ஹொய்சாள வீரசோமேஸ்வரரின் அரியலூர் கல்வெட்டு அரியலூர் மாவட்டம் காமரசவள்ளி சிவன் கோவிலுள் கணபதி சன்னதியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. போசளமன்னர் வீரசோமேஸ்வரரின் மெய்க்கீர்த்தியில் அவருடைய பல்வேறு பட்டப்பெயர்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. அவை சமஸ்தபுவனாஸ்ரய, ஸ்ரீபிருதிவி வல்லப, மகா ராஜாதிராஜ, பரமேஸ்வர, துவராபதி பூர்வராதீஸ்வர, யாதவகுலாம் பரத்யமணி சர்வக்ஞ சூடாமணி, மலராஜராஜ, மலபருபா, கண்டரதந, பிரசண்ட கண்ட பேரு, அநேகாந்த வீரநர, சகாயசூர, சனிவாரசித்திகிரி, துர்க்கமல்ல, சலேதங்கராமன், வைரிப கண்டீரவ, மகதராஜ்ய நிர்மூல, பாண்டியகுல சமூத்திரண, சோளராஜ்ய பிரதிஷ்டாசாரிய, நிச்சங்கபிரதாப, சக்கரவத்தி போசள ஸ்ரீவீரசோமிஸ்வர தேவரசர் என்னும் பட்டப்பெயர்களாகும். இதில் இம்மன்னர் வாணகோவரையர்கள் ஆட்சி செய்த மகதராச்சியத்தையும், பாண்டிய மன்னர்களையும் வென்றவன் என்றும் சோழ நாட்டில் சோழ மன்னரின் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் குறிப்பிடப்படுகிறார். துவாரபதி என்ற நகரம் மகாபாரத காலத்தில் துவாரகையென ஸ்ரீ கிருஷ்ணனின் தலைநகரமாக விளங்கியது. அந்த நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மன்னர்களின் பரம்பரையில் வந்தவன், யா...