Posts

Showing posts from March, 2024

எர்ர கொல்லவார் ஷத்திரியர் என காலக்ஞானம் நூல் கூறுகிறது

Image
எர்ர கொல்லவார் ஷத்திரியர் காலக்ஞானம் நூல் கூறுகிறது தகவல்: Raja Raja Narendran fb எர்ரகொல்லவார் க்ஷத்திரியர் - காலக்ஞானம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ #கொல்லவார் #க்ஷத்திரியர் #காலக்ஞானம் #ஸ்ரீசர்வக்ஞர் இரண்டாம் பிஜ்ஜலதேவன் ஆட்சியில் கி.பி.12ம் நூற்றாண்டில் தவ ஞானி மகாபுருஷர் ஸ்ரீ #சர்வக்ஞ_முனிவர் அவர்களால் திரிகாலமும் எடுத்துரைக்கும் "#காலக்ஞானம்" என்னும் நூல் இயற்றப்பட்டது. இந்நூல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்கிற தகவல்களை முன்கூட்டியே கூறும் ஆரூட நூலாகவும் அமைந்துள்ளது. இந்நூலில் ஸ்ரீசர்வக்ஞரால் முன்கூட்டியே கணிக்கப்பட்டவை அனைத்துமே நடந்துவருவதாக நம்பிக்கை வலுவாக உள்ளது. இந்நூல் எர்ரகொல்லவார்களை கீழ்கண்டவாறு கூறுகின்றது. காலக்ஞானம் : ~.~.~.~.~.~.~.~.~ "విచిత్రమతం పుట్టును. అది యేమంటేను శరణ స్థలం పేరు కలిగిని. సర్వాంగప్రసాద మనే హేళిక మంత్రం పుట్టును. దానివల్లను కృష్ణవేణి తీరమందు ఎర్ర గొల్ల క్షత్రియులు ఏగుదురు. వారి సతులు వీరసేవ్య రహస్యంగాను లింగవంతులై గురుచరేశ్వరులు వైష్ణవమతం చేత ఉందురు. అప్పటికి రాయపట్నము రాజులేక చెడిపోవును. చెడుగుణాలై పోవుదురు. దీ...

கூலப்ப நாயக்கர் காதல்

Image
கூலப்ப நாயக்கன் காதல் ராஜா  கூளப்ப நாயக்கர் காதல்:- மதுரை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சேர்ந்த நிலக்கோட்டை பாளையக்காரர் சிந்தம நாயக்கரின் மகன் கூளப்ப நாயக்கர்.  கூளப்ப நாயக்கர் ஒரு சமயம் தன் பரிவாரங்கள் புடைசூழ நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள பன்றிமலைக்கு வேட்டையாடப் போயிருக்கிறார். வேட்டைக்குப் போன இடத்தில் நவரத்தின மாலை என்ற மலைசாதிப் பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு, அவளுடனே வாழ்கின்றார்.  தந்தையிடமிருந்து அவசரச் செய்தி வரவே, நவரத்தின மாலையைப் பிரிந்து நிலக்கோட்டை திரும்புகிறார்.  நாளடைவில் நவரத்தின மாலை பற்றிய பிரிவால் மனம் வாடி மெலிய, பிறகு மீண்டும் பன்றிமலை வந்து நவரத்தின மாலையைச் சந்தித்து ஆறுதல் கூறி தன்னோடு நிலக்கோட்டைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்ட காதல்.  கதையினை 371 கண்ணிகளால் அமைந்ததே கூளப்ப நாயக்கன் காதல் என்னும் இச்சுவடி. அமைவிடம்:- Manuscript Department of Tamil University, Thanjavur, India. நிலவை ஜெகா.

சின்ன நெகமம் பாளையக்காரர் கல்வெட்டு

Image
கொங்கு கல்வெட்டு ஆய்வு ஞாயிறு, 9 அக்டோபர், 2016 சின்ன நெகமத்தில் பாளையக்காரர்  கல்வெட்டு  பாளையக்காரர்கள் – ஒரு முன்னுரை          விசயநகரப்பேரரசின் தோற்றம்          கி.பி. 1336-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விசயநகரப் பேரரசு உருவானது. பின்னர் கி.பி. 1378-இல், விசயநகர அரசின் இளவரசரான குமார கம்பணன் மதுரையை வெற்றிகொண்டார். தொடர்ந்து தமிழகம், கேரளம் ஆகிய இரண்டும் விசயநகர ஆட்சியின்கீழ் வந்தன. விசயநகர அரசு பல நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் இந்த ஆட்சிப்பிரிவுகளுக்குத் தலைவர்களாக மண்டலாதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்குத் தனியே படையும் உண்டு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் “நாயக்கர்கள் ”   என்னும் படைதலைவர்களின் உருவாக்கம் நிகழ்ந்தது.         கிருஷ்ணதேவராயரின்   நாயக்கத்தனம்        எனினும், நாயக்கர் உருவாக்கம் முழுமையான வடிவமும் சிறப்பான நிலையும் பெற்றது கிருஷ்ணதேவராயரின் ...

தளி பாளையக்காரர் கல்வெட்டு

Image
கொங்கு கல்வெட்டு ஆய்வு வியாழன், 16 பிப்ரவரி, 2017 தளியில் பாளையக்காரர்காலக்  கல்வெட்டு  தளி-வரலாற்று நோக்கில்        திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள தளி என்னும் ஊர், வரலாற்றுச் சிறப்புடைய ஓர் ஊராகும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயருக்கு எதிராக அப்போதிருந்த பாளையக்காரர்கள் போரிட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மன் வஞ்சனையால் ஆங்கிலேயரால் 16-10-1799   அன்று தூக்கிலிடப்பட்டான். அவர் தம்பி ஊமைத்துரை மற்ற பாளையக்காரர்களோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டபோது தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரும் சேர்ந்துகொண்டார். 1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கி நூற்று நான்கு நாள்கள்  நடைபெற்ற போரில் ஊமைத்துரைக்கு ஆதரவாக  14  பாளையக்காரர்களை ஒன்றிணைத்து அதற்குத் தலைமையேற்றவர் இந்த எத்தலப்ப நாயக்கர் ,  எத்தலப்ப நாயக்கரை அடக்குவதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு தந்திரமாக ஒரு தூதுக்குழுவை அவரை சந்திக்க அனுப்பிவைத்தது. கட்டபொம்மனின் நண்பரான எத்தலப்ப நாயக்கர், கட்ட...

போசளமன்னன் வீரசோமேஸ்வரன் யாதவகுலம் என்று சொல்லும் அரியலூர் கல்வெட்டு

Image
போசளமன்னன் வீரசோமேஸ்வரன் யாதவகுலம் என்று சொல்லும் அரியலூர் கல்வெட்டு சோழர் ஆட்சியை மீட்ட ஹொய்சாள வீரசோமேஸ்வரன்: அரியலூர் மாவட்டம் காமரசவள்ளி சிவன் கோவிலுள் அமைந்துள்ள கணபதி சன்னதியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டின் செய்திகள் போசளமன்னர் வீரசோமேஸ்வரரின் மெய்க்கீர்த்தியில் அவருடைய பல்வேறு பட்டப்பெயர்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. அவை சமஸ்தபுவனாஸ்ரய, ஸ்ரீபிருதிவி வல்லப, மகா ராஜாதிராஜ, பரமேஸ்வர, துவராபதி பூர்வராதீஸ்வர, யாதவகுலாம் பரத்யமணி சர்வக்ஞ சூடாமணி, மலராஜராஜ, மலபருபா, கண்டரதந, பிரசண்ட கண்ட பேரு, அநேகாந்த வீரநர,சகாயசூர, சனிவாரசித்திகிரி, துர்க்கமல்ல, சலேதங்கராமன், வைரிப கண்டீரவ, மகதராஜ்ய நிர்மூல, பாண்டியகுல சமூத்திரண, சோளராஜ்ய பிரதிஷ்டாசாரிய, நிச்சங்கபிரதாப, சக்கரவத்தி போசள ஸ்ரீவீரசோமிஸ்வர தேவரசர் என்னும் பட்டப்பெயர்களாகும்.  இதில் இம்மன்னர் வாணகோவரையர்கள் ஆட்சி செய்த மகதராச்சியத்தையும், பாண்டிய மன்னர்களையும் வென்றவன் என்றும் சோழ நாட்டில் சோழ மன்னரின் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் குறிப்பிடப்படுகிறார். துவாரபதி என்ற நகரம் மகாபாரத காலத்தில் துவாரகை என ஸ்ரீ...

திருவாளவுடையார் திருப்பணிமாலை

திருவாளவுடையார் திருப்பணிமாலை

புதுப்பட்டி செப்பேடு கி.பி.1160

புதுப்பட்டி செப்பேடு திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள சமூகரெங்கபுரம் என்ற ஊரில் வசிக்கும் கோட்டைப் பாண்டியன் என்பவரிடம் செப்பேடு ஒன்று இருப்பதாகத் தகவ கிடைத்ததையடுத்து, திரு. கோட்டைப்பாண்டியன் அவர்களைச் சந்தித்தபோது, அவர் தம் வசமிருக்கும் செப்பேட்டினைக் காண்பித்ததோடு, அச்செப்பேடு ஏற்கனவே சென்னையிலுள்ள தொல்லியல்துறைப் பதிவு அலுவலர் திரு. மா. சந்திரமூர்த்தி அவர்களிடம் எடுத்துச் சென்று காண்பிக்கப்பட்டு அவரால் வாசிக்கப்பட்டுவிட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தார். 1  மேலும், தமது மூதாதையர்கள், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்திலுள்ள செக்காரக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையும், அனுப்பக்கவுண்டர் குலத்தைச் சேர்ந்த தமது முன்னோர்களால் கம்பளத்து நாயக்கர் குலத்தவர்க்கு வழங்கப்பட்ட செப்பேடு ஒன்று செக்காரக்குடியிலிருந்தது என்றும், அச்செப்பேட்டுக்குரியோர் தற்போது தெய்வச் செயல் புரத்துக்கு அருகிலுள்ள புதுப்பட்டியில் வசிக்கின்றனர் என்ற விவரத்தையும் தெரிவித்தார். இவ்விவரங்களின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தெய்வச் செயல்புரத்தையடுத்...

பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு (கி.பி 1123)

பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு இச்செப்பேட்டில் கி.பி. 1123ஆம் ஆண்டுக்குச் சமமான சக வருடம் 1045 மற்றும் கொல்லம் 299 ஆகியவை குறிப்பிடப்படுகின்றன சீவலமாறவெட்டும் பெருமாள் ராசா, தமது தம்பியாகிய சீவலமாறக் குலசேகரராசா மூலமாகவும் மாப்பிள்ளை சிவசங்கர ராசா மூலமாகவும், செக்காலைக்குடி நாட்டாண்மை, நிலைமை முதலிய அதிகாரங்களை ஒள்ளிக் கவுண்டனுக்கு வழங்குகிறார். (செக்காலைக்குடி என்ற ஊர் இச்செப்பேட்டுக்குரியவர் வசிக்கின்ற பாறைக்குட்டம் வட்டாரத்தில்தான் உள்ளது. இவ்வூர், சீவலமாறக் குலசேகரராசா முன்னிலையில்தான் முதல் முதலில் குடியேற்றப்பட்டது என்ற விவரம் இச்செப்பேட்டின் முதல் பக்கம் வரி 10-13 ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.) கி.பி. 1140ஆம் ஆண்டுக்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்படும்  புதுப்பட்டிச் செப்பேடு  செக்காலைக்குடி உள்காவல் காணியாட்சியைச் சீவலமாற பராக்ரம பாண்டியன் ஆணைப்படி, மேற்குறிப்பிட்ட ஒள்ளிக்கவுண்டர், மயிலம் பராக்ரம பாண்டிய நாயக்கருக்கு வழங்கிய செய்தியைக் கூறுகிறது. அதாவது, கயத்தாற்றுப் பாண்டிய மன்னர்களிடமிருந்து செக்காலைக்குடி ஊரின் நாட்டாண்மை முதலிய அதி...