கூலப்ப நாயக்கர் காதல்
கூலப்ப நாயக்கன் காதல்
ராஜா கூளப்ப நாயக்கர் காதல்:-
மதுரை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சேர்ந்த நிலக்கோட்டை பாளையக்காரர் சிந்தம நாயக்கரின் மகன் கூளப்ப நாயக்கர்.
கூளப்ப நாயக்கர் ஒரு சமயம் தன் பரிவாரங்கள் புடைசூழ நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள பன்றிமலைக்கு வேட்டையாடப் போயிருக்கிறார். வேட்டைக்குப் போன இடத்தில் நவரத்தின மாலை என்ற மலைசாதிப் பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு, அவளுடனே வாழ்கின்றார்.
தந்தையிடமிருந்து அவசரச் செய்தி வரவே, நவரத்தின மாலையைப் பிரிந்து நிலக்கோட்டை திரும்புகிறார்.
நாளடைவில் நவரத்தின மாலை பற்றிய பிரிவால் மனம் வாடி மெலிய, பிறகு மீண்டும் பன்றிமலை வந்து நவரத்தின மாலையைச் சந்தித்து ஆறுதல் கூறி தன்னோடு நிலக்கோட்டைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்ட காதல்.
கதையினை 371 கண்ணிகளால் அமைந்ததே கூளப்ப நாயக்கன் காதல் என்னும் இச்சுவடி.
அமைவிடம்:-
Manuscript Department of Tamil University, Thanjavur, India.
நிலவை ஜெகா.
Comments
Post a Comment