மதுரை நாயக்கர்கள் காசியப கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம்

பட்டையத்தின் பாடமும் விளக்கமும் கீழே:

1    உ  சுபஷ்தசிறி விசையாப்புதைய  சாலிவாகன் சகா

2    ற்த்தம் 1478 வரு. மேல்ச்செல்லாநின்ற கொ

3    ல்லம் 732 வரு. சித்திரை மீ (2)8 தேதி சுக்கில பச்ச

4    த்து பஞ்சமியில் ……..காசிப கோத்திரம் விசுவனா

5    த னாயக்கரவர்கள் புத்திர[ர்] கிட்டிணப்ப னா ரவர்கள்

6    புத்திரன் பெரிய வீரப்ப னா ரவர்கள் கிட்டிண கோ

7    த்திரங் கோபால வம்முசம் அளகுமுத்து சேருவைகா

8    றன் புத்திரன் அளகுமுத்து சேருவைகாறனுக்கு பூமுதா

9    னப்பட்டையம் யெழுதிக்குடுத்த சாதனமாவது (ஸ்ரீ

10  மது) ராசாதிராச ராசபரமேசுர ஸ்ரீ வீரப்பிறதாப

11  ரெங்கராய மகாதேவராயரய்யனவர்கள் த(ன)கிரி ந

12  கரத்தில் பிரிதிவி(ஹம்பி?) ராச்சியம் பண்ணுகிறபோ….

13  (ங்)கள் அ மாதத்துக்கு விட்டுக்குடுத்த  திரிசிறாப்பள்ளி

14  ……… சாவடிக்கு தெற்க்கே திருவட(ம்) ராச்சியத்தில்

15  கயத்தாரு சீ(ர்)மை அரூர் வளநாடு கட்டாறங்குளம் சே

16  ர்ந்த பூமி தனக்கு அ மாதத்துக்கு விட்டுக்குடுத்து வடக்கு

17  மால் வாணர்முட்டி எல்கை(க்கு) சூலக்கல்லுக்குங்

18  கொத்துவாரே(ய்) ஊரனிக்குந் தெற்க்கு (வ)ட

19  கீள்மூலை மால் .. எல்கைக்கு தென்மேற்க்கு கிளக்கு

20  மால் இடைசெவ்வல் எல்கைக்கு மேற்கு தென்கிள

21  க்கு மால் மெய்யத்தலவனபட்டி எல்கைக்கு வடமே

22  ற்கு தெற்குமால் திருமங்கல குறிச்சி எல்கைக்கு வடக்கு தெ

23  ன் மேல் மூலை மால் (.. லாந்திலா) எல்கைக்கு வடகிளக்

24  கு மேலை மால் மேற்படி எல்கை .. நிலப்பாறை அய்யனார்

25  கோவிலுக்கு(ங்) கிளக்கு வடமேல் மூலை மால் கெச்சிலா

26  புரம் எல்கைக்கு தென்கிளக்கு யிந்த நான்ங்கெல்கை

27  க்குள்பட்ட பூமியும் (இ?)றுவும் ..(சேகரம் நீத்தான் பட்டி)

28  கிலக்கு மால் தொட்டனபட்டி எல்கைக்கு

29  மேற்கு தெற்கு மால் பசுவந்தளை எல்கைக்கு வடக்கு மே

30  ற்கு மால் வண்டானம் எல்கைக்கு கிளக்கு வடக்கு மா

31  ல் கோட்டூர் எல்கைக்கு தெற்கு இன்னாங்கெல்கைக்குள்

32  ப்பட்ட நிலமும் தேவி நத்தம் கிள மால் கோட்டூர் எல்கை

33  க்கும் ராக்காசி அம்மன் கோவிலுக்கு மேற்கு தெற்கு மா

34  ல் வண்டானமெல்கைக்கு வடக்கு மேற்கு மால் தோப்

35  பட்டி எல்கைக்கு கிளக்கு வடக்கு மால் காமய ..

36  பட்டி எல்கைக்கு தெற்கு இன்னாங்கெல்லைக்குல்ப்ப

37  ட்ட நிலமும் சோளபுரம் கீள்மால் எப்போதும் வெ

38  ன்றான் எல்கைக்கு மேற்கு தெற்கு மால் வெள்ளைக்கோ

39  வில் எல்கைக்கு வடக்கு மேற்கு மால் புங்கநத்தம் எ

40  ல்கைக்குக் கிளக்கு வடக்கு மால் மஞ்ச(ளூ)ர்பட்டி

41  எல்கைக்குந் தெற்கு வடகீள் மூலை மால் அ (அ)ங்கு

42  ளம் எல்கைக்குந் தென்மேற்கு இன்னாங்கெல்கைக்

43  குள்ப்பட்ட நிலமும் வலன்பட்டி கிள மால் இறால் எல்

44  கைக்கு மேற்கு தெற்கு மால் மஞ்ச(ளூ)ர் பட்டி எல்கை

45  க்கு வடக்கு மேலை செம்மப்புதூர் எல்கைக்கு கி

46  ளக்கு வடக்கு மால் மேலை இறால் எல்கைக்கு தெற்கு

 

 

விளக்கம்:

செப்புப்பட்டையம் “உ” என்னும் பிள்ளையார் சுழியுடனும், ”ஸ்வஸ்திஸ்ரீ” என்பதன் திரிந்த வடிமாய் “சுபஷ்தசிறி” என்னும் சொல்லுடனும் தொடங்குகிறது.  செப்புப் பட்டையத்தின் காலம் பற்றிய குறிப்பு, முதல் மூன்று வரிகளில்  உள்ளது. சாலிவாகன ஆண்டும், கொல்லம் ஆண்டும் தரப்பட்டுள்ளன. இரண்டுமே, தமிழ் எண்களுக்கான  குறியீட்டில் தரப்பட்டுள்ளன. சக ஆண்டு 1478 என்பது கி.பி. 1556. (சக ஆண்டுடன் 78-ஐக் கூட்டிவருவது). கொல்லம் ஆண்டு 732 என்பது கி.பி. 1556. (கொல்லம் ஆண்டுடன் 824-ஐக் கூட்டிவருவது). இரண்டுமே பொருந்துகின்றன. எனவே, காலக் கணக்கில் பிழை இல்லை.


Comments

Popular posts from this blog

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1