கட்டபொம்மனை தூக்கிலிட்ட மேஜர்.ஜான் பானர்மேன் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம். "கட்டபொம்மனின் அஞ்சா நெஞ்சத் துணிவை படம் பிடித்து காட்டுகிறது"
வரலாறு படைத்த மாவீரன் கட்டபொம்மனின் கடைசி நிமிடங்கள்
பானர்மேன் தன் நாள் குறிப்பில் எழுதி இருப்பது.
"விசாரணையின்போது, பாளையக்காரர் கட்டபொம்மு நடந்துகொண்ட விதம் அதிசயிக்கத்தக்கது."
---------------------------------------------------------
விசாரணை எனும் வினோத நாடகம்
அக்டோபர் 16-ஆம் நாள் நீதிபதியைப் போல் பானர்மேன் அமர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹுயெஸ், மேஜர் பெர்கெட், கர்னல் பிரெளன் ஆகிய நான்கு பேரும் பானர்மேனுக்கு இருபக்கத்திலும் அமர்ந்து இருந்தனர்.
முதல் குற்றச்சாட்டு:
என்ன துணிச்சல்! எவ்வளவு கூர்மையான வாதங்கள்!
தூக்குத்தண்டனை
கடைசியாக, உமக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறேன் என்று அறிவித்தான் பானர்மேன்.
அஞ்சாத நெஞ்சுரத்துடன், பாளையக்காரர்களை ஏளனப் பார்வை பார்த்தவாறே, தூக்கு மரத்தை நோக்கி நடந்த பாஞ்சைச் சிங்கம், தூக்குக் கயிறைக் கழுத்திலே மாட்டிக்கொண்டு ஏணியை எட்டி உதைத்தார். திரண்டு இருந்த மக்கள் கதறி அழுதனர். மாவீரனின் உடல் இரண்டு மணி நேரம் அங்கேயே தூக்கில் தொங்கியது. காட்டுச் சுள்ளிகளையும், மரங்களையும் வைத்து வீரத்திருமகனின் உடலைக் கிடத்தினர். ஊமைத்துரை கொள்ளி வைத்தார்.
1799 அக்டோபர் 17-ஆம் நாள், தன்னுடைய நாட்குறிப்பில் பானர்மேன் எழுதி இருப்பது, கட்டபொம்மனின் மரணத்துக்கு அஞ்சா நெஞ்சத் துணிவைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
‘விசாரணையின்போது, பாளையக்காரர் கட்டபொம்மு நடந்துகொண்ட விதம் அதிசயிக்கத்தக்கது. எதற்கும் தளராமல், கலங்காமல் தீரமான அகந்தையோடு உறுதியாய் நிமிர்ந்தே இருந்தார். தூக்கு மரத்தை நோக்கி நடந்தபோது, இரு புறங்களிலும் மக்களைப் பார்த்தவாறு, பாளையக்காரர்களை இகழ்ந்து நோக்கி, மிகுந்த துணிவான தைரியத்தோடு கம்பீரமாய்ச் சென்றார். கோட்டையை விட்டு வெளியேறாமல், அங்கேயே நின்று உரிமையைப் பாதுகாத்து எதிரிகளை எதிர்த்துப் போராடி மாண்டு போயிருந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும் என்று கூறி உயிர் நீத்தார்’ என, பானர்மேன் எழுதி உள்ளார்.
முதல் குற்றச்சாட்டு:
கிஸ்தி கொடுக்கவில்லை.
கட்டபொம்மன்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.
இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்கவில்லை.
கட்டபொம்மன்: கும்பினி அதிகாரிகள் என்னைப் பார்க்க வந்தபோது, மரியாதையாக நடத்தி இருக்கின்றேன்; அன்போடு உபசரித்து இருக்கின்றேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக்காரன் அல்ல.
மூன்றாவது குற்றச்சாட்டு : தானாபதி சிவசுப்பிரமணிய பிள்ளையை எங்களிடம் ஒப்படைக்கவில்லை.
கட்டபொம்மன்: நெற்களஞ்சியத்தைக் கொள்ளை அடித்தது தவறுதான். அபராதத் தொகை தருவதாகச் சொன்னேன். அடைக்கலமாக என்னிடம் வந்தவரை எதிரிகளிடம் ஒப்படைப்பது, கட்டபொம்மனுக்குச் சரிப்பட்டு வராது.
நான்காவது குற்றச்சாட்டு:

சிவகிரி பாளையத்திற்கு உள்ளே போய்க் கலகம் செய்தீர்.
கட்டபொம்மன்: அங்கே ஏற்பட்ட கலகத்தை அடக்க வேண்டும் என்று பாளையக்காரர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால், நான் அங்கே போனேன்.

ஐந்தாவது குற்றச்சாட்டு:
கும்பினி இராணுவ அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டார்கள். அதற்கு நீர்தான் காரணம்.
கட்டபொம்மன்: சிரித்துக் கொண்டே கட்டபொம்மன் சொல்கிறார். பாஞ்சாலங்குறிச்சியின் மீது நீங்கள்தான் போர் தொடுத்தீர்கள். தற்காப்புக்காகத்தான் நாங்கள் எதிர்தாக்குதல் நடத்தினோம். திருச்சியில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லலாம் என்று கருதிச் சென்றேன். ஆனால், மக்களைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போய்விட்டான் கட்டபொம்மன் என்று வதந்திகளைப் பரப்பி என்னை அவமானப்படுத்தினீர்கள். இருதரப்பாக மோதிக் கொண்டோம். ஆனால், போரைத் தொடுத்தவனே நீதிபதியாக விசாரணை செய்கின்ற விசித்திரத்தைப் பார்க்கின்றேன். உங்களுக்கு எது விருப்பமோ, அதைச் செய்து கொள்ளுங்கள்’ என்றார்.
கட்டபொம்மன்: சிரித்துக் கொண்டே கட்டபொம்மன் சொல்கிறார். பாஞ்சாலங்குறிச்சியின் மீது நீங்கள்தான் போர் தொடுத்தீர்கள். தற்காப்புக்காகத்தான் நாங்கள் எதிர்தாக்குதல் நடத்தினோம். திருச்சியில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லலாம் என்று கருதிச் சென்றேன். ஆனால், மக்களைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போய்விட்டான் கட்டபொம்மன் என்று வதந்திகளைப் பரப்பி என்னை அவமானப்படுத்தினீர்கள். இருதரப்பாக மோதிக் கொண்டோம். ஆனால், போரைத் தொடுத்தவனே நீதிபதியாக விசாரணை செய்கின்ற விசித்திரத்தைப் பார்க்கின்றேன். உங்களுக்கு எது விருப்பமோ, அதைச் செய்து கொள்ளுங்கள்’ என்றார்.
என்ன துணிச்சல்! எவ்வளவு கூர்மையான வாதங்கள்!
தூக்குத்தண்டனை
கடைசியாக, உமக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறேன் என்று அறிவித்தான் பானர்மேன்.
அஞ்சாத நெஞ்சுரத்துடன், பாளையக்காரர்களை ஏளனப் பார்வை பார்த்தவாறே, தூக்கு மரத்தை நோக்கி நடந்த பாஞ்சைச் சிங்கம், தூக்குக் கயிறைக் கழுத்திலே மாட்டிக்கொண்டு ஏணியை எட்டி உதைத்தார். திரண்டு இருந்த மக்கள் கதறி அழுதனர். மாவீரனின் உடல் இரண்டு மணி நேரம் அங்கேயே தூக்கில் தொங்கியது. காட்டுச் சுள்ளிகளையும், மரங்களையும் வைத்து வீரத்திருமகனின் உடலைக் கிடத்தினர். ஊமைத்துரை கொள்ளி வைத்தார்.
1799 அக்டோபர் 17-ஆம் நாள், தன்னுடைய நாட்குறிப்பில் பானர்மேன் எழுதி இருப்பது, கட்டபொம்மனின் மரணத்துக்கு அஞ்சா நெஞ்சத் துணிவைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
‘விசாரணையின்போது, பாளையக்காரர் கட்டபொம்மு நடந்துகொண்ட விதம் அதிசயிக்கத்தக்கது. எதற்கும் தளராமல், கலங்காமல் தீரமான அகந்தையோடு உறுதியாய் நிமிர்ந்தே இருந்தார். தூக்கு மரத்தை நோக்கி நடந்தபோது, இரு புறங்களிலும் மக்களைப் பார்த்தவாறு, பாளையக்காரர்களை இகழ்ந்து நோக்கி, மிகுந்த துணிவான தைரியத்தோடு கம்பீரமாய்ச் சென்றார். கோட்டையை விட்டு வெளியேறாமல், அங்கேயே நின்று உரிமையைப் பாதுகாத்து எதிரிகளை எதிர்த்துப் போராடி மாண்டு போயிருந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும் என்று கூறி உயிர் நீத்தார்’ என, பானர்மேன் எழுதி உள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும்!
திரு. வைகோ அவர்கள் எழுதிய "வரலாறு படைத்த மாவீரன்" என்ற கட்டுரையின் ஒரு பகுதி. அத்துடன் பானர்மேன் கடிதம் இணைத்துள்ளேன்.
முழுவிவரம்:
https://www.dailythanthi.com/amp/news/districts/2018/01/02101315/veerapandiya-kattabomman-is-a-historian-of-history.vpf
Comments
Post a Comment