பப்பட்டனர்.
தூத்துக்குடியை கைப்பற்றுதல்
வெற்றி முழக்கமிட்டபடி ஊமைத்துரையின் சுதந்திரப் படை, தூத்துக்குடி வரை முன்னேறியது. அங்கு ஆங்கிலேய அதிகாரியும், படைவீரர்களும் பிடிபட்டனர். பக்காட் என்ற ஆங்கிலேயப் பொறுப்பு அதிகாரி சிறைபிடிக்கப்பட்டான். ஆனால், அந்த அதிகாரியின் மனைவியான மெர்வின்னோலா என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டான்.
Comments
Post a Comment