கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - கேப்டன் டேவிஷன் கடிதம் - Captain Davison Letter

கேப்டன் டேவிஷன் கடிதம் - Captain Davison Letter
கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்:

தூத்துக்குடியில் வாழ்ந்த கேப்டன் டேவிஷன் என்ற வெள்ளைக்கார துரை நல்லவர்., கல்வியாளர், செல்வாக்கோடு வாழ்ந்தவர், இவர் பெயரில் "டேவிசுபுரம்' என்ற ஊர் இன்னும் தூத்துக்குடியில் உள்ளது.
இவர் பாஞ்சாலங்குறிச்சி அரசர்களோடு நெருங்கிய தொடர்போடு நட்பு பாராட்டி வந்தவர். பாஞ்சாலங்குறிச்சியாரின் அருமை, பெருமைகளை அறிந்தவர். நெருங்கிய நண்பராய் இருந்தவர். 

இவர் வேண்டுகோளை ஏற்றுத்தான் கலெக்டர் ஜாக்சனை சந்திக்க முன்வந்தார் கட்டபொம்மன். அந்த சந்திப்பு கலவரத்தில் முடிந்தது. தானாபதி பிள்ளை கைது செய்யப்பட்டுவிட்டார். மேற்படி தகவல்கள்களை ஓலை மூலம் கேப்டன் டேவிசணுக்கு தெரியப்படித்தினார். டேவிஷன் நேரில் பாஞ்சாங்குறிச்சிக்கு வந்து நடந்த விஷயங்களை அறிந்து தன்  வேதனையை வெளிப்படுத்தினார். ஜாக்சன் செயல் தவறென்று கூறினார். நான் உண்மைகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார். அதன்படி அவர் நீதி விசாரணை குழுவிற்கு ஓர் கடிதம் எழுதினார்.

டேவிஷன் கடிதம்:
இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது யாதெனில், 

பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய மதிப்பீடுகள் எத்தகையது என்பதை வெள்ளையர்கள் எவ்வாறு உணர்ந்திருக்கின்றனர் என்பதை அவர்கள் எழுதிய கடிதங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது.

இந்த மண்ணின் மானம் காத்த மாவீரர்களின் பெருமைகள் என்றென்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் கொண்டிருக்கும்.

வெற்றிவேல் ! வீரவேல் !

🙏🙏🙏


Comments

Post a Comment

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)