பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு (கி.பி 1123)

பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு

இச்செப்பேட்டில் கி.பி. 1123ஆம் ஆண்டுக்குச் சமமான சக வருடம் 1045 மற்றும் கொல்லம் 299 ஆகியவை குறிப்பிடப்படுகின்றன சீவலமாறவெட்டும் பெருமாள் ராசா, தமது தம்பியாகிய சீவலமாறக் குலசேகரராசா மூலமாகவும் மாப்பிள்ளை சிவசங்கர ராசா மூலமாகவும், செக்காலைக்குடி நாட்டாண்மை, நிலைமை முதலிய அதிகாரங்களை ஒள்ளிக் கவுண்டனுக்கு வழங்குகிறார். (செக்காலைக்குடி என்ற ஊர் இச்செப்பேட்டுக்குரியவர் வசிக்கின்ற பாறைக்குட்டம் வட்டாரத்தில்தான் உள்ளது. இவ்வூர், சீவலமாறக் குலசேகரராசா முன்னிலையில்தான் முதல் முதலில் குடியேற்றப்பட்டது என்ற விவரம் இச்செப்பேட்டின் முதல் பக்கம் வரி 10-13 ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.)

கி.பி. 1140ஆம் ஆண்டுக்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்படும் புதுப்பட்டிச் செப்பேடு செக்காலைக்குடி உள்காவல் காணியாட்சியைச் சீவலமாற பராக்ரம பாண்டியன் ஆணைப்படி, மேற்குறிப்பிட்ட ஒள்ளிக்கவுண்டர், மயிலம் பராக்ரம பாண்டிய நாயக்கருக்கு வழங்கிய செய்தியைக் கூறுகிறது. அதாவது, கயத்தாற்றுப் பாண்டிய மன்னர்களிடமிருந்து செக்காலைக்குடி ஊரின் நாட்டாண்மை முதலிய அதிகாரங்களைப் பெற்ற, கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அனுப்பக்கவுண்டர் குலத்தவராகிய ஒள்ளிக்கவுண்டன், செக்காலைக்குடி ஊரின் உள்காவல் காணியாட்சியை (தமது பிரதிநிதியாக இருந்து ஊரின் காவல்பணி புரியும் அதிகாரத்தை)க் கயத்தாற்றுப் பாண்டிய மன்னன் ஆணைப்படியே, கம்பளத்து நாயக்கர் குலத்தைச் சேர்ந்த மயிலம் பராக்கிரம பாண்டிய நாயக்கருக்கு வழங்கிய செய்தியைக் கூறுகிறது.

50. சை பட்டையத்துக்கு ஒரு பணம் இந்தப் பட்டய
51. த்துக்கு தீங்கு செய்யவென்று நினைத்தவன் போ
52. ன தோசத்திலெ போகாமல்ப் பெரிய தம்பி கோ
53. ட்டைக் கெம்பக் கவண்டன் தங்காரஞ்21 செய்த பே
54. ற்க்குக் குடுத்து வரவும் தொட்டராயப் பெருமாள்கி
55. றுபையுண்டு உ குமரன் துணை.

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)