KSR அவர்களின் தினமணி செய்தி யார் வந்தேறி? இன்றைய, 10-4-2023 தினமணியில் ‘தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி’ என்ற பெயரில் Radhakrishnan K S அண்ணனின் கட்டுரை #தமிழகத்தில்_நாயக்க_மன்னர்கள்_ஆட்சி #தமிழ்_மண்ணோடும்_மனதோடும்_இணைந்தவர்கள் ! வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ————————————————————- சேர, சோழ, பாண்டியர் மூவேந்தர் ஆட்சி 14- ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற பின் தமிழகத்தில் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி அமைந்தது. செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் ஒரு சில கால கட்டங்களில் உறையூர், திருக்காட்டுப்பள்ளி, திருநெல்வேலி வள்ளியூர் வரை நாயக்க மன்னர்கள் ஆட்சி அமைந்தாக தரவுகள் உண்டு இவர்கள் ஆட்சி தமிழகத்தில் 1529 முதல் 1736 வரை 207 ஆண்டுகள் நடந்தது. இதைக் குறித்து சத்தியநாத அய்யரும், தமிழறிஞர் அ.கி.பரந்தாமனாரும் எழுதியுள்ளனர். அ.கி.பரந்தாமனார் தன்னுடைய முனைவர் பட்டத்துக்காக இதைக் குறித்து ஆய்வு செய்தார். இப்படி பல வரலாற்றுநூல்கள் நாயக்க் மன்னர்கள் ஆட்சிக் காலம் பற்றி எவ்விதஎதிர்மறை விமர்சனங்களும் இன்றி எழுதப்பட்டுள்ளன. மதுரை என்றதுமே நம் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சியம்மன் கோவில்தான். மீனாட்சி அம்மன...