முற்கால சாளுக்கிய சமூகத்தில் கொல்லவார்கள் Gollas in early chalukya society

முற்கால சாளுக்கிய சமூகத்தில் கொல்லவார்கள் Gollas in early chalukya society

முற்கால சாளுக்கிய கல்வெட்டுகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு


கொல்லா-சதாகவிசர்மன் என்ற சொல் சதகவிசர்மன், கொல்லா
என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.  கொல்லா என்ற முன்னொட்டு மேற்கு இந்தியாவிலும் மற்றும் தக்காணத்திலும் இன்று வரை கால்நடை மேய்ப்பாளர்களைக் குறிக்கும் சொல்லாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 
ஆரம்பகால சாளுக்கிய சமுதாயத்தில், கால்நடை வளர்ப்பாளர்களுடைய(கொல்லா)இந்த வார்த்தைக்கான குறிப்பு மற்றும் அதன் பொருள் வரலாற்றுக் கல்வெட்டுகளில் இதுவே முதலாவதாக இருக்கலாம்.  

இந்த கல்வெட்டு குறிப்பு இந்த நபருக்கான சமூக சூழலையும் வழங்குகிறது.  வெளிப்படையாக, இந்த நபர் ஒரு கொல்லனாக இருந்தாலும் கூட, அவர் பிராமணர்களின் ஒரு வேத மரபைச் சேர்ந்தவர்(குறிப்பாக, ஆத்ரேய-கோத்ரா (கோத்ரா = பரம்பரை)  (சங்கலியாவின், 'ஒரு செப்பேட்டுமாணியம்' குறிப்பிடப்பட்டுள்ளது )

கல்வெட்டில் உள்ள இந்த நிகழ்வு சிக்கலாக உள்ளது அதாவது தெற்காசியாவில், அறிஞர்கள் பொதுவாக ஆயர்களை  மிகக் குறைந்த சமூக சாதிக்குழுக்களில் வைத்திருக்கும்  சூழல் உள்ளது. 

இக்கல்வெட்டு இங்கே என்ன பரிந்துரை செய்து கொண்டிருக்கிறது?  
சதகவிசர்மன் வைதீகப் பரம்பரையில் இருந்து வந்தாலும் தொழிலில் ஒரு கொல்லாவாக இருந்தாரா? 

இது குறிப்பது யாதெனில் ஒன்று மற்ற தொழில்களைப் போலவே கால்நடைவளர்ப்புக்கும் உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது சதாகவிசர்மன் கால்நடை மேய்ப்பாளர்கள் அதிகம் வசிக்கும் பிராந்தியத்தின் பொறுப்பாளராக இருந்திருக்கலாம்.

இவை வெறும் ஊகங்கள் மட்டுமே ஆனால் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், ஆரம்பகால சாளுக்கிய சமூகத்தில் கால்நடை வளர்ப்பு மிக தெளிவாக இருந்திருக்கிறது என்பது ஊர்ஜிதாமாகிறது.

ஆதாரம்:
ஐஹோல் உள்ள தொல்லியல் நிலப்பரப்புகள்- குடியிருப்பு, நினைவுச்சின்னங்கள் மற்றும் விவசாய கால்நடை வளர்ப்பு 
ஹேமந்த் கடம்பி

Agro-Pastoralism in Early Chalukya Inscriptions
The word Golla-sadagavisarman translates as the name Sadagavisarman, the Golla. The prefix Golla is widely used in Western India and the Deccan to this day to denote cattle pastoralists. 

This may be the first reference in historical inscriptions for this word and its connotation of pastoralists in Early Chalukya society. 

The inscription that makes this 
reference also provides a social context for this person. Apparently, even 
though this person may have been a Golla, he belonged to a Vedic lineage of brahmanas (Specifically, the Atreya-gotra (gotra = lineage) is mentioned (Sankalia, ‘A Copper-Plate Grant’). 

This instance in the inscription seems to complicate the social context within which scholars have usually placed pastoralists in South Asia, that is, among the lowest castes groups. 

What may the inscription be suggesting here? Was Sadagavisarman a golla by profession although his lineage was from a Vedic line? 

This would either mean that pastoralism was given as high a status as other occupations or that 
Sadagavisarman may have been in charge of a region predominantly 
inhabited by cattle pastoralists. 

These are merely speculations but what seems worth noting is that cattle pastoralism is evident in Early 
Chalukya society.

Source:
Archaeological Landscapes at Aihole: Habitation, Memorials and Agro-Pastoralism
Hemanth Kadambi 

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)