9. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - இழந்த பகுதிகளின் உரிமைகளை மீட்டது மற்றும் ஆயுதச்சாலைகளை ஆயத்தம் ஆக்கியது..

பாஞ்சையர் பலம் மேலோங்கியது இரண்டாம் முயற்சியில் போர் செய்யவந்த கும்பெனி படைகள் புறமுதுகிட்டு பின்வாங்கிய நிகழ்வு மக்கள் மத்தியிலும், வீரர்கள் மத்தியிலும் ஒரு புத்துயிர் பிறந்ததை உணந்தனர். இதற்கு மீண்டும் கட்டப்பட்ட கோட்டையும், அரணை பலப்படுத்தியதுமே முக்கிய காரணமாக அமைந்தது. இழந்த உரிமைகள் மீட்டது நெல்லைச்சீமையில் ஏற்கனவே இழந்த தமக்கு உரிமையுள்ள எல்லா பகுதிகளையும் ஊமைத்துரை மீட்டெடுத்தார். மேலும் எதிரிகளின் இயல்புகளையும், செயல்களையும், மதியூகங்களையும் ஒற்றர் மூலம் கண்காணித்து வந்தார், சேனைகளளை அதிகரிக்க அவர்கள் முயற்சிப்பதையும் அறிந்தார். ஆயுத சேமிப்பு அடுத்ததாக ஆயுத சாலைகளை தக்கபடி ஆயத்த படுத்த வேண்டும் என உறுதி பூண்டார். முன்னர் தங்களிடமிருந்து கவர்ந்த ஆயுதங்களை எல்லாம் சிந்துபூந்துரை மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆயுத சேமிப்பு கிடங்கில் சேர்த்து வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வேல், வாள், வளரி, வெடிபொருட்கள் மற்றும் நிறைய போர்க்கருவிகள் அங்கே சேர்த்து வைத்திருந்தனர். திட்டம் வகுக்கப்பட்டு எழுநூறுக்கும் மேற்பட்ட வீரர்களை தயார்செய்து வீரலக்கு, ரணவீரசின்னு,...