எர்ர கொல்லவார் ஷத்திரியர் என காலக்ஞானம் நூல் கூறுகிறது

எர்ர கொல்லவார் ஷத்திரியர் காலக்ஞானம் நூல் கூறுகிறது
தகவல்: Raja Raja Narendran fb

எர்ரகொல்லவார் க்ஷத்திரியர் - காலக்ஞானம் :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~

#கொல்லவார்

#க்ஷத்திரியர்

#காலக்ஞானம்

#ஸ்ரீசர்வக்ஞர்

இரண்டாம் பிஜ்ஜலதேவன் ஆட்சியில் கி.பி.12ம் நூற்றாண்டில் தவ ஞானி மகாபுருஷர் ஸ்ரீ #சர்வக்ஞ_முனிவர் அவர்களால் திரிகாலமும் எடுத்துரைக்கும் "#காலக்ஞானம்" என்னும் நூல் இயற்றப்பட்டது. இந்நூல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்கிற தகவல்களை முன்கூட்டியே கூறும் ஆரூட நூலாகவும் அமைந்துள்ளது. இந்நூலில் ஸ்ரீசர்வக்ஞரால் முன்கூட்டியே கணிக்கப்பட்டவை அனைத்துமே நடந்துவருவதாக நம்பிக்கை வலுவாக உள்ளது. இந்நூல் எர்ரகொல்லவார்களை கீழ்கண்டவாறு கூறுகின்றது.

காலக்ஞானம் :
~.~.~.~.~.~.~.~.~

"విచిత్రమతం పుట్టును. అది యేమంటేను శరణ స్థలం పేరు కలిగిని. సర్వాంగప్రసాద మనే హేళిక మంత్రం పుట్టును. దానివల్లను కృష్ణవేణి తీరమందు ఎర్ర గొల్ల క్షత్రియులు ఏగుదురు. వారి సతులు వీరసేవ్య రహస్యంగాను లింగవంతులై గురుచరేశ్వరులు వైష్ణవమతం చేత ఉందురు. అప్పటికి రాయపట్నము రాజులేక చెడిపోవును. చెడుగుణాలై పోవుదురు. దీనికి సాక్షులు రామరాయలు ఢిల్లీ రాజును కలుసుకొని వచ్చి మహాయుద్ధముచే అతని తలకోసికొని కాశికి వచ్చి వరగుమ్మటములో నిలిపేరు."

                              - సర్వజ్ఞుని కాలజ్ఞానము
.

பொருள் :
~.~.~.~.~.~

விசித்திரமான ஒரு மதம் தோன்றும் (லிங்காயத்து) அது மக்களுக்கு நன்நடத்தையை மந்திரமாக போதிக்கும், இதனால் #கிருஷ்ணவேணி நதிதீரத்திற்கு #எர்ர_கொல்ல_க்ஷத்திரியர்கள் வந்தடைவார்கள் அவர்களின் தர்மப்பத்தினிகள் ரகசியமாக வீரசைவ முறைகளை பின்பற்றி ஈசுவர லிங்க வழிபாடு மேற்கொள்ளுவர் ஆனால் தங்கள் சமய குருமார்கள் மத்தியில் அவர்கள் வைஷ்ணவர்களாகவே தோன்றுவர். அப்போது ராயபட்டிணம் (விஜயநகர #ஹம்பி) அரசர் இல்லாமல் அழிந்துபோகும். #ராமராயனும் #சுல்தானும் இணைந்து பெரும் யத்தம் நடக்கும் அதில் அவரின் தலைகொய்யப்படும் [ தலைக்கோட்டை போரில் சுல்தான்களிடம் விஜயநகரம் தோற்று ராமராயர் போரில் கொல்லப்பட்டு ஹம்பி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. பின்பு விஜயநகரம் தலைநகர் பெணுகொண்டாவிற்கு மாற்றப்பட்ட நிகழ்வை இது குறிக்கும் ]. இவ்வாறு காலக்ஞானம் நூல் பதிவுசெய்கின்றது.
.

காலக்ஞானம் இறுதி வாக்கியங்கள் :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~

"ఈవాక్యాలు కల్లో నిజమో యెరుంగము అనేవారు ఎవరు గలరో వారికి చంద్రసూర్యు లున్నంత పర్యంతం రౌరవాది నరకములు తప్పరాదు. ఇది దూషించినవారు హాస్యం చేసినవారు శతకాలాలు నరకద్వారాన పడుదురు. సమస్తమైన బాధలు వచ్చును. సందేహము లేదు. ఇవి సర్వజ్ఞుని వచనాలు. సర్వసమ్మతము మోక్షమార్గము అని నమ్మిన పురుషులు ఇది విని కృతార్థులొదురు. ఇవి శివుని గూడిన పలుకులు. ఇవి విని జనులు కృపచే ఉండేది."

                                - సర్వజ్ఞుని కాలజ్ఞానము

.
பொருள் :
~.~.~.~.~.~

இவ்வாக்கியங்கள் உண்மையோ பொய்யோ என்று உரைப்பவர்கள் சந்திரனும் சூரியனும் இருக்கும் வரை ரௌரவாதி நரகத்திலிருந்து தப்ப மாட்டார்கள். இதை நிந்திப்பவர்கள், இதை கேலி செய்பவர்கள், பல நூற்றாண்டுகளாக நரகத்தின் வாயில்களில் விழுவார்கள். எல்லாவிதமான துன்பங்களும் வரும். சந்தேகமில்லை. இவை எல்லாம் சர்வக்ஞனின் வாக்கு, சர்வ சம்மதம் மோட்சத்தின் மார்க்கம் என நம்பும் புருஷர்கள் இதனை கேட்டு நன்மை பெறுவார்கள். இது சிவபெருமானின் வாக்கு. இதைக் கேட்டு மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

_

குறிப்பு :
~.~.~.~.~.

● #ஸ்ரீசர்வக்ன_முனிவர் திரிகால ஞானி என்பதால் முக்காலத்திலும் எர்ரகொல்லவார்கள் க்ஷத்திரியர்களாய் இருந்தனர் என்பதை கூறும் ஆவணமாககவும் இதை கருதலாம்.

● கி.பி.12ம் நூற்றாண்டிலும் கொல்லவார்கள் க்ஷத்திரியர்களாகவே இருந்தனர் என்பதற்கான சிறப்பான சமகால ஆவணங்களில் ஒன்றாகவும் சர்வக்ஞர் இயற்றிய இந்த "காலக்ஞானம்" என்னும் நூல் திகழ்கின்றது.

#Golla #ErraGollavar #Kshatriya #Kalagnanam #Sarvajna_Muni

Comments

Popular posts from this blog

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1