கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள்
பாஞ்சாலங்குறிச்சியும், அதன் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனும் அவரது சகோதரர்கள் மற்றும் அவரது மந்திரி, தளபதிகள், ஓற்றர்கள், படைவீரர்கள், குடிமக்கள், சக பாளையக்காரர்கள் ஏனையோரும் இம்மண்ணின் மானம் காக்க வெள்ளையரை எதிர்த்து போராடி உயிர் துறந்தனர்.
அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் மக்கள் மனதில் ஏற்றிக்கொண்டு கதை பாடல்களாகவும், கும்மி பாடல்களாகவும் நாடுதோறும் பாடி இந்த மக்களின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர்.
மேலும் நேருக்கு நேர் எதிரிகளாய் நின்ற வெள்ளையர்களின் பதிவுகள் இம்மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், மாண்புகளையும் உலகம் போற்றும் விதமாய் எழுதி வைத்துள்ளனர்.
அவற்றை ம.பொ.சி அவர்கள் வெள்ளையரை எதிர்த்த முதல் வீரன் கட்டபொம்மன் என்று அவர் நூலாக எழுதி அது பெரும் வரவேற்ப்பை பெற்றது.
ம.பொ.சி க்கும் தமிழ்வானனுக்கும் உள்ள அரசியல் பகையை நேரடியாக எதிர் கொள்ள திராணியில்லாமல் அவரது நூலை விமர்சிக்கும் வகையில் கட்டபொம்மனை தனது நூலின் மூலம் விமர்சிக்க தொடங்கினார்.
அதற்கு ம.பொ.சி மற்றும் பல பெருந்தலைவர்களும் தமிழ்வாணன் மீது கடும் விமர்சனம் செயதனர். அவர்களுள் முக்கியமானவர்கள்...
மூதறிஞர் இராஜாஜி
அறிஞர் அண்ணா
பி.இராமமூர்த்தி
சின்ன அண்ணாமலை
போன்றோர் ஆவர். அவர்களின் குறிப்புகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
வெகு காலம் அந்த புத்தகத்தை வைத்து வரலாரற்ற ஜாதி வெறியர்கள் சேற்றை வாரி வீசிக்கொண்டிருந்தனர். இவர்களின் இழிசெயல்களை எதிர்த்து பலபேர் பேசி வந்திருந்தாலும். அதற்கெல்லாம் வரலாற்று ஆதாரங்களோடு ஆய்வு செய்து ஐயா திரு.வே.மாணிக்கம் அவர்கள் இவற்றை மேடைகளில் தமிழ்வாணன் செய்த அத்தனை பொய், புரட்டுகளையும் போட்டுடைத்தார்.
சரியான நூல்களை படிக்காமல், முற்காலத்தில் கட்டபொம்மனுக்கு எதிராக இருந்தவர்களின் கைகூலிகள் எழுதிய முரணான பதிவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு உண்மை வரலாற்று பதிவுகளை கருத்தில் கொள்ளாமல் அரைகுறை எழுத்து வியாபாரம் செய்திருக்கிறார் என்று கடும் சொற்களாலும், சரியான ஆதாரங்களோடும் தமிழ்வாணனின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.
அவர் பேசியவற்றை தொகுத்து "வீரபாண்டியகட்டபொம்மு விவாதமேடை" என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டார். அதன் சில பகுதிகள் நான் முன்னரே பதிவிட்டுருக்கிறேன். இந்த நூலை முழுமையாக படிப்பவர்கள் நியாயமான உண்மைத் தன்மைகளையும் அந்த வீரர்களின் தியாகத்தையம் அறிய முடியும். தமிழ்வாணன் செய்தது எவ்வளவு பெறிய தவறு என்பதை உணரமுடியும்.
அதற்கான சிறிய பதிவு தான் இது. இதை மக்களின் பார்வைக்கு வைப்போம்.
தமிழ்வாணன் நூலுக்கு ஏற்பட்ட எதிர்வினைகள்
1. தமிழ்வாணன் எப்பேர்ப்பட்ட குறுகிய மனம் படைத்தவர் என்பதற்கு நூலை ஆரம்பிக்கும் போதே அவருடைய அயோக்கியத் தனங்கள் வெளிப்படுவதை கல்வியறிவற்றவன் கூட அறிந்து கொள்வான் என்பதை ஐயா மாணிக்கம் அவர்கள் சுட்டி காட்டியுள்ளார் . 👇
2. மூதறிஞர் இரராஜாஜி அவர்கள் தமிழ்வாணனை கண்டித்தது. 👇
3. பி.இராமமூர்த்தி அவர்கள் தமிழ்வாணனை கண்டித்தது. 👇
4. அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்வாணனை கண்டித்தது. 👇
5. சின்ன அண்ணாமலை அவர்கள் தமிழ்வாணனை கண்டித்தது. 👇
6. ம.பொ. சி. அவர்கள் தமிழ்வாணனை கண்டித்தது. 👇
7. நூலாசிரியர் மாணிக்கம் அவர்கள், தமிழ்வானனின் செயல்கள் மஞ்சள் பத்திரிகை போன்ற மட்டரகமான எழுத்து என்கிறார்.👇
இதை படிக்கும் மக்கள் இதன் உண்மை தன்மையை அறியட்டும்.
Comments
Post a Comment