விஜயநகர மன்னர் வீரபூபதி உடையார்

விஜயநகர மன்னர் வீரபூபதி உடையார்
திருவரங்கத்தின் தை / பூபதி திருநாள் பற்றிய தகவல்கள் - Srirangam Thai/ Boopathy Tirunaal details

தெரிந்த #ஶ்ரீரங்கம் தெரியாத #அரங்கம் – 27 / #Srirangam known & unknown- 27 ( For English scroll down)

பூபதி திருநாள் 1413 ஆம் ஆண்டு வீரபூபதி உடையார் தொடங்கப்பட்டது. விஜயநகர அரசரான வீரபூபதி உடையாரால் 1413 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று ராஜமகேந்திரன் இரண்டாம் திருச்சுற்று கல்வெட்டு AR NO. 59(1938-1939) குறிப்பு உள்ளது.

தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருத்தேர் உத்தர வீதியில் வலம் வரும். இது 1413 தான் மாமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார். இந்த விழா அவருடைய ஆலோசனையின் பேரில் வீரபூபதி உடையாரால் தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். வீரபூபதி உடையார் நட்சத்திரம் புனர்பூசம், எனவே புனர்பூசத்தில் திருத்தேர் விழா ஏற்பாடு செய்து வைத்தார்.

இந்த விழாவின் சில முக்கிய அம்சங்கள்:
1) இந்தத் திருநாளில் மட்டும்தான் நம்பெருமாள் உபய நாச்சிமார்களுடன் திருத்தேரில் எழுந்தருள்வார்
2) இரண்டாம் நாள் காலை நம்பெருமாள் தாயார் சன்னதி முன்னர் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருள்வார். தாயாருக்கு நேரே எழுந்து இல்லாமல் சற்றே பக்கவாட்டிலிருந்து இருப்பார். அதாவது அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்பதைப்போல பெண் பார்க்கும் படலம் போல் வைத்துக் கொள்ளலாம்.
3) மூன்றாம் திருநாள் தாயார் சன்னதிக்கு நேர் எதிரே உள்ள கருத்துரை மண்டபத்தில் எழுந்தருளுவார். பங்குனி உத்திரத்திற்கு முன்னதாக கருத்துப் பரிமாற்றத்திற்காக தாயாரும் பெருமாளும் எதிரெதிரே எழுந்தருளியிருந்து தங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்வதாக கூறப்படுவதும் உண்டு.
4) எனவே மூன்றாம் திருநாள் மண்டபத்திற்கு கருத்துரை மண்டபம் என்று பெயர்.
5) ஒன்பதாம் திருநாள் புனர்பூச நட்சத்திரத்தன்று தை தேர் நடைபெறும்.
6) தேரில் இருந்து இறங்கிய நம்பெருமாள் உபய நாச்சிமார்களுடன் தாயார் சன்னதியில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளுவார். இந்த திருமஞ்சனம் தாயார் சன்னதி மூலஸ்தானத்திற்கு வெளியே நடக்கும்.
இன்றைய கொடியேற்று உற்சவம் தொடக்கம் காணொளியை கீழே காணலாம்.

இராமானுச தாசன் - அரங்கநகர் வாசி

=========================

Srirangam Thai Tirunaal history & details

Vijayanagara king Veera Boopathy Udayavar started this utsavam in 1413. More than 600 years old utsavam. Srirangam inscription AR-59 in 2nd Prakaram has these informations.

Started during  in the same year of MAMUNIGAL entry to Srirangam(should be Swamy’s advice)

1) Only utsavam where Perumal happens to come with ubaya nachiyars theer
2)Tomorrow morning Namperumal will go tayar sannidhi front mandapam not straight to tayar rather in side- it’s like Analum nokinar & Avalum nokinar moment for Panguni utram 
3) Third day (morning to evening) Perumal will be in (கருத்துரை மண்டபம்) karuthurai mandapam straight opposite to tayar sannidhi. This like our modern day pre marriage discussion🙏
4) karuhurai refers discussion of thoughts!
5) on 9th day Thai month poonar poosam theer.
6) From theer Perumal with ubaya nachiyars will go to tayar sannidhi to have Tirumanjanam just outside tayar moolasathanam

Boopathy (Thai) Tirunaal day 1 morning- kodi etram Video.Namperumal in kodi etra mandapam.
Ramanuja Dasan - Aranganagar Vasi🙏

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)