8.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - சீமைத்துரைகள் வாஞ்சையுடன் எழுதி வைத்துள்ள ஊமைத்துரையின் கீர்த்தியும், பாஞ்சாலங்குறிச்சியின் புகழும்
உறக்கமில்லாத இரவுக்கு மீண்டும் ஓர் பேரிடி
"After a sleepless night, we marched the next morning and reached a plain close to Panchalamcoorchy by nine 'o' clock, when, to our utter astonishment, we discovered that the walls, which had been entirely levelled, were now rebuilt, and fully manned by about fifteen hundred Polegars"
"உறக்கமில்லாத இரவுக்குப் பிறகு, மறுநாள் காலை நாங்கள் அணிவகுத்து, ஒன்பது மணிக்கு பாஞ்சாலம்கூர்ச்சிக்கு அருகில் உள்ள ஒரு சமவெளியை அடைந்தோம், எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், முற்றிலும் சமன்படுத்தப்பட்ட மதில்கள் இப்போது மீண்டும் கட்டப்பட்டு, முழுமையாகக் கட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம். மேலும் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பாளையக்காரர்கள் ஆயத்தமாய் இருந்தனர்"
- The second polegar war-
அரனும் கோட்டையும் அசுர வேகத்தில்
மேலும் அந்த நிகழ்வை ஜார்ஜ் ஹூயஸ் என்னும் தளபதி (George A. Hughes) இவ்வாறு எழுதுகிறார்
" An entrenchmend and breastwork had been run up with incredible celerity"
"அரனும் கோட்டையும் யாரும் நம்ப முடியாத வேகத்தில் முடித்திருக்கின்றன"
-George A. Hughes-
ஒற்றர் உரைத்த உண்மை செய்தி, உறைந்து போனோம்
இந்த படைஎடுப்பின் போது பாஞ்சாலங்குறிச்சி நிலையை உளவரிந்து வந்து சொன்ன ஒற்றர்களின் உண்மைகளை ஒரு தளபதி இவ்வாறு எழுதுகிறார்.
"Some of our scouts came in, with the agreeable intelligence that the Polegars, now amounting to five thousand, were prepared to assault our camp at night fall"
"பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் இப்பொழுது ஐயாயிரம் பேர் திரண்டிருக்கின்றனர்; இரவில் வந்து நமது கூடாரத்தை தாக்கி அழிக்கத் தீர்மானித்துள்ளனர் என்னும் உறுதியான செய்தியை நம் ஒற்றர் வந்து உரைத்தனர்."
கோட்டையே மாயஜாலமாய் எதிர்த்து நின்றது; எங்கள் கணக்குகள் பொய்யானது
"Here then was an unlooked for occurance: for the first place, we were opposed by a strong fort, raised, as it were by a magic, in a six days: and in the second, its defenders, increased beyond all calculations, were likely to becomes the assailants"
இங்கே யாரும் எதிர்பாராத நிலை நேர்ந்தது; ஆறே நாளில் அதிசய மாயஜாலமாய் எழுந்துள்ள கோட்டை முதலில் நேரே எங்களை எதிர்த்து நின்றது. அடுத்து நாங்கள் பிடிக்க வந்த எதிரிகள் அளவுமீறி எங்களை தாக்க முயன்றனர்.
உரிமை மீட்க மீண்டெழுந்த எழுச்சி
"The population of the sequestered pollams seemed to be delighted with the opportunity afforded them of trying their strength with the English once more"
"பாளைய உரிமைகளை இழந்து மறுகியிருந்த பாஞ்சாலங்குறிச்சியார் மறுபடியும் ஆங்கிலேயரோடு போராடக் கிடைத்த சமயத்தை நினைத்து உள்ளம் உவந்து ஊக்கி நின்றனர்"
சூரிய ஒளியில் வேல்கள் மின்னின
"We could plainly discern a body of fifteen hundred or two thousand men on outside of the boundary hedge, their ling spears glittering in the sun."
"ஆயிரத்து ஐநூறு அல்லது இரண்டாயிரம் போர் வீரர்கள் வரை நெடிய வேல்களோடு கோட்டையைச் சூழ்ந்து நிற்பதை நாங்கள் நேரே கண்டோம், சூரிய ஒளியில் அவ்வேல்கள் மின்னின"
பாளையங்கோட்டையை நோக்கி பின் வாங்கினோம்
"As soon as the formation was completed, we commenced our march, not for the Fort, but for Palamcottah, and when we were overtaken in the dark, by a body of the enemy, who rushed in us with shouts and screams, almost to the bayonet."
"யாவும் ஆயத்தமனவுடன், நாங்கள் புறப்பட தொடங்கினோம், பாஞ்சை கோட்டையை நோக்கி அல்ல; பாளையங்கோட்டையை நோக்கியே, இருளில் நாங்கள் முந்த முயன்றபோது, எங்களை பின் தொடர்ந்து எதிரியின் படைகள் ஆரவரமாய் எக்காலமிட்டுக்கொண்டு எங்கள் மீது பாய்ந்தனர்."
இந்த நிலையைக் காணும்பொழுது, ஊமைத்துரையை பிடிக்க சீமைத்துரை படை எடுத்து வந்ததும், அங்குள்ள சூழ்நிலை கண்டு கும்பெனி படைகள் மனமுடைந்து, நிலை குலைந்து புறமுதுகு காட்டி ஓடியதும், தெளிவாக தெரிகிறது.
இரவில் திகிலோடு தப்பித்த கடினமான பயணம்
பாஞ்சை வீரர்கள் பின் தொடர்ந்து இடை மறித்து தாக்கினர், அதிலிருந்து தப்பித்தால் போதும் என்ற பயத்தோடு இரவு முழுவதும் விரைந்து சென்று மறுநாள் காலை 9 மணிக்கு பாலையங்கோட்டையை அடைந்தனர். அந்த நிகழ்வையும் இவ்வாறு எழுதி வைத்துள்ளான்.
"Severe march, which lasted all night, than by imagination, which placed on enemy behind every bush in the road"
"இரவு முழுவதும் கடினமான பயணம்; வழியிடையே ஒவ்வொரு புதரிலும் பகைவர் ஒளிந்திருப்பாரோ! என்ற திகிலோடு வந்தோம்."
ஊமைத்துரை ஏற்படுத்திய திகிலும், தாக்கமும் வெள்ளையரை மிரளச் செய்தது.
பாஞ்சையர் வீரம் படுதிகில்களையும், கும்பெனி சேனைத்தலைவனுக்கும், படைகளுக்கும், அவமானங்களையும், குற்றவுணர்வையும் ஏற்படித்தின. இது தொடருமானால் கும்பெனியர் ஆட்சி இந்நாட்டில் நிலைத்து நில்லாமல் நிலைகுலைந்து போய்விடுமோ? என்ற கவலை தலைமை தளபதி மேஜர் மெக்காலே நெஞ்சை கலக்கி வந்தது. அவனுக்குள் ஏற்பட்ட திகிலும் பயமும் தொடந்து நிலைமையை மேலிடத்துக்கு தெரிவித்து, சேனைகளை பல பகுதிகளில் இருந்தும் வரவழைத்துக் கொண்டிருந்தான். அதையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறான்.
"Troops were pouring in from various quarters, till the 27th." (27.2.1801)
"இருபத்தி ஏழாம் தேதி வரை பல இடங்களிலுமிருந்தும் சேனைகள் வந்து குவிந்து கொண்டிருந்தன"
இதிலிருந்து நம் முன்னோர்கள் எத்தனை பெரிய தாக்கத்தையும், தியாகத்தையும் இந்த மண்ணின் சுதந்திரத்திற்க்காக இரத்தமாய் சிந்தி இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது உணர்விலே ஒரு வீரமும், மனதிலே ஒரு கர்வமும், கண்ணிலே கசியும் ஈரமும் என்றென்றும் அவர்களோடு நிலைத்திருக்கும்.
Comments
Post a Comment