கொல்லவார்களின் பெருமைகளை சொல்லும் சாமராஜ உடையாரின் பெங்களூர் செப்பெடு


சாமராஜ உடையாரின் பெங்களூர் செப்பேடு :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~

#கொல்லவார்

#ஸ்ரீரங்கப்பட்டிணம்_இராஜ்ஜியம்

#சாமராஜ_உடையார்

செப்பேடு குறிப்பு :
~.~.~.~.~.~.~.~.~.~.~
கர்நாடக மாநிலம், பெங்களூரு பளேபேட்டையில் உள்ள வேணுகோபாலசுவாமி திருக்கோவிலில், ஆலயம் சுத்தம் செய்யும் போது கிடைத்த செப்பேடு இதுவாகும். 

இந்த செப்புப் பட்டய சாசனத்தில் எழுத்துக்கள் முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டு பக்கத்திலும் எழுதப்பட்டுள்ளது. 
_

செப்பேட்டின் அவளவீடுகள் :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~

நீளம் 40 செ.மீ, அகலம் 25 செ.மீ மற்றும் எடை 1.2 கிலோ, முன்பக்கம் 28 வரிகளும், பின்பக்கம் 44 வரிகளும் உள்ளன. 
_

மொழி மற்றும் எழுத்து :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~

செப்பேட்டின் உரை கன்னட எழுத்துக்களில் உள்ளது, பயன்படுத்தப்பட்டுள்ள மொழி #தெலுங்கு (தெலுங்கு வார்த்தைகளை கன்னடத்தில் எழுதியுள்ளார்கள்).
_

பொறிக்கப்பட்ட காலம், அரசு :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~

சாலிவாஹன வருடம் 1655 ஆம் ஆண்டின் பிரமாதிச்ச நாம வருடத்தின் கார்த்திகை சுத்த 15 ஆம் நாள், அதாவது கி.பி.1733ஆம் ஆண்டு நவம்பர் 10 சனிக்கிழமையை ஒத்திருக்கிறது. அப்போது, மைசூர் மன்னராய் #ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தவர் ஸ்ரீசாமராஜ உடையார் (ஏழாம் சாமராஜ உடையார்) அவர்கள் ஆவார். 
மேலும், இந்த சாசனம் ஸ்ரீரங்கப்பட்டின ராஜ்ஜியத்தின் அதிகாரப்பூர்வ தாமிர சாசனம் ஆகும்.
_

செப்பேடு கூறும் செய்தி :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~

                     ஸ்ரீகிருஷ்ணாய நமஹ

சுவஸ்தி ஸ்ரீ விஜயாப்யுதய சாலிவாகன சகவருடம்1655 (கி.பி.1733) பிரமாதிச வருடம் கார்த்திகை சுத்த 15ம் நாள் சந்திரகிரகண புண்ணியக்காலம் ஸ்ரீமத் ராஜாதி ராஜ ராஜ பரமேஸ்வர #சாமராஜ_உடையார்_பூபாலன் ஸ்ரீரங்கப்பட்டிணம் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து பூவுலகை  ராஜ்ஜியம் செய்துக்கொண்டிருந்தபோது யாதவகுலத்தவர் அனைவரும் நலம்பெறவேண்டி பெங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள யாதவர்கள் தங்கள் குல சுவாமிக்கு பூஜை செய்யும் நிமித்தமாக :
#யயாதியின்_சந்ததிகளான, யதுகுலோத்பவர்களான, ஸ்ரீகோபால சுவாமியில் திவ்ய பாத கமலங்களான, பூலோகம், புவர்லோகம், சுரலோகம், ஜனலோகம், சத்யலோகம், தமோ லோகம் ஆகிய லோகங்களிலும் பூஜிக்கப்படுபவர்களான, #கார்கேய_மகாமுனிவரின் கிருபையும், கடாக்ஷமும் என்றென்றும் உடையவர்களான, ஏழு பர்வதங்களுக்கு சந்திரனாய் விளங்குபவர்களும், ராஜ்ஜியங்களுக்கு ஏழு தூண்களாய் விளங்குபவர்களான, #தேவேந்திரனை மானபங்கம் செய்தவர்களான, 
பால், தயிர், நெய் ஆகியவைகளை நிறைவாக கொண்டவர்களான, மதுராபுர கோலாகலர்களான, #கம்சாசூரன், #நரகாசூரன், #கபவாசூரன், #பகாசூரன், #தேனுகாசூரன், #குக்குட்டாசூரன், #கராசூரன் ஆகிய சூரர்களின் கண்டங்களை வெட்டி கொண்டவர்களான, #காலிங்கன் என்னும் பாம்பின் கர்வம் தன்னை அடக்கியவர்களான, பிருந்தாவன சஞ்சாரர்களான, சுவாமி துரோகிகளுக்கு கண்டர்களான, சவுந்தரியமான அலங்காரப் பிரியர்களான, மாற்றார் பெண்களை தமது தாய்களாக கருதி விசுவாசம் கொண்டவர்களான, #வசுதேவ_குலோத்பவர்களான, நந்தகோபருக்கு வரப்பிரசாதமாக கிடைத்தவர்களான, ரேப்பள்ளியின் தலைவர்களான, #இந்திரதேவனிடமிருந்த பாரிஜாத விருட்சத்தை பறித்துக்கொண்டு வந்தவர்களான, #கோவிந்தராஜசுவாமிக்கு (திருப்பதி ஏழுமலையான்) துவாரபாலகர்களான, எர்ரகோடு (?), ஏக சங்கு, விபூதி, ருத்திராட்சம், வீரகந்தம் அகியவைகளை செலுத்துமாறு கோரிய "#செலகோல" பெயருக்கு கர்த்தர்களான, சத்திய வாக்கிற்கு ஹரிசந்திரர்களான, ஸ்ரீகிருஷ்ணரின் வரப்பிரசாதங்களான, பஞ்சவர்ண பிருதுகளுடைய பரமபாவணர்களான, மும்மூர்த்திகளின் ஸ்ரீபாத சேவகர்களான, தொணகொண்டா சிம்மாசன அதிபதிகளான, ரகு நாதனான #ஸ்ரீராமபிரானின் ஸ்ரீபாத சேவகர்களான, பலராமனுக்கு பந்துக்களான கொல்லவார்களான யாதவகுலத்தவர்களில் 

● யனுகல்ல பாப்பிநாயனியின் எஜமானர் வெங்கடபதி

● அபன்னிடூரி வாஜய்யன் குமாரன் அப்பண்ணன்

● தாதிமானி அப்பண்ணன்

● பால திம்மய்யன் மகன் தாசய்யன்

● பில சாத்தப்பன் மகன் திம்மராயன்

● பங்கல சஞ்சய ரேகல வெங்கடபதி மகன் ரங்கய்யா

● லிங்க திம்மய்யன் மகன் திருமலைய்யன்

● சிந்தல செருவு பாயன் மகன் வரதய்யன்

● மூக்க பாப்பய்யன்

● சென்யபோனி குருவய்யன்

● மாக்கணபோனி சலுவய்யன்

● பில்லகட வெங்கடபதி

● கம்பசானி ஜங்கய்யன்

● பொக்கிஷம் பாலகுருவய்யன்

● பில தாசய்யன்

● மலகேரி அண்ணய்யன்

● மசூரி அனுமய்யன்

● கொனிபோனி அப்பய்யன்

● அங்கசகிரி ஜங்கமய்யன்

● முதிகுப வெங்கடபதி

● பர்வத ராஜய்யன்

● கஜலபாட்ட யங்கய்யன்

● மும்மலேபாய கணிகல குருவய்யன்

● தாசி நாயனி மருமகன் (அலியா) சந்திரகிரி பாப்பய்யன்

● வேதிகொண்டய்யன் மருமகன் காவலி தாசய்யன்

● ரெடிமானிகோனேட்டி தரம் திம்மய்யன்

● காக்கர்ல குருவய்யன்

● கம்பால வாபய்யன் 

● சவுலகாணி திம்மபய்யன்

●  பில திம்மய்யன்

● பண்டாரி திம்மய்யன்

● கசனமான குருவய்யன்

● லோவாகிலி கதுரய்யன்

● மாமூலபேட்டை சண்டய்யன்

● கெங்கேரி சனிவாரய்யன்

● பச்சய தாசரி

● பள்ய ஹனுமய்யன்

●சேட்டபல்ய ஹனுமய்யன்

● தலகடாபுரம் கஞ்சய்யன்

● பொந்துசந்திர சின்னய்யன்

● யெர பிண்ணய்யன்

● கெரெ திம்மய்யன்

● சுகய கூச்சுகூரி சின்னய்யன்

● வசதய்யன்

● மொபலி குர்ரப்பன்

● சாள குருவய்யன் வம்சம் ராகவய்யன்

● சிங்கேகளன் மகன் தொட்டய்யன்

● முன்னேய பண்டாரி தாசகுருவய்யன்

● தாசய்யன் 

● பண்டாரி ஹனுமய்யன்

● பண்டாரி திம்மய்யன்

● ரவணய்யன்

● பாலய்யன்

● சிராம நஞ்சய்யன்

● கொல்ல வெங்கட்டய்யன்

● கங்கய்யன் மகன் சின்னய்யன்

● போடா வெங்கட்டய்யன்

● பந்தல கங்கைய்யன்

● துராயி சின்னய்யன்

● பில்லிகானிபால்ய வெங்கட்டய்யன்

● கோளபள்ளி திப்பய்யன்

● செனகாணி வெங்கடபதி

● யனுபோத்துல திம்மய்யன்

● மல்லசந்திரய்யன்

● ர்ரய சிந்தய்யன்

● குஞ்சூரி அண்ணய்யன்

● கோபுல பாலய்யன்

● பன்னேருகடா தேவிரய்யன்

● கஸ்தூரய்யன்

● யங்கா தாசிரி

முதலான அனைத்து யாதவகுலத்து நபர்களும் கோபால கிருஷ்ணசுவாமிக்கு நித்தமும் பூஜையும், தீபாராதனையும் நடைப்பெறும் நிமித்தமாக 81பணம் கொடுத்து தங்கள் யாதவ குலத்தவர்கள் அனைவருக்கும் மற்றும் இத்தைகைய தர்மங்களை செய்ய இயலாத ஏழைகளுக்கும் கூட புண்ணயம் கிடைக்கட்டும் என்று பாரத்வாஜ கோத்திரம் போஜாயன சூத்திரத்தவர்களான சாதுபல்யா கஸ்தூரி ஐயங்காரின் பேரனும் வெங்கடபதி ஐயங்காரின் புத்திரனுமான #திம்ம_ஐயங்கருக்கு திரிவாசமாக, தானதாராபூர்வமாக எழுதிக்கொடுத்த தான சாசனம்.

"உங்கள் குலம், பரம்பரை, உறவுகள் ஆகியோருக்கு புண்ணியம், சொர்க்கம் கிட்டும் என்பவதை சமஸ்கிருத வழ்த்து சுலோகமாக எழுயுள்ளனர்".

எங்களுக்கு தர்மங்களை சேர்த்துக்கொண்டு சுகமாக இருக்கும்படி வழங்கப்பட்ட தாமிர சாசனம். என்று இந்த செப்பேடு முடிவடைகின்றது...

#Golla #Gollar #Yadava #Mysore_Dynasty #Chamaraja_Wodeyar #Venugopalaswamy_Temple #Banglore_Copperplate 

#மகேந்திரவர்மன் fb

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)