Posts

மதுரை நாயக்கர்கள் 3

Image
மதுரை நாயக்கர்கள் #3 – அரசின் தோற்றம் (தொடர்ச்சி) விஜயநகரப் பேரரசின் அரசப் பிரதிநிதிகளாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள் எப்போது நாயக்கத்தானம் பெற்று அமர நாயக்கர்களாகப் பதவி உயர்வு அடைந்தனர் என்பது பற்றி வரலாற்று அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சியின் போது மதுரையில் பணிபுரிந்தவரும் ‘The Madura Country’ என்ற புத்தகத்தில் மதுரை வரலாற்றின் பல பகுதிகளை ஆவணப்படுத்தியவருமான நெல்சன், பொயு 1559ல் தான் மதுரை நாயக்கராக விஸ்வநாத நாயக்கர் பொறுப்பேற்றதாகக் குறிப்பிடுகிறார். பாண்டியர் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் ம்ருத்யுஞ்சய ஓலைச்சுவடிகளில் உள்ள குறிப்புகளின் அடிப்படையிலும் இந்த முடிவுக்கு அவர் வந்ததாகவும் நெல்சன் தெரிவிக்கிறார். வி. ரங்காச்சாரி என்ற ஆய்வாளரும் நெல்சனின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு பொயு 1559ம் ஆண்டே மதுரை நாயக்கர் வம்சம் தோன்றிய ஆண்டு என்று கூறுகிறார். ஆனால் இதற்கான ஆதாரமாக அவர் நாகமர் கிருஷ்ணதேவராயருக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியை அவர் எடுத்துக்கொள்கிறார். அதாவது நாகம நாயக்கர் பொயு 1557ல் விஜயநகர அரசை எதிர்த்துப் புரட்சி செய்திருக்க வேண்டும்...

மதுரை நாயக்கர்கள் 2

மதுரை நாயக்கர்கள் 2

அனுப்ப கவுண்டர் வெம்பக்கோட்டை செப்பேடு

Image

எர்ர கொல்லவார் ஷத்திரியர் என காலக்ஞானம் நூல் கூறுகிறது

Image
எர்ர கொல்லவார் ஷத்திரியர் காலக்ஞானம் நூல் கூறுகிறது தகவல்: Raja Raja Narendran fb எர்ரகொல்லவார் க்ஷத்திரியர் - காலக்ஞானம் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ #கொல்லவார் #க்ஷத்திரியர் #காலக்ஞானம் #ஸ்ரீசர்வக்ஞர் இரண்டாம் பிஜ்ஜலதேவன் ஆட்சியில் கி.பி.12ம் நூற்றாண்டில் தவ ஞானி மகாபுருஷர் ஸ்ரீ #சர்வக்ஞ_முனிவர் அவர்களால் திரிகாலமும் எடுத்துரைக்கும் "#காலக்ஞானம்" என்னும் நூல் இயற்றப்பட்டது. இந்நூல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்கிற தகவல்களை முன்கூட்டியே கூறும் ஆரூட நூலாகவும் அமைந்துள்ளது. இந்நூலில் ஸ்ரீசர்வக்ஞரால் முன்கூட்டியே கணிக்கப்பட்டவை அனைத்துமே நடந்துவருவதாக நம்பிக்கை வலுவாக உள்ளது. இந்நூல் எர்ரகொல்லவார்களை கீழ்கண்டவாறு கூறுகின்றது. காலக்ஞானம் : ~.~.~.~.~.~.~.~.~ "విచిత్రమతం పుట్టును. అది యేమంటేను శరణ స్థలం పేరు కలిగిని. సర్వాంగప్రసాద మనే హేళిక మంత్రం పుట్టును. దానివల్లను కృష్ణవేణి తీరమందు ఎర్ర గొల్ల క్షత్రియులు ఏగుదురు. వారి సతులు వీరసేవ్య రహస్యంగాను లింగవంతులై గురుచరేశ్వరులు వైష్ణవమతం చేత ఉందురు. అప్పటికి రాయపట్నము రాజులేక చెడిపోవును. చెడుగుణాలై పోవుదురు. దీ...

கூலப்ப நாயக்கர் காதல்

Image
கூலப்ப நாயக்கன் காதல் ராஜா  கூளப்ப நாயக்கர் காதல்:- மதுரை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சேர்ந்த நிலக்கோட்டை பாளையக்காரர் சிந்தம நாயக்கரின் மகன் கூளப்ப நாயக்கர்.  கூளப்ப நாயக்கர் ஒரு சமயம் தன் பரிவாரங்கள் புடைசூழ நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள பன்றிமலைக்கு வேட்டையாடப் போயிருக்கிறார். வேட்டைக்குப் போன இடத்தில் நவரத்தின மாலை என்ற மலைசாதிப் பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு, அவளுடனே வாழ்கின்றார்.  தந்தையிடமிருந்து அவசரச் செய்தி வரவே, நவரத்தின மாலையைப் பிரிந்து நிலக்கோட்டை திரும்புகிறார்.  நாளடைவில் நவரத்தின மாலை பற்றிய பிரிவால் மனம் வாடி மெலிய, பிறகு மீண்டும் பன்றிமலை வந்து நவரத்தின மாலையைச் சந்தித்து ஆறுதல் கூறி தன்னோடு நிலக்கோட்டைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்ட காதல்.  கதையினை 371 கண்ணிகளால் அமைந்ததே கூளப்ப நாயக்கன் காதல் என்னும் இச்சுவடி. அமைவிடம்:- Manuscript Department of Tamil University, Thanjavur, India. நிலவை ஜெகா.

சின்ன நெகமம் பாளையக்காரர் கல்வெட்டு

Image
கொங்கு கல்வெட்டு ஆய்வு ஞாயிறு, 9 அக்டோபர், 2016 சின்ன நெகமத்தில் பாளையக்காரர்  கல்வெட்டு  பாளையக்காரர்கள் – ஒரு முன்னுரை          விசயநகரப்பேரரசின் தோற்றம்          கி.பி. 1336-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விசயநகரப் பேரரசு உருவானது. பின்னர் கி.பி. 1378-இல், விசயநகர அரசின் இளவரசரான குமார கம்பணன் மதுரையை வெற்றிகொண்டார். தொடர்ந்து தமிழகம், கேரளம் ஆகிய இரண்டும் விசயநகர ஆட்சியின்கீழ் வந்தன. விசயநகர அரசு பல நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் இந்த ஆட்சிப்பிரிவுகளுக்குத் தலைவர்களாக மண்டலாதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்குத் தனியே படையும் உண்டு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் “நாயக்கர்கள் ”   என்னும் படைதலைவர்களின் உருவாக்கம் நிகழ்ந்தது.         கிருஷ்ணதேவராயரின்   நாயக்கத்தனம்        எனினும், நாயக்கர் உருவாக்கம் முழுமையான வடிவமும் சிறப்பான நிலையும் பெற்றது கிருஷ்ணதேவராயரின் ...

தளி பாளையக்காரர் கல்வெட்டு

Image
கொங்கு கல்வெட்டு ஆய்வு வியாழன், 16 பிப்ரவரி, 2017 தளியில் பாளையக்காரர்காலக்  கல்வெட்டு  தளி-வரலாற்று நோக்கில்        திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள தளி என்னும் ஊர், வரலாற்றுச் சிறப்புடைய ஓர் ஊராகும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயருக்கு எதிராக அப்போதிருந்த பாளையக்காரர்கள் போரிட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மன் வஞ்சனையால் ஆங்கிலேயரால் 16-10-1799   அன்று தூக்கிலிடப்பட்டான். அவர் தம்பி ஊமைத்துரை மற்ற பாளையக்காரர்களோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டபோது தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரும் சேர்ந்துகொண்டார். 1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கி நூற்று நான்கு நாள்கள்  நடைபெற்ற போரில் ஊமைத்துரைக்கு ஆதரவாக  14  பாளையக்காரர்களை ஒன்றிணைத்து அதற்குத் தலைமையேற்றவர் இந்த எத்தலப்ப நாயக்கர் ,  எத்தலப்ப நாயக்கரை அடக்குவதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு தந்திரமாக ஒரு தூதுக்குழுவை அவரை சந்திக்க அனுப்பிவைத்தது. கட்டபொம்மனின் நண்பரான எத்தலப்ப நாயக்கர், கட்ட...