6. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - மன்னனின் மாட்சிமைக்குக் கோட்டை ஒரு சாட்சியாய் எழுந்து நின்றது

மன்னனின் மாட்சிமைக்குக் கோட்டை ஒரு சாட்சியாய் எழுந்து நின்றது.


தேசபக்தியும், இராச விசுவாசமும் நிறைந்த மக்கள் மிகுந்திருந்த -மையால் இடித்து தரையோடு தரைமட்டமாக்கப்பட்ட கோட்டையை மீள்உருவாக்கம் செய்வதில் அணைவரின் பங்கும் இருக்க வேண்டும் என்று மக்களுக்குள் ஒரு உத்வேகம் காணப்பட்டது. தங்களது மன்னரை தூக்கிலிட்ட கும்பெனியர் மீது கடுங்கோபம் கொண்டனர். அதன் வெளிப்பாடே ஒரே வாரத்திற்க்குள் கோட்டை கம்பீரமாய் எழுந்து நின்றது.

மக்களின் மனதை வென்ற பாஞ்சை மன்னர்

கோட்டை பீரங்கிகளின் எதிர்ப்பை தாங்கி நிற்க ஏதுவாக அதன் மதிலை கட்டமைத்தனர். கம்மஞ்சக்கையை இழைத்து குழைத்த மண்ணோடு சேர்த்து அதோடு கருப்பட்டிச்சாரு, கடுக்காய், பதநீர் சேர்த்து  படை படையாக மதிலை தொடுத்து கட்டினர். தென் திசைகளில் இருந்து பதநீர் குடங்கள் குடங்களாக நட்டாத்தி என்னும் ஊரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை மக்கள் சங்கிலி தொடர்போல் நின்று கொன்று குடங்களை கைமாற்றி கோட்டையை கட்டுவதற்கு விரைந்து அனுப்பினர்.அதுபோல் மண்ணும்,கல்லும் வந்து சேர்ந்தது.

உணவையும், உறக்கத்தையும் மறந்து, இரவு பகல் என்று பாராமல் உள்ளுருமையோடு ராமனுக்கு வானரங்கள் சேர்ந்து சேதுவில் பாலம் அமைத்தார்களே அதுபோல் தன் அன்புக்குரிய மன்னனுக்கு கோட்டையை கட்டினர். இதன் மூலம் இந்த மண்ணின் மாண்பும், மன்னவர் மீது மக்கள் கொண்ட அன்பும் எத்தகைய விலைமதிப்பற்றது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த "மன்னனின் மாட்சிமைக்கு, கோட்டையே சாட்சியாய் எழுந்து நின்றது"

#முரசு6

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)