16. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாஞ்சையின் ஜிப்ரால்டரை கண்டு வியந்தது.

பாஞ்சாலங்குறிச்சியின் ஊமையன் கோட்டை ஸ்பெயின் நாட்டின் ஜிப்ரால்டர் (Gibraltar) கோட்டைக்கு நிகராக ஒப்பீடு செய்தல்

முதல் நாள் கடும் தாக்குதலை சந்தித்த பின்னர் அன்றிரவு பசுவந்தனையில் பாசறை அடித்து தங்கிவிட்டு மார்ச் 31 ந் தேதி காலையில் பாஞ்சை நோக்கி வந்து கோட்டைக்கு வடமேற்கே ஒரு மையில் தூரத்தில் ஆத்தலோடை என்னும் இடத்தில் கும்பெனியர்படை கூடாரங்கள் போட்டு பாசறை அமைத்தது. பட்டாளங்கள் குவிந்தனர். யுத்த தளவாடங்களை ஒருங்கே நிறைத்தனர். ஆகவேண்டிய ஆயத்தங்களை விரைந்து செயதனர். இந்த நிலையில் கோட்டையை நெருங்கிய நிகழ்வை கர்னல். ஜேம்ஸ்வெல்ஷ் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

"The next day, the 31st of March, we advanced towards the Gibraltar of these insurgents."

"மறுநாள் மார்ச் மாதம் 31ந் தேதி, இந்த கிளர்சியாளர்களின் ஜிப்ரால்டரை (கோட்டையை) நோக்கி முன்னேறினோம்."



ஜிப்ரால்டர் என்பது ஸ்பெயின் தேசத்தின் தென்கோடியில் உள்ள திரனான அரன் கொண்ட கோட்டை ஆகும். அதோடு இந்த கோட்டையை பிற்காலத்தில் எழுதும்போது ஒப்பிட்டுருக்கிறார். காரணம் அத்தனை சாகசங்களை அவர் முன்னே நிகழ்த்திக் காட்டியது இந்த ஊமையன்.கோட்டை.

இதைக் கூறியதன் நோக்கம் யாதெனில், இக்கோட்டையை கைப்பற்றிக் கொண்டால் தென்னாடு மட்டுமின்றி இந்நாடு முழுவதும் எதிர்ப்பின்றி ஆளமுடியும் என கருத்தினாரோ என்னவோ !

இந்தக் கோட்டைக்குள் தான் ஊமைத்துரை என்ற சிங்கம் உறைந்திருக்கிறது என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

அந்த ஊமையன் கோட்டையை அருகில் சென்று பார்த்து வியந்து பாசறை அடைந்தனர் சீமைத்துரைகள்.

கோட்டையின் அமைப்புகள் மற்றும் அதற்க்கான கோப்புகள்

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)