Posts

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கில ஏகாதிபத்தியம் தகர்க்க காரணமாக இருந்த அரசியல் சூழ்ச்சியும் & சதியும் - யாரும் பேசாத நுட்பமான வரலாறு.

Image
#ஆர்காட்டுநவாபு 1781-இல் ஆங்கிலேயருக்குக் கொடுத்திருந்த வரி தண்டல் உரிமையை 1785-இல் திரும்பப் பெற்றார்.  #தமிழகத்தின் தெற்குச் சீமையில் மட்டுமாவது  வரிதண்டல் உரிமையை தங்களிடம் ஒப்படைக் குமாறு  நவாபை வற்புறுக்கினர் வெள்ளையர். அவர் அதற்கு உடன்படவில்லை.  #நவாபின் விருப்பத்திற்கு எதிராக 1790-இல் தெற்குச் சீமையில் வரிதண்டல் உரிமையைத் தாங்களே ஏற்றுக்கொண்டதாக ஆங்கிலேயர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.  #திருநெல்வேலியில் ஒழுங்காகச் சம்பளம் கிடைக்கப்பெறாமல் நிலைகுலைந்து நின்ற நவாபின் படைகளையும் அவர்கள் தங்களோடு எளிதாக இணைத்துக் கொண்டனர்.  #தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நவாபு 1792-இல் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி ஆங்கிலேயர் தெற்குச் சீமைகளிலே வரிதண்டல் செய்து செலவு போக எஞ்சிய தொகையை வெள்ளையர்களுக்கு நவாபு கொடுக்க வேண்டிய கடனுக்கு வரவு வைத்துக் கொள்ளவேண்டும்.  #கடன்தொகை முழுவதும் வரவு வந்த பின்னர் நாட்டைத் திரும்ப நவாபிடம் ஒப்படைத்து விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. #இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தெற்குச் சீமையில் நிர்வாகப் பொறுப்பை...

விஜயநகர பேரரசு உருவான வரலாற்று பின்னணி - பகுதி 1

Image
ஓர் வரலாற்று ஆராய்ச்சி கண்ணோட்டம் மற்றும் ஒரு விளக்கம் இந்த ஆராய்ச்சி அமைப்பு கூறியது போல், இந்த ஆராய்ச்சி பதினாறாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை, உள்ள காலப்பகுதியில் கவனம் செலுத்துகிறது.  பெரும்பாலும் "ஆரம்ப நவீன" வயது (early modern age) என்று அழைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் விஜயநகரம் அதன் உச்சநிலையை அடைந்த நேரம். அதன் சிதைவின் தொடக்கம், மேலும் அதன் வாரிசுகளின் தோற்றம், செழிப்பு மற்றும் வீழ்ச்சியைத் குறிக்கிறது.   ஆனால் இந்த ஆய்வு மேலும் முந்தைய "இடைக்கால பிற்பகுதி" சகாப்தத்தையும் கருத்தில் கொள்கிறது. விஜயநகரத்தின் முன்னோடிகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி மற்றும் பேரரசின் அடித்தளம் மற்றும் அதன் வளர்ச்சி ஆகியவற்றை பார்க்கிறது.   இந்த இரண்டு காலகட்டங்கள் முழுவதும், ஒன்றாக பெரும் பகுதி பரவியது, இரண்டாவது ஆயிரமாண்டில் தென்னிந்தியா ஒரு பேரரசுகளின் வரிசையைக் கண்டது-அல்லது மிகக் குறைந்த பிராந்திய அதிகாரங்கள் - அவை சிறிய, பிராந்திய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன இதையொட்டி புதிய பேரரசுகளால் உள்வாங்கப்பட்டது அல்லது தோற...

கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள்

Image
வீரபாண்டிய கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் பாஞ்சாலங்குறிச்சியும், அதன் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனும் அவரது சகோதரர்கள் மற்றும் அவரது மந்திரி, தளபதிகள், ஓற்றர்கள், படைவீரர்கள், குடிமக்கள், சக பாளையக்காரர்கள் ஏனையோரும் இம்மண்ணின் மானம் காக்க வெள்ளையரை எதிர்த்து போராடி உயிர் துறந்தனர்.  அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் மக்கள் மனதில் ஏற்றிக்கொண்டு கதை பாடல்களாகவும், கும்மி பாடல்களாகவும் நாடுதோறும் பாடி இந்த மக்களின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர்.  மேலும் நேருக்கு நேர் எதிரிகளாய் நின்ற வெள்ளையர்களின் பதிவுகள் இம்மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், மாண்புகளையும் உலகம் போற்றும் விதமாய் எழுதி வைத்துள்ளனர். அவற்றை ம.பொ.சி அவர்கள் வெள்ளையரை எதிர்த்த முதல் வீரன் கட்டபொம்மன் என்று அவர் நூலாக எழுதி அது பெரும் வரவேற்ப்பை பெற்றது.  ம.பொ.சி க்கும் தமிழ்வானனுக்கும் உள்ள அரசியல் பகையை நேரடியாக எதிர் கொள்ள திராணியில்லாமல் அவரது நூலை விமர்சிக்கும் வகையில் கட்டபொம்மனை தனது நூலின் மூலம் விமர்சிக்க தொடங்கினார்.  அதற்கு ம.பொ.சி மற்றும் பல பெருந்தலைவர்களும் தமிழ்வாணன்...

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பிடிக்க ஆங்கிலேய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட கடிதங்கள். #british letters

 # பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பிடிக்க ஆங்கிலேய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட கடிதம் . #Briitish letters  "Subramonya pilly, the head manager of Cataboma Mahi who is known to have instigated and advised his master in his unwarrantable proceedings." சுப்ரமணிய பிள்ளை என்பர் கட்டபொம்மு நாயக்கருடைய தானாபதி. அவர் தனது நியாமாற்ற நடவடிக்கைகளில் தனது எஜமானரைத் தூண்டி துர்ஆலோசனை வழங்கியதாக அறியப்படுகிறது." "To accomplish what has been suggested, it will be necessary to assemble a force to consist of ;- Four field pieces whit artillery men, Five hundred Europeans Three complete battalions of sepoys and two troops of cavalry. This detachment should immediately proceed to take possession of the Fort of Pannalam Courchy" "பரிந்துரைக்கப்பட்டதை நிறைவேற்ற, பின்வருவனவற்றை உள்ளடக்கிய ஒரு பலத்தை கூட்டுவது அவசியம். * நான்கு பீரங்கி நிலைகள்  * ஐநூறு ஐரோப்பியர்கள் * சிப்பாய்களின் மூன்று         முழுமையான பட்டாலியன்கள்     மற்றும்  * குதிரைப்பட...

விஜயநகர பேரரசு தோன்றுவதற்கான அரசியல் சூழ்நிலை

Image
விஜயநகர பேரரசு தோன்றுவதற்கான அரசியல் சூழ்நிலை

கட்டபொம்மன் உண்மை வரலாறுகள் - ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது.

Image
கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது. ஜாக்சனை நோக்கி நீதி விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள். 1. தென்னாட்டின் தலைமை அதிகாரத்தை உனக்கு தந்திருந்தும் அந்நாட்டின் நிலைமை தெரியாமல் நடந்திருக்கிறீர். 2. கட்டபொம்மனோடு நட்பு பாராட்டி இதமாக நெருங்கி வரியை வசூலிக்காமல் முரட்டுத்தனமாக கலகம் விளைவித்துள்ளீர்.  3. கொலைகள் விழக் காரணமாய் இருந்துள்ளீர். வர வேண்டிய வரி வரவில்லை. 4. பாரம்பரியமாக அங்கு சிறந்து வந்துள்ள ஒரு பாளையக்காரரை அவர்கள் வேலையரியாமல் பல இடங்களுக்கும் அலைய வைத்து வெறுப்பை உண்டாக்கியுள்ளீர். 5. அதனால் பெரிய கலகம் உண்டாகியிருக்கிறது. விநயமில்லாத உன்னை இன்று முதல் இப்பதவியிலிருந்து நீக்குகிறோம். 🙏🙏🙏 Click : 👇 விஜயநகர பேரரசு வரலாற்று களஞ்சியம்

கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - கேப்டன் டேவிஷன் கடிதம் - Captain Davison Letter

Image
கேப்டன் டேவிஷன் கடிதம் - Captain Davison Letter கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்: தூத்துக்குடியில் வாழ்ந்த கேப்டன் டேவிஷன் என்ற வெள்ளைக்கார துரை நல்லவர்., கல்வியாளர், செல்வாக்கோடு வாழ்ந்தவர், இவர் பெயரில் "டேவிசுபுரம்' என்ற ஊர் இன்னும் தூத்துக்குடியில் உள்ளது. இவர் பாஞ்சாலங்குறிச்சி அரசர்களோடு நெருங்கிய தொடர்போடு நட்பு பாராட்டி வந்தவர். பாஞ்சாலங்குறிச்சியாரின் அருமை, பெருமைகளை அறிந்தவர். நெருங்கிய நண்பராய் இருந்தவர்.  இவர் வேண்டுகோளை ஏற்றுத்தான் கலெக்டர் ஜாக்சனை சந்திக்க முன்வந்தார் கட்டபொம்மன். அந்த சந்திப்பு கலவரத்தில் முடிந்தது. தானாபதி பிள்ளை கைது செய்யப்பட்டுவிட்டார். மேற்படி தகவல்கள்களை ஓலை மூலம் கேப்டன் டேவிசணுக்கு தெரியப்படித்தினார். டேவிஷன் நேரில் பாஞ்சாங்குறிச்சிக்கு வந்து நடந்த விஷயங்களை அறிந்து தன்  வேதனையை வெளிப்படுத்தினார். ஜாக்சன் செயல் தவறென்று கூறினார். நான் உண்மைகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார். அதன்படி அவர் நீதி விசாரணை குழுவிற்கு ஓர் கடிதம் எழுதினார். டேவிஷன் கடிதம்: இதன் மூலம் நாம் அறிந்து கொ...