13. மாவீரர் ஊமைத்துரை வரலாறு- தூத்துக்குடி இராணுவ மற்றும் நிர்வாக(Regimental officer) முதன்மை அதிகாரி சிறை பிடிப்பும் அவர் மனைவியின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்த மாண்பும்.
தூத்துக்குடி இராணுவ மற்றும் நிர்வாக(Regimental officer) முதன்மை அதிகாரி பக்கட் (Baggatt) சிறை பிடிப்பு
தூத்துக்குடி பிடிப்பட்டவுடன் படைத்தலைவன் பிடிக்கப்பட்டு தோணியில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பிய பிறகு, அந்த ரெஜிமெண்ட்டின் முதன்மை அதிகாரி வெளியில் வராமல் இருந்தான், வீரர்கள் அவனை தேடிப்பிடித்து கைதும் செய்தனர். அவனது பெயர் பக்கட் (Baggatt). அவனோடு, கைப்பற்றிய போர்க்களன்களையும் எடுத்துக்கொண்டு பாஞ்சை நோக்கி புறப்பட்டனர். மீளவிட்டான் என்னும் ஊர் வழியாக வெற்றி பெற்று வெள்ளை துறையை கைது செய்து கொண்டு பாஞ்சை நோக்கி செல்வதை வழிநெடுகே பார்த்த மக்கள் வியந்து வீரர்களை போற்றினர். பாஞ்சையை அடைந்து மன்னருக்கு வெற்றிச் செய்தியையும், அதிகாரி கைதுசெய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளதையும் அறிவித்தனர். வெற்றியை கேட்டு மகிழ்ந்த ஊமைத்துரை, அதிகாரி பிடிக்கப்பட்டு வந்துள்ள செய்தி அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. கட்டபொம்மு மன்னரை கொன்றதற்கு அதேபோல் இவனை கொன்று கும்பெனியருக்கு தங்கள் எதிர்ப்பை காட்டலாம் என்று நினைத்த வீரர்கள் அனைவருக்கும் ஊமைத்துரையின் செயல் மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஊமைத்துரை அவனருகே சென்றபோது அவன் வெட்கமும், துக்கமும் உடையவனாய் மறுகி நின்றான். நிராயுதபாணியாக இருக்கும் அவன் நிலையைக் கண்டு, வெள்ளையர் மீதுள்ள வெறுப்பை அடக்கிக்கொண்டு அவன் மீது பறிவு காட்டினார். "உனக்கு ஒன்றும் ஆகாது, பிரச்சனைகள் முடிந்த உடன் நீர் உயிரோடு திரும்பி செல்லலாம்" என்று சைகை காட்டினார். அவரை பாதுகாப்பாக சிறைவைக்கும்படி உத்தரவிட்டார். இறந்துபடுவோம் என்று நினைத்த வெள்ளையருக்கு சற்று ஆறுதலாய் இருந்தது. சிறைவைக்கப்பட்டு பாதுகாப்புடன் முறையாக நடத்தப்பட்டார்.
மேரி வினோலா (Mary Vinola) தன் கணவனை மீட்க கோட்டைக்கு சென்றாள்
தூத்துக்குடியில் அதிகார நிலையில் தலைவனாய் சிறந்திருந்த அந்த வெள்ளையர் பாஞ்சலங்குறிச்சியில் வந்து சிறைப்பட்டு இழிந்து கிடப்பது கும்பெனியர் அனைவருக்கும் பெரிய அவமானமாய் பட்டது. அவனதுமனைவி மேரி வினோலா (Mary Vinola)
என்ன செய்வது என்று தெரியாமல் மறுகி இருந்தாள். பாஞ்சைக்கு நேரே செல்ல துணிந்தாள், துணைணக்கு வர பலரிடமும் கெஞ்சினாள் யாரும் முன்வரவில்லை. முடிவில் தனியாக துணிந்து புறப்பட்டாள். பாஞ்சையை அடைந்து தெற்கு கோட்டை முன் நின்ற காவலர்களை கண்டு சிறிது கலங்கி நின்றாள். ஆயினும் உறுதி உடையவளாய் அரசனைக் காணவேண்டும் என கைகளால் சைகை செய்தாள். மணமிறங்கிய காவலர் செய்தியை மன்னருக்கு தெரிவித்தனர். 'வரச்சொல்' என அனுமதி கிடைத்தது. அந்த பெண் துணுவோடு உள்ளே நடந்தாள்.
ஆங்கில பெண்ணின் வேண்டுகோள் ஏற்பு
அரசனை கண்டு தலைவணங்கி தனக்கு கணவரோடு சேர்ந்து வாழும் மாங்கல்ய பிட்சை தருமாறு கண்ணீர் ததும்ப வேண்டி மறுகி நின்றாள். அவளது நிலை கண்டு மணமிறங்கினார். அஞ்சாமல் அமரும்படி கேட்டுக்கொண்டார். சிறையில் இருக்கும் அவளது கணவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். சிறையிலிருந்து அழைத்துவரப்பட்டார். மனைவியை சபையில் கண்ட அந்த வெள்ளை துரை கண்ணீரோடு அவளை வாஞ்சையுடன் பார்த்தான். அந்த பெண்ணை பார்த்து உன் வேண்டுதலை ஏற்று இவரை இப்பொழுதே விடுக்கிறேன் என்று கூறினார். அவனோடு கொண்டுவரப்பட்ட பொருட்கள் அவனிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இருவருக்கும் தேவையான பரிசுகள் அளிக்கப்பட்டன, மேலும் இரு குதிரைகளுடன் அவர்கள் பாதுகாப்பாக செல்ல நான்கு வீரர்களும் துணைக்கு அனுப்பப்பட்டனர். அந்த தம்பதியினர் வழிநெடுகும் மன்னரின் மாண்பை வியந்து பாராட்டிச் சென்றனர். இந்த செய்தி வெள்ளையரிடம், படைத்தளபதிகளிடமும் பறவி ஊமைத்துரையின் மாண்பை போற்றினர்.அவற்றை புகழ்ந்து இவ்வாறு பதிவும் செயதுள்ளனர்.
"His wife immediately followed them into the fort and petitioning for her husband's life, he was instantly set at liberty, and his property ordered to be restored."
"அவருடைய மனைவி உடனே பின் தொடர்ந்து கோட்டைக்கு வந்தாள், தனது கணவரின் உயிரை காத்தருளும்படி முறையிட்டு வேண்டினாள்; உடனே அவரை விடுதலைசெயது, அவருடைய பொருளையும் அவரிடம் திருப்பிக்கொடுக்க உத்தரவிடப்பட்டது."
மேற்படி நிகழ்வை கால்டுவெல் அவரது "History of Tinnevelly" புத்தகத்தில் இவ்வாறு எழுதி வைத்துள்ளார்.
"During the second polegar war, Tuticorin was taken from the english and held for a short time by the polegar of panchalamkurichi. This was in the beginning of 1801. They found and Englishman Mr. Buggatt who was master attendant of Tuticorin, and carried him off a prisoner."
"இரண்டாவது பாளையப்போரின் போது தூத்துக்குடியை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றி இருந்தார். சிறுது காலம் அவரது கைவசம் இருந்தது. இது கி.பி. 1801 ன் ஆரம்பத்தில் நடந்தது. அப்பொழுது அங்கு முதன்மை தலைவனாக இருந்த பக்கட் எனபரை பிடித்துப்போய் கைதியாக சிறையில் வைத்திருந்தனர்."
இதிலிருந்து சீமைத்துரைகளின் கோட்டையில் புகுந்து ஊமைத்துரை வெற்றி கண்டு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை நாம் அறிகிறோம். மேலும் அதே காலகட்டத்தில் போர்த்துக்கீசியர்களும், டச்சுகாரர்களும் வியாபாரிகளாய் நிறையக் குடியேறி இருந்தனர். அவர்கள் எப்போதும் பாஞ்சாலங்குறிச்சி பாளையகாரர்களோடு நல்ல நட்பும் அன்பும் பாராட்டியே வந்துள்ளனர். ஆங்கிலேயர்களும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்துள்ளனர். நவாபிடம் ஆட்சிருமையை பெற்ற பின் அடக்கியாளும் நோக்கோடு பகைமை பாராட்டியதில் தொடங்கி பின்னர் பிரித்தாளும் சூழ்ச்சியால் நசுக்க முற்பட்டபோது அது பெரும் போராக மாறியது.
"போர் வீரர்கள் ஆயினும் இந்த மரபினர் யாரிடமும் பேர் இரக்கம் உள்ளவர்கள் கால வேற்றுமையால் கடும் பகைகள் மூண்டு நெடுத்துயர்கள் நேர்ந்த போதும் நீதிகள் நிலைத்து நின்றன."
Comments
Post a Comment