கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - பானர்மேன் செப்பேடு

மேஜர்_பானர்மேன்_செப்பேடு
கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள்

 
பானர்மேன் செப்புப்பட்டயச் தேவையாகும்.. ஆர்சுகாட்டு தாலாபு 1781-இல் ஆங்கிலேயருக்குக் கொடுத்திருந்த வரி கண்டும் உரிமையை 1785-இல் திரும்பப் பெற்றார். தமிழகத்தின் தெற்குச் சீமையில் வரிதண்டும் உரிமையை மட்டுமாவது தங்களிடம் ஒப்படைக் குமாறு ஐங்கிலேயரி நவாபை வற்புறுக்கினர். அவர் அதற்கு உடன்படவில்லை தவாபின் விருப்பத்திற்கு எதிராக 1790-இல் தெற்குச் சீமையில் வரிதண்டும் உரிமையைத் தாங்களே ஏற்றுக்கொளீடதாக ஆங்கிலேர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். திருநெல்வேலியில் ஒழுங்காகச் சம்பளம் கிடைக்கப்பெறா மல் நிலைகுலைந்து நின்ற நவாபின் படைகளையும் அவர்கள் தங்களோடு எளிதாக இணைத்துக் கொண்டனர். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நவாபு 1792-இல் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி பூஆங்கிலேயர் தெற்குச் சீனமகளிலே வரிதண்டல் செய்து செலவு போக எஞ்சிய தொகையை அவர்களுக்கு நவாபு கொடுக்க வேண்டிய சுடனுக்கு வரவு வைத்துக் கொள்ளவேண்டும். கடன்தொகை முழுவதும் வரவு வந்த பின்னர் நாட்டைத் திரும்ப நவாபிடம் ஒப்படைத்து விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நெற்குச் சீமையில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர் முதலில் பாளையங்களை ஒழுங்கு படுத்துவதில் ஈடுபட்டனர். ஆங்கிலேயரிடம் எதிர்ப்புணர்வு கொண்ட பாளை யங்களை ஒடுக்குவது அவர்களுடைய முதல் பணியாக இருந்தது. பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் தொடக்கம் முதலே வெள்ளையரிடம் விரோதம் பாராட்டி வந்தனர். இதனாலேயே பாஞ்சாலங்குறிச்சி ஆறு பெரும்  படையெடுப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. 1790-இல் வீரபாண்டியக் சுட்டபொம்மன் ஆட்சிப் பொறுப்பேற்ற போது அப்போராட்டம் உச்ச நிலையை எய்தியது.

1799 செப்டம்பர் 5-ஆம் நாள் மேஜர் பானர்மேன் பாஞ் சாலங்குறிச்சியைத் தாக்கினார். பாஞ்சாலங்குறிச்சி தரைமட்டமாக்கப் பட்டது. 1799 அக்டோபர் 16-ஆம் நாள் கட்டபொம்மன் கயத் தாற்றில் தூ க்கிலிடப்பட்டார். அந்தக் காலகட்டத்தில்தான் மேஜர் பானர்மேன் இந்தச் செப்பேட்டு அறிக்கையை வெளியிட்டார். 

 பாளையக்காரர்கள் கோட்டை கட்டவும் படைதிரட்டவும் ஆயுதங்கள் சேகரிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. அவர்கள் குத்தகைதாரர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். பாளையக்காரர் என்ற உரிமை பாரம்பரியமாக வருவது. ஆனால் குத்தகைதாரரை" அரசு எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். பாளையக்காரர்களுக்கு நவாபு அளித்திருந்த பல உரிமைகளை ஆங்கிலேயர் இந்த அறிக்கை மூலம் பறிக்க முயன்றனர். பாளையங்களை ஒழிக்கும் திட்டத்தை நவாபு விரும்ப வில்வை. நவாபு இனங்காவிட்டாலும் இதனை நிறைவேற்றிவிட வேண்டுமென்று ஜூன் 1795-இல் இங்கிலாந்திலிருந்த இயக்குநர்கள்( Court of Directors) முடிவு செய்தனர்.

ஆனால் கும்பனியரால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை. என்பதைக் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்  பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் இந்தத் திட்டத்திற்குப் பெரும் தடையாக நின்றது. வீரபாண்டியக் கட்டபொம்மு இந்த அறிவிப்பை ஏற்க மறுத்தார். இது தமது பாளைய உரிமையையும் தன்மான உணர்வையும் பறிக்கும் திட்டம் என்பதை உர்ந்தார். இதனை எதிர்த்து வரி கொடுக்க மறுத்தார். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கினார். அதில் நாகலாபுரம், கோலாரிப்பட்டி, ஏழாபிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையங்கள் இணைந்தன. செப்பேட்டின் 5, 6வது வரிகளில் இவர்கள் குறிப்பிடபட்டுள்ளனர். 1797-இல் ஏற்பட்ட புரட்சியில் நெல்லைச் சீமை பாளையக்காரர்களில் பெரும்பாலானவர்கள் கட்ட பொம்மன் தலைமையில் கலந்துகொண்டனர் அவர்கள் வரி செலுத்தவும் மறுத்தனர்.

கோட்டைகளை இடிக்கும் பொருட்டு
1792-இல்  விளம்பரத்தை கர்னல் மாக்ஸ்வெல் வெளியிடப் பட்டபோது பாளர்மேன் அவருடைய செயலாளராக இருந்தார். எனவே இந்தத் திட்டத்தை முன்பே நன்கு புரிந்து இருந்த மேஜர் பானர்மேன் அதை நிறைவேற்ற 1799-ல் தான் வெளியிட்ட விளம்பரம் மூலம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதை நிறைவேற்றும் வகையில் எட்டை யபுரத்தார் மற்ற பாளையங்கருக்கு முன் மாதிரியாகத் தம்முடைய மூன்று கோட்டைகளையும் இடித்தார். தொடர்ந்து பாளையக்காரர்கள் பலர் தங்கள் கோட்டைகளை அழித்தனர். எனினும் 1801-இல் கட்டபொம்முவின் சகோதரர் ஊமைத்துரையைத் தூக்கிலிட்ட பின்னரே ஆங்கிலேயரால் இந்த விளம்பரத்தை முறமையாக நிறைவேற்ற முடிந்தது. பாளையக்காரர்களின் காலகட்ட கோட்டை அமைப்பையும், தொழில்நுட்பத்தையும் பிற்காலத்தவர். காணமுடியாமல் போனதற்கு மேசர் பானர்மோடைய மேற்கண்ட நடவடிக் கையே என்பதை இந்த விளம்பரம் முலம் அறியமுடிகிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)