Posts

Showing posts from May, 2022

விஜயநகர பேரரசு தோன்றுவதற்கான அரசியல் சூழ்நிலை

Image
விஜயநகர பேரரசு தோன்றுவதற்கான அரசியல் சூழ்நிலை

கட்டபொம்மன் உண்மை வரலாறுகள் - ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது.

Image
கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது. ஜாக்சனை நோக்கி நீதி விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள். 1. தென்னாட்டின் தலைமை அதிகாரத்தை உனக்கு தந்திருந்தும் அந்நாட்டின் நிலைமை தெரியாமல் நடந்திருக்கிறீர். 2. கட்டபொம்மனோடு நட்பு பாராட்டி இதமாக நெருங்கி வரியை வசூலிக்காமல் முரட்டுத்தனமாக கலகம் விளைவித்துள்ளீர்.  3. கொலைகள் விழக் காரணமாய் இருந்துள்ளீர். வர வேண்டிய வரி வரவில்லை. 4. பாரம்பரியமாக அங்கு சிறந்து வந்துள்ள ஒரு பாளையக்காரரை அவர்கள் வேலையரியாமல் பல இடங்களுக்கும் அலைய வைத்து வெறுப்பை உண்டாக்கியுள்ளீர். 5. அதனால் பெரிய கலகம் உண்டாகியிருக்கிறது. விநயமில்லாத உன்னை இன்று முதல் இப்பதவியிலிருந்து நீக்குகிறோம். 🙏🙏🙏 Click : 👇 விஜயநகர பேரரசு வரலாற்று களஞ்சியம்

கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - கேப்டன் டேவிஷன் கடிதம் - Captain Davison Letter

Image
கேப்டன் டேவிஷன் கடிதம் - Captain Davison Letter கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்: தூத்துக்குடியில் வாழ்ந்த கேப்டன் டேவிஷன் என்ற வெள்ளைக்கார துரை நல்லவர்., கல்வியாளர், செல்வாக்கோடு வாழ்ந்தவர், இவர் பெயரில் "டேவிசுபுரம்' என்ற ஊர் இன்னும் தூத்துக்குடியில் உள்ளது. இவர் பாஞ்சாலங்குறிச்சி அரசர்களோடு நெருங்கிய தொடர்போடு நட்பு பாராட்டி வந்தவர். பாஞ்சாலங்குறிச்சியாரின் அருமை, பெருமைகளை அறிந்தவர். நெருங்கிய நண்பராய் இருந்தவர்.  இவர் வேண்டுகோளை ஏற்றுத்தான் கலெக்டர் ஜாக்சனை சந்திக்க முன்வந்தார் கட்டபொம்மன். அந்த சந்திப்பு கலவரத்தில் முடிந்தது. தானாபதி பிள்ளை கைது செய்யப்பட்டுவிட்டார். மேற்படி தகவல்கள்களை ஓலை மூலம் கேப்டன் டேவிசணுக்கு தெரியப்படித்தினார். டேவிஷன் நேரில் பாஞ்சாங்குறிச்சிக்கு வந்து நடந்த விஷயங்களை அறிந்து தன்  வேதனையை வெளிப்படுத்தினார். ஜாக்சன் செயல் தவறென்று கூறினார். நான் உண்மைகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார். அதன்படி அவர் நீதி விசாரணை குழுவிற்கு ஓர் கடிதம் எழுதினார். டேவிஷன் கடிதம்: இதன் மூலம் நாம் அறிந்து கொ...

கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - பானர்மேன் செப்பேடு

Image
மேஜர்_பானர்மேன்_செப்பேடு கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள்   பானர்மேன் செப்புப்பட்டயச் தேவையாகும்.. ஆர்சுகாட்டு தாலாபு 1781-இல் ஆங்கிலேயருக்குக் கொடுத்திருந்த வரி கண்டும் உரிமையை 1785-இல் திரும்பப் பெற்றார். தமிழகத்தின் தெற்குச் சீமையில் வரிதண்டும் உரிமையை மட்டுமாவது தங்களிடம் ஒப்படைக் குமாறு ஐங்கிலேயரி நவாபை வற்புறுக்கினர். அவர் அதற்கு உடன்படவில்லை தவாபின் விருப்பத்திற்கு எதிராக 1790-இல் தெற்குச் சீமையில் வரிதண்டும் உரிமையைத் தாங்களே ஏற்றுக்கொளீடதாக ஆங்கிலேர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். திருநெல்வேலியில் ஒழுங்காகச் சம்பளம் கிடைக்கப்பெறா மல் நிலைகுலைந்து நின்ற நவாபின் படைகளையும் அவர்கள் தங்களோடு எளிதாக இணைத்துக் கொண்டனர். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நவாபு 1792-இல் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி பூஆங்கிலேயர் தெற்குச் சீனமகளிலே வரிதண்டல் செய்து செலவு போக எஞ்சிய தொகையை அவர்களுக்கு நவாபு கொடுக்க வேண்டிய சுடனுக்கு வரவு வைத்துக் கொள்ளவேண்டும். கடன்தொகை முழுவதும் வரவு வந்த பின்னர் நாட்டைத் திரும்ப நவாபிடம் ஒப்படைத்து விட வேண்டும் என முடிவு செய்யப...

கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்- ஜாக்சன் துரை கடிதம்

Image
இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் சந்திப்பில் ஏற்பட்ட போர் நிகழ்வை பற்றி ஜாக்சன் மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதம். "பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாகிய கட்டபொம்மு நாயக்கன் என்னை போட்டிக் காண வருவதாகப் பாவனை காட்டி 4000 போர் வீரர்களுடன் இராமநாதபுரம் வந்து தங்கினான். 9.9.1798 மாலை 5 மணிக்கு என்னை காண வேண்டும் என ஆள் மூலம் சொல்லி அனுப்பினான். நான் மறுநாள் காலை 10 மணிக்கு காணலாம் என சொல்லி அனுப்பினேன். குறித்த காலத்தில், அவனும், அவனுடைய தம்பி ஊமையும், தானாபதியும், படைவீரர் சிலரும் அடைவாக வந்தனர். அவனை உரிமையோடு இருக்கச்செய்து நம் ஆட்சிக்குரிய வரியைச் செலுத்த வேண்டிய முறையை குறித்து உரைத்தேன். ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் உள்ளச்செருக்கோடு ஊக்கமுடன் பேசினான். கண்ணியம் வாய்ந்த நம் கும்பெனி ஆளுகையை மதியாமல் திண்ணியனாய் நின்று நாளும் அவன் செய்துவரும் தீங்குகளை எல்லாம் தெளிவுற எடுத்துக்காட்டி இனிமேல் பாங்குடன் அடங்கி நடந்துவரும்படி பண்போடி கூறினேன். அங்ஙனம் இதமாக நான் கூறி வருங்கால் அவன் மதம் மீறித் திடீரென்று திமிறி எழுந்து வெளியே போனான் . நம் தளபதியாகிய கிளார்க் (Clarke) வேகமாய் எதிரே புகுந்து அவன...

W. C. Jackkson

W. C. Jackkson

col. agnew

col. agnew

கட்டபொம்மன் உண்மை வரலாற்று சான்றுகள். முன்னால் இராணுவ அதிகாரி கேப்டன் ராவ் அவர்கள் எழுதிய ஆய்வுகட்டுரை

Image
மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் உண்மை வரலாறுகளை பேசும் ஓய்வு பெற்ற இராணுவ கேப்டன் திரு. ராவ் அவர்களின் ஆய்வு கட்டுரை கட்டபொம்மன் நாயக் கூறினார்:    நான் இதுவரை யாருக்கும்  பணம் செலுத்தவில்லை.  பாஞ்சாலங்குறிச்சியின் அரசன், எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், எவருக்கும் காணிக்கை செலுத்துவது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது .  அதனால் நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். " என்னை ஒழுக்கமற்றவர், நண்பர் அல்லது எதிரி என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது.   தங்களின் உத்தியோகபூர்வ கடமைகளின் போது என்னை அழைத்து  என்னிடம் ஒப்படைத்த கம்பெனி சர்கார் அதிகாரிகள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.  அவ்வாறு கேட்கப்பட்டால் அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.  அவர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு கொலையாளினால் கொல்லப்பட்டால், அந்தக் குற்றத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது..   திருநெல்வேலிக்கு வந்து அவருடைய அலுவலகத்தில் அவருக்காகக் காத்திருக்கச் சொன்ன; லூஷிங்டன் துரையின் உத்தரவை நான் வெறுத்தேன், நான் ஒன்றும் துரையின் தனிப்பட்ட வே...

கட்டபொம்மன் உண்மை வரலாற்று சான்றுகள் - அவமதித்தவர்களுக்கு சாட்டையடி பதில்கள் - பேராசிரியர் ஐயா.வே.மாணிக்கம் அவர்கள்

Image
கதையாடல்களில் கட்டபொம்மன் உண்மை வரலாறு பேராசிரியர் வே.மாணிக்கம்   பிரிவு:  கதைசொல்லி - ஆகஸ்ட் 2006   வெளியிடப்பட்டது: 13 மே 2010 கேள்வி 1 : பொதுவாக ஒரு வரலாற்றை ஆவணங்கள், பட்டயங்கள், அகழ்வாய்வுப் பொருட்கள், கல்வெட்டுக்கள் இவற்றை ஆதாரங்களாகக் கொண்டே எழுதுவது வழக்கம். கதைப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றை எழுத இயலுமா? பதில் : வரலாற்றை எழுதுவதில் இரண்டு நிலைகள் உள்ளன.  1) தகவல் அல்லது தகவலாளி   2) அவற்றைச் சேகரித்து எழுதும் வரலாற்று ஆய்வாளன். தகவல் அல்லது ஆவணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் தகவல்களைச் சான்றாதாரங்களாகக் கொண்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் வரலாற்றாசிரியர் பணியே முதன்மையானது. நிகழ்ச்சிகளின் மேலே கதைப்பாடகன் பூசி உள்ள இனிப்புப் பூச்சை நீக்கி, உள்ளுறையாகத் திரிந்து மறைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை மூழ்கி எடுக்க வேண்டும். கதைபாடல்களில் வரலாற்று உண்மைகள் கல்லுக்குள் தேரை போன்றும், மூங்கில் பட்டையில் ஒட்டியிருக்கும் மெல்லிய சருகு போன்றும் அழுந்திக் கிடக்கும். வரலாற்றுக் கதைப் பாடல்களிலும் உயர்...

Gingee Fort - Troy of the East

Gingee Fort - Troy of the East

Veera Pandiya Kattabomman- Revolutionary Who Inspired a Generation of Freedom Fighters in TN

Image
Veera Pandya Kattabomman- Revolutionary Who Inspired a Generation of Freedom Fighters in TN  

16. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாஞ்சையின் ஜிப்ரால்டரை கண்டு வியந்தது.

Image
பாஞ்சாலங்குறிச்சியின் ஊமையன் கோட்டை ஸ்பெயின் நாட்டின் ஜிப்ரால்டர் (Gibraltar) கோட்டைக்கு நிகராக ஒப்பீடு செய்தல் முதல் நாள் கடும் தாக்குதலை சந்தித்த பின்னர் அன்றிரவு பசுவந்தனையில் பாசறை அடித்து தங்கிவிட்டு மார்ச் 31 ந் தேதி காலையில் பாஞ்சை நோக்கி வந்து கோட்டைக்கு வடமேற்கே ஒரு மையில் தூரத்தில் ஆத்தலோடை என்னும் இடத்தில் கும்பெனியர்படை கூடாரங்கள் போட்டு பாசறை அமைத்தது. பட்டாளங்கள் குவிந்தனர். யுத்த தளவாடங்களை ஒருங்கே நிறைத்தனர். ஆகவேண்டிய ஆயத்தங்களை விரைந்து செயதனர். இந்த நிலையில் கோட்டையை நெருங்கிய நிகழ்வை கர்னல். ஜேம்ஸ்வெல்ஷ் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். "The next day, the 31st of March, we advanced towards the Gibraltar of these insurgents." "மறுநாள் மார்ச் மாதம் 31ந் தேதி, இந்த கிளர்சியாளர்களின் ஜிப்ரால்டரை (கோட்டையை) நோக்கி முன்னேறினோம்." ஜிப்ரால்டர் என்பது ஸ்பெயின் தேசத்தின் தென்கோடியில் உள்ள திரனான அரன் கொண்ட கோட்டை ஆகும். அதோடு இந்த கோட்டையை பிற்காலத்தில் எழுதும்போது ஒப்பிட்டுருக்கிறார். காரணம் அத்தனை சாகசங்களை அவர் முன்னே நிகழ்த்திக...

15. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாஞ்சாலங்குறிச்சி படுகளத்தின் கோர சரித்திரம், பசுவந்தனை போர்

Image
பாஞ்சையர் உளவு கண்டது கும்பெனி படையினர் வரவை பாஞ்சை பதியினர் எதிர்பார்த்து நின்றனர். ஒரு வாரம் முன்பே அரசமுத்து, வீரமணி என்னும் ஒற்றர்களை ஊமைத்துரை யாரும் அரியா வண்ணம் ஏவியிருந்தார். அவர்கள் குதிரைகளுக்கு புல்லுக்கட்டுகள் விற்பவரை போல் உள்ளே புகுந்து முறையே உலவரிந்து படையெழுச்சி செய்யப்படும் தேதியை அறிந்தவுடன் பாஞ்சை வந்து நிலையை தெரிவித்தனர். உடனே படையைத் தாயார் செய்தார் ஊமைத்துரை. வரும் வழியே இடைமறித்து அடியோடு ஒழிக்க தீர்மானித்தார். பாஞ்சை மீது படை எடுக்க துணிவு கொண்டது பாளையங்கோட்டைவிருந்து 27.03.1801ந் தேதி காயத்தாறு வந்து சேர்ந்த மேஜர் மெக்காலே இரண்டு தினங்களாக  அங்கேயே தங்கி அதாவது 29ந் தேதி  தளபதிகளோடு கலந்தாலோசித்து ஊமைத்துரையின் செயல்திறன்களை தெளிவாக விளக்கினார். படையெழுச்சி செய்யவேண்டியதையும், வழியிடையே  அபாயங்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.  படையெழுச்சி மார்ச் மாதம் 30ந் தேதி காலை சூர்ய உதயத்திற்கு சற்றே முன்னர் பாஞ்சை மீது படையெடுக்க தளபதிகளுக்கு உத்தரவு கொடுத்தார். பீரங்கி வண்டிகள் முன்னே செல்...

14.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பெரும் போருக்கு இருதரப்பும் ஆயத்தம் ஆகுதல்.

Image
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைகளை பலப்படுத்துதல் மாசி மாதம் சிவராத்திரி தோரும் குலதெய்வமான ஜக்கதேவிக்கு பூஜைகள் செய்து தொழுவது பாஞ்சை மரபினர் வழக்கம். அதுபோல் இந்தமுறையும் பூஜைகள் செய்யப்பட்டு சில முடிவுகள் எடுக்க அனைத்து தளபதிகளும் பூஜையில் ஒருங்கே கூடினர். பூஜை முடிந்து, ஊமைத்துரை, துரைசிங்கம்,  காரியதரிசி சங்குபிள்ளை மற்றும் அனைத்து தளபதிகளும் அரங்கமால்  என்னும் அரச சபையில் கூடினர். இதற்கு முன்னரே பாஞ்சை பாளையத்தின் எல்லைகளை பலப்படுத்த பத்து நில மண்டலங்களாக பிரித்து அவற்றுக்கு தக்க தலைவர்களை நியமித்திருந்தனர். அவை முறையே  பசுவந்தணை, பட்டனமருதூர்,  புதியம்புத்தூர்,  ஆதனூர்,  கெவுணகிரி,  வேடநத்தம்,  தூத்துகுடி,  புதுக்கோட்டை,  பேரூரணி,  ஆத்தூர் ஆகும். இவற்றின் தலைவர்களாக  சின்னபொம்மையா,  முத்தையா,  முத்துக்குமாரசாமி,  பால்ராஜா,  வீரதளவாய்,  ரணவீரமுத்து,  ஜகவீரராமு,  பராக்கிராமபாண்டியன், பால்பாண்டியன், பூலோகபாண்டியன் முறையே நியமிக்க பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சபையில் க...

13. மாவீரர் ஊமைத்துரை வரலாறு- தூத்துக்குடி இராணுவ மற்றும் நிர்வாக(Regimental officer) முதன்மை அதிகாரி சிறை பிடிப்பும் அவர் மனைவியின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்த மாண்பும்.

Image
தூத்துக்குடி இராணுவ மற்றும் நிர்வாக(Regimental officer) முதன்மை அதிகாரி பக்கட் (Baggatt) சிறை பிடிப்பு தூத்துக்குடி பிடிப்பட்டவுடன் படைத்தலைவன் பிடிக்கப்பட்டு தோணியில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பிய பிறகு, அந்த ரெஜிமெண்ட்டின் முதன்மை அதிகாரி வெளியில் வராமல் இருந்தான், வீரர்கள் அவனை தேடிப்பிடித்து கைதும் செய்தனர். அவனது பெயர் பக்கட் (Baggatt) . அவனோடு, கைப்பற்றிய போர்க்களன்களையும் எடுத்துக்கொண்டு பாஞ்சை நோக்கி புறப்பட்டனர். மீளவிட்டான் என்னும் ஊர் வழியாக வெற்றி பெற்று வெள்ளை துறையை கைது செய்து கொண்டு  பாஞ்சை நோக்கி செல்வதை வழிநெடுகே பார்த்த மக்கள் வியந்து வீரர்களை போற்றினர். பாஞ்சையை அடைந்து மன்னருக்கு வெற்றிச் செய்தியையும், அதிகாரி கைதுசெய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளதையும் அறிவித்தனர். வெற்றியை கேட்டு மகிழ்ந்த ஊமைத்துரை, அதிகாரி பிடிக்கப்பட்டு வந்துள்ள செய்தி அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. கட்டபொம்மு மன்னரை கொன்றதற்கு அதேபோல் இவனை கொன்று கும்பெனியருக்கு தங்கள் எதிர்ப்பை காட்டலாம் என்று நினைத்த வீரர்கள் அனைவருக்கும் ஊமைத்துரையின் செயல் மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இரு...