தஞ்சை நாயக்கர்களின் ஆரம்பகால கல்வெட்டு
தஞ்சை நாயக்கர்களின் ஆரம்பகால கல்வெட்டு
ஆரம்பக்காலத் தஞ்சை நாயக்கர்கள் முருக பக்தி நிறைந்தவர்கள். சுவாமிமலை குமரனுக்கு நெய்விளக்கும், அபிஷேகத்துக்கும் மற்றும் அங்கு விளங்கிய வேலாயுத சிவன் மடத்துக்கும் கொடைகள் அளித்துள்ளனர். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சுப்ரமணியர் சந்நிதி இவர்கள் கட்டுவித்ததே.
இந்த சுவாமிமலை சாசனம் இரண்டு விஷயங்களை முன்னிறுத்துகிறது.
ஒன்று தஞ்சை நாயக்கர்களின் பூர்விகம் தொண்டைமண்டலத்தைச் சேர்ந்த நெடுங்குன்றம் என்பதும்
இரண்டாவது நாயக்கர்களான தங்களை நான்காம் வர்மணான சதுற்த்த கோத்திரத்தார் எனக் கூறத் தயங்கியது இல்லை என்பதும். விஜயநகரத்தினரால் நியமிக்கப்பட்ட கர்த்தாவான இவர்கள் தங்களை ஊழியர்கள் என்றே அழைத்தனர்.
பின்வந்த விஜயநகர வீழ்ச்சிக்குப் பிறகு, தனியாட்சி செய்து அரச நிலைக்கு மாறிய தஞ்சை நாயக்கர்கள், யாகங்கள் செய்து தங்களை சத்திரிய நிலைக்கு உயர்த்திக்கொண்டனர். மன்னாரு கோத்திரத்தார் என அழைத்துக்கொண்டனர். மன்னார்குடி இராஜகோபால சுவாமியின் அடிமை எனக் கூற, தங்களை "மன்னாருதாசன்" என அழைத்துக்கொண்டனர்.
தாங்கள் சூத்திர நிலையில் இருந்து முடிசூடிய மன்னர் நிலைக்கு உயர்ந்ததைக் குறிக்க தெலுங்கு பாடல்களில் விஷ்ணுவைப் போல பாதத்தில் தூவங்கி, ஹரனின் உச்சிமுடி நோக்கி சென்றவர்கள் என குறிப்பிடுகின்றனர்.
தகவல்: தளி ராஜசேகர்
Comments
Post a Comment