விஸ்வநாத நாயக்கர் Vishwanatha Nayaka
விஸ்வநாத நாயக்கர் Vishwanatha Nayaka
மதுரை நாயக்கர் ஆட்சி:-
விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கன். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர், கிருஷ்ண தேவராயரிடம் அடைப்பக்காரராக பணிக்குச் சேர்ந்து பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. விஜய நகரத்திற்கு கப்பம் கட்டி வந்த மதுரையை ஆண்ட சந்திர சேகர பாண்டியனுக்கும், வீர சேகர சோழனுக்கும் இடையே பகைமை வரவே அவர்களை சமாதானபடுத்த ராயர் நாகம்ம நாயக்கரை சிறு படையுடன் மதுரைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரைக்கு சென்ற நாகம்மநாயக்கர் சோழனையும் பாண்டியனையும் வென்று தானே ஆட்சிபீடத்தில் அமர்கிறார். இதனை அறிந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர், நாகம்மநாயக்கரின் இந்த துரோகச் செயல் கண்டு கொந்தளிக்கவே, அவரை கைது செய்ய உத்தரவிடுகிறார் . நாகம்மநாயக்கனின் மகனான விஸ்வநாதனே அந்த பொறுப்பை ஏற்க முன்வருகிறார். ஆரம்பத்தில் நம்ப மறுத்த ராயர் பின் சம்மதிக்கிறார். சொன்னதைப்போலவே விஸ்வநாதன் தன் தந்தையை கைது செய்து வந்து ராயரின் முன் நிறுத்துகிறார்.விஸ்வநாதனின் விசுவாசத்தை கண்ட ராயர் மதுரையை ஆளும் பொறுப்பை அவருக்கே ஒப்படைத்து நாகம்ம நாயக்கரை விடுதலையும் செய்கிறார். அது முதல் ராயரின் ஆளுமைக்கு கீழ் விஸ்வநாதர் மதுரை நாயக்க ஆட்சி முறையை தொடங்க ஆரம்பிக்கிறார்.
நாயக்கர் மரபு
'நாயக்கர்கள்' என்று பொதுவாகச் சொல்லப்படுபவர்கள் கம்பளத்தார்கள் என்றும் தொட்டியர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். கொல்லவார்,சில்லவார் .தொக்லவார், கம்மவார், பலிஜா என பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட இம்மக்கள் பூர்வத்தில் ஆந்திரப்பகுதி பாறைகள் நிறைந்த ராயலசீமா பகுதியில் ஆடு,மாடு மேய்த்தும் பொட்டல் நிலத்து வேளாண்மை செய்தும் வாழ்ந்தவர்கள் என அறியமுடிகிறது.
பல மொழி பேசுவோரும் சமமாக நடத்தப்பட்டதைக் கண்டு பாரசீக கவிஞனின் பாராட்டு
இந்த விஸ்வநாத நாயக்கரின் காலத்தில் தான் விஜய நகரத்திலிருந்து தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழகத்தை நோக்கி பெருங்கூட்டமாக புலம் பெயர்ந்து வந்தனர்.
(இன்றைக்கு தமிழகத்தில் உள்ள தெலுங்கு ,கன்னடம் பேசுவோர் எல்லாம் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்தவர்கள் ஆவார்கள்.)
இதே போல் குஜராத்திலிருந்து சௌராஷ்டிரர்களும் தமிழகம் வந்தடைந்தனர். என்னதான் வெவ்வேறு மொழி பேசுவோர் இருப்பினும் அனைவரும் சமமாகவே நடத்தப்பட்டனர். இதனை கண்ட பாரசீக கவிஞன்”அப்துல் ரசாக் ““ஒற்றுமை என்றால் இப்படி இருக்க வேண்டும், ஆட்சி என்றால் இப்படி நடக்க வேண்டும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
(இன்றைக்கு தமிழகத்தில் உள்ள தெலுங்கு ,கன்னடம் பேசுவோர் எல்லாம் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்தவர்கள் ஆவார்கள்.)
இதே போல் குஜராத்திலிருந்து சௌராஷ்டிரர்களும் தமிழகம் வந்தடைந்தனர். என்னதான் வெவ்வேறு மொழி பேசுவோர் இருப்பினும் அனைவரும் சமமாகவே நடத்தப்பட்டனர். இதனை கண்ட பாரசீக கவிஞன்”அப்துல் ரசாக் ““ஒற்றுமை என்றால் இப்படி இருக்க வேண்டும், ஆட்சி என்றால் இப்படி நடக்க வேண்டும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
விஸ்வநாத நாயக்கரின் தளவாயும் அமைச்சரும் ' தொண்டை மண்டல சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த அரியநாத முதலியார்' விஸ்வநாத நாயக்கரின் தளவாயாகவும் அமைச்சராகவும் பணியாற்றியவர். தென்னகம் முழுக்க படையால் வென்று நாயக்க ராஜ்ஜியத்தை பலப்படுத்தியவர்களுள் முக்கியமானவர். ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பின் மதுரையில் ஒரு பலமான பேரரசு அமைவது அப்போதுதான். நெல்லை அருகே உள்ள புகழ்பெற்ற 'கிருஷ்ணாபுரம்' கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ள 'ஆயிரங்கால் மண்டபம்' மதுரை கீழமாசி வீதியில் உள்ள மாசித் தேர் மண்டபம் அரியநாதரின் மேற்பார்வையில் கட்டப்பட்டதாகும்.
இன்றும் கூட குதிரையில் கம்பீரமாக அமர்ந்து காட்சியளிக்கும் இவரின் சிலையை ஆயிரங்கால் மண்டபத்தின் நுழைவாயிலில் காணலாம்.
பாளையங்களை உருவாக்குதல்
தென்னகத்தை 72 பாளையபட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்களை நியமித்தார்.
[பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுகளுக்கும், இன்னொரு பகுதியைப் படைவீரர்களுக்கும், மற்றொரு பகுதியை மதுரை நாயக்கருக்கும் என ஒதுக்க வேண்டி இருந்தது. மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது. இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும்.]
இந்த 72 பாளையக்காரர்களில் கன்னடர், தெலுங்கர், தமிழர் ஆகிய மும்மொழியை சேர்ந்தவர்களும் சிற்றரசர்களாய் ஆட்சி செய்தனர்.
இந்த 72 பாளையக்காரர்களில் கன்னடர், தெலுங்கர், தமிழர் ஆகிய மும்மொழியை சேர்ந்தவர்களும் சிற்றரசர்களாய் ஆட்சி செய்தனர்.
பெரிய நாச்சியம்மன் கோவிலில் விஸ்வநாதர்
திருச்சி தென்னூரில் “பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்” என்ற குலதெய்வம் கோவில் ஒன்று உள்ளது. இத்தெய்வம் வாணிய செட்டியார் சமூகத்தின் பருத்திக்குடையான், தென்னவராயன், பயிராலழகன், பாக்குடையான், மாத்துடையான் மகரிஷி முதலான 5 கோத்திர குடி மக்களுக்கும் உரிமையானது. பெரியநாச்சி அம்மனும், அவரது கணவர் வீரிய பெருமாள் என்பவரும், பிள்ளையற்ற இவர்களின் சிதைக்குத் தீமூட்டிய வீரப்ப சுவாமி என்பவரும் இச்சமூக மக்களுக்கு மூதாதையர்கள். இந்த மூதாதையர்களை இக்குலமக்கள் குலதெய்வங்களாக வணங்கி வழிபடுகிறார்கள். இம்மூவரையும் சேர்த்து இக்கோவிலில் '33 சிறுதெய்வங்கள்' உள்ளனர். அவர்களில் மன்னர் "விசுவப்ப நாயக்கர், தளவாய் அரியநாத முதலியார்" ஆகியோரும் அடங்குவர். திருச்சி புத்தூரில் இன்றும் "விசுவப்ப நாயக்கர் தெரு" என்று ஒரு தெரு பெரியநாச்சி அம்மன் கோவிலின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. மன்னர் விசுவப்ப நாயக்கர் பெரியநாச்சி அம்மனின் தந்தை முறை என்று குறிப்பிடப்பட்டு, அவரது தளவாய் அரியநாத முதலியாருடன் கோவிலில் குடியேற்றப்பட்டு இருவரும் பெரியநாச்சி அம்மையாரின் குடும்பத்துடன் இன்றும் குலதெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர்.
ஆட்சிப்பரப்பு திருச்சிராப்பள்ளி வரை விரிவு செய்தல்
இவர் காலத்தில் மதுரை நாயக்கருடைய ஆட்சிப்பரப்பில் திருச்சிராப்பள்ளி வரை கொண்டுவரப்பட்டது. காவிரியின் இருமருங்கிலும் பரவலாக இருந்த அடர்ந்த குறுங்காடுகள் அகற்றப்பட்டன. விசுவநாதர் திருச்சிராப்பள்ளியில் தெப்பக் குளத்தை வெட்டினார். மேலும் திருச்சி அரண்மனை, நகரசுற்றுப்புறங்கள், திருவரங்கம் பெரியகோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில் மற்றும் மலைக்கோட்டை கோயில் ஆகிய இடங்களில் பாதுகாப்பு கருதி சிறப்புக்காவல் படையைத் தோற்றுவித்தார். இதன் மூலம் திருவரங்கம் பெரியகோயிலுக்கு வருகை தந்த யாத்திரிகர்களுடைய உயிருக்கும், உடைமைக்கும், தகுந்த பாதுகாப்பு அளித்து, அவர்கள் அச்சமின்றி அரங்கனைத் திருவடி தொழுவதற்கு விஸ்வநாத நாயக்கர் வழிவகுத்தார்.
திருவரங்கம் கோவில் நற்பணிகள்
இவர் காலத்தில் திருவரங்கம் கோயிலின் பல மண்டபங்கள் பழுது பார்க்கப்பட்டன. மூன்று லட்சம் பொன் கொண்டு இவன் மண்டபங்களைப் பழுது பார்த்தான் என்று "விஸ்வநாதனைக் கொண்டு நரஸிம்ஹாசார்யர் பண்ணிண கைங்கர்யம்" என்று கோயிலொழுகு கூறுகிறது.
ஸ்ரீவீரப்பிரதாப அச்சுததேவராயர் உபயமாக மதுரை நாயக்க மன்னன் விஸ்வநாத நாயக்கரால் பெருமாள் ஸ்ரீரங்கநாத தேவற்கு திருஊஞ்சல் திருநாளின்போது, திருஊஞ்சல் மஞ்சத்திற்கு வெள்ளிச்சரப்பள்ளி நாலு வராகன், இடைவெள்ளி ராயசப்படி அரண்மனைப்படிக்கல்லாலும் 8392 தூக்கம் வராகன் சமர்ப்பித்தது என்ற செய்திகளைப் பற்றி கூறும் கல்வெட்டு [ இரண்டாம் திருச்சுற்று மேற்குப்பக்க சுவரில் 07-02-1538ம் நாளில் பொறிக்கப்பட்டது. - A.R.E.No.43/1938-39] ஒன்று விஸ்வநாத நாயக்கருடையதாகும்.
திருப்பத்தூர் கல்வெட்டுகள்
விஜய நகர மன்னர்கள் : கி. பி. 14-ஆம் நூற்றாண்டின்
இறுதியில் பிற்காலப் பேரரசான பாண்டிய அரசு நலிவுற்ற
போது விஜய நகர மன்னர்கள் ஆளுகைக்கு தமிழகம் இலக்கா
இயது.. இவர்களுடைய கல்வெட்டுகள் இருப்புத்தாரில் காணப் படுகின்றன.
இம்மடி நரசிம்ம மாத்ராயரின் சக ஆண்டு 1421-ஐச்சேர்ந்த
(கி.பி. 1499) ஒரு கல்வெட்டு இவன் காலத்ததாகத் இருத்தளி
நாதர் கோயிலில் உள்ளது (89/1908). விஜய நகரப் பேரரசை
ஆண்ட 28-வது வம்சமான சாளுவ பரம்பரையின் முதல் மன்னனான சாளுவ நரசிம்மரின் இரண்டாவது மகன் இவர். கிருஷ்ண தேவராயரின் 9 கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. அவை சக
ஆண்டுகள் 1422, 1440-ஐச் சேர்ந்தவை (க. பி. 1510, 1578),
விஜய நகரை ஆண்ட துளுவம்சத்தின் மன்னரான கிருஷ்ண தேவராயர் 4. பி, 1509-ல் முடிசூடினார். அரசியலிலும் ஆட்சித் துறையிலும் போர்த் திறனிலும் சிறந்து விளங்கினார். இவர் காலத்தில் ஒருசில பகுதிகள் தவிர தென்னிந்தியா முழுவதும்
விஜய நகரப் பேரரசுக்கு உட்பட்டிருந்தது. இவர் காலத்தில்
நாகமநாயக்கர் தட்சிண மகாமண்டலேசுவராய் இருந்தார்.
இவரது இறுதிக் காலத்தில் நாகமநாயக்கரின் புதல்வர் தட்சண மகாமண்டலேசுவரரானார்.
அச்சுத தேவராயர், கிருஷ்ணதேவராயர் இறந்த பிறகு
அவரது தம்பி வீரப்பிரதாப அச்சுத தேவராயர் கி. பி. 1530-இல்
அரியணை ஏறினார். இவரது கல்வெட்டுக்கள் நான்கு திருப்புத்
தூரில் உள்ளன. அவை சகவருடம் 1452, 1457, 1160-ல் பொறிக்
கப்பட்டவை. இவை ௮. பி, 1520, 1525, 1598 ஆகிய ஆண்டு
களைச் சேர்ந்தவை. சாளுவ நரசிம்மனுடனும் ஏனைய மன்னர்
களுடனும் மேற்கொண்ட போர்களில் நாகம நாயக்கன் மகன்
விசுவநாத நாயக்கன் இவனுக்கு உறுதுணையாய் நின்றான்.
அவனுடைய உதவிக்குப் பரிசாக அவனிடம் பாண்டிநாட்டு
ஆட்சிப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. மதுரை
நாயக்கர் வரலாறு இவனிலிருந்து தான் தொடங்குகிறது.
இந்த விஜயநகர மன்னர்களுடைய கல்வெட்டுக்களில்,
இவர்களுக்குக் கீழ்ப்பட்டு ஆண்ட, பாண்டிய நாட்டை ஆண்ட
விஸ்வநாத நாயக்கன் மற்றும் தும்பிச்சி நாயக்கன், வெங்கல
நாயக்கன், பெரிய ராமப்பய்ய நாயக்கர் போன்ற மதுரை
நாயக்கர்களுக்குட்பட்ட நாயக்கர்களும் குறிப்பிடப்படுகிறார்கள் இவர்கள் நாயக்கரால் தென் இராமநாதபுரத்திற்கு அரசப்
பிரதிநிதிகளாக நியமிக்கப் பட்டவர்களாதல் வேண்டும்.
விஸ்வநாத நாயக்கன்: நாகம நாயக்கனின் மகன்.
மதுரை நாயக்கர் பரம்பரையின் முதல் மன்னன். விஜயநகர
மன்னனாயிருந்த அச்சுததேவரயானின் கழ், கி.பி - 1528 முதல்
1548 வரை அரசாண்டான். இவனால் தமிழகம் அடைந்த
நன்மைகள் பல. இவனது ஆட்டுக்கு உறுதுணையாய் இருந்
தவர் , இவருடைய முதலமைச்சரும் படைத்தலைவருமான
தளவாய் அரியநாத முதலியாரவர். பாயைப்பட்டு முறையை
ஏற்படுத்தியவர் இவரே: :மதுரை அரசு 72 பாளையங்களாக
பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குலைவரால் ஆளப்பட்டு வந்தது.
இவ்விஸ்வநாத நாயக்கனைப் பற்றிய ் கல்வெட்டொன்று
இருப்புத்தூரில் உள்ளது. ஆண்டு 1457-இல் (4. பி. 1545)
விஸ்வநாத நாயக்கன் நன்மைக்காக வரகுண புத்தூர் என்ற கிராமம் கோயிலுக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது.
தும்பிச்சி நாயக்கன்: ௪௧ ஆண்டு 1486-இல் (இ.பி. 1504)
தும்பிச்சி நாயக்கன் என்பவன் கேரளசிங்க வளநாட்டு
காரையூர் சீர்மையிலுள்ள வெள்ளப்பள்ளம் என்னும்
இராமத்தை கோயிலுக்குக் கொடையாக அளித்துள்ளான்.
தும்பிச்சி நாயக்கனின் பல விருதுப் பெயர்கள் கல்வெட்டில்
(178-1985) காணப்படுகின்றன. இவன் வரிசை நாட்டைச்
சேர்ந்த ஏரலிங்கைய்ய நாயக்கனின் மகனாவான்.
மற்றும் வெங்கல நாயக்கன், வீர நரசிம்மரான செல்லப்பர்
பெரிய ராமப்பய்யன் போன்றோரும் குறிக்கப்படுகின் றனர். இவர்கள் மதுரை நாயக்கருக்கு உட்பட்டு இராமநாதபுரம் பகுதிகளை ஆண்டவர்களாக இருக்கவேண்டும். வெங்கல
நாயக்கனுக்கு திம்மப்பன் என்ற பெயரும் உண்டு. இப்பெயரால் இவன், திருப்புத்தூாரின் ஒரு பகுதியான நெடு மரத்தில் திம்மப்பன் ஊருணியை சகம் 1440-இல் (கி.பி. 1518)
இருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டினான். திம்மப்பன்
ஊருணி என்பது தற்போது “தெம்மாப்பட்டு ஊருணி' என்று
வழங்கப்படுகிறது.
விஜய நகரத்தை அரசாண்ட வீரப்பிரதாப அச்சுத தேவ
மகாராயர் நன்மைக்காகப் பெரிய ராமப்பய்ய நாயக்களால்
பைரவருக்கு நிலம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணதேவராயர்
காலத்தில் வீர நரசிம்மராய நாயக்கரான செல்லப்பர் நன்மைக் காக திருப்புத் தூருடையான் சிங்கம நாயக்கனால் நிலம்
வழங்கப்பட்டது. நாகம நாயக்கர்: : மகனான விஸ்வநாத '
நாயக்கன் நன்மைக்காக ஒரு கிராமம் வழங்கப்பட்டது.
மதுரையின் முதல் நாயக்கர் மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு...
Read more at: https://m.dinamalar.com/detail.php?id=2707771மதுரையின் முதல் நாயக்கர் மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு...
Read more at: https://m.dinamalar.com/detail.php?id=2707771மதுரையின் முதல் நாயக்கர் மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு...
Comments
Post a Comment