"கட்டபொம்மு சரித்திரக்கும்மி”1

                சக்கதேவி'துணை 
 "கட்டபொம்மு சரித்திரக்கும்மி ”1

சர்பொருந்துங்‌ கட்டபொம்மு துரையின்‌ மீதிற்‌ 
செந்தமிழ்க்கும்மி பாடல்‌ திறமாய்ச்‌ செப்ப 
ஏர்‌ புகழுஞ்‌ செந்தில்‌ வளர்‌ கந்தன்‌ தானும்‌ 
பரிவுடனே தயவு செய்வன்‌ பனுவல்‌ மாதுங்‌ 
கார்‌ போன்ற மேனியனுங்‌ கமலை தானுங்‌ 
கவிக்கு நித்த மருள்‌ புரிவான்‌ கருணை கூர்ந்து 
போர்‌ பொருந்து மிக்கவியை யானும்‌ பாட இசைக்கின்றேன்‌ 
செந்தமிழோ ரேற்றந்‌ தானே. 
                காப்பு 
பாரார்‌ புகழுகின்ற பாஞ்சை நகர்‌ மன்னவர்‌ மேல்‌ 
சீராய்‌ தமிழ்பாடச்‌ சென்னி திங்கள்‌ கங்கை கொன்றைத்‌ 
தாரார்‌ முடிபுனையுஞ்‌ சம்புவா புத்ர னெனுங் 
காராரு மைங்‌ கரன்‌ தன்‌ கழல்‌ வினையே காப்பாமே. 
அட்ட. இசை யெங்கணுமே திக்கு விசயஞ்‌ செலுத்தி 
யாண்மை பெற்றோன்‌ 
கொட்ட மிடுமயலார்கள்‌ மகுடமுடி கிடுகிடெனக்‌ குருதிபாய 
வெட்டி விருதிட்ட துரை திட்ட நகர்க்‌ கதிபதியாம்‌ வீரபாண்டியக்‌ 
கட்டபொம்மு தரிசனமே” சுப்ரமணியர்‌ தரிசனம்‌ போல்‌ 
காணலாமே 
ஓராறு மாச மழை மாரி பெய்யுமிக்‌ காழ்சினியி 
லோராறு மாசங்‌ கோடையாய்‌ விடு முர்ப்பனஞ்‌ சேர்‌ 
ராறு பாஞ்சை செகவீர பாண்டியன்‌ செங்கை ரெண்டும்‌ 
ஈராறு மாசமும்‌ பொன்மாரி பெய்யு மிரவலர்க்கே 
தீர்‌ பொருந்துங்‌ கட்டபொம்மு துரை மீதில்‌ 
செந்தமிழ்க்‌ கும்மி தமிமுரைக்க 
கார்‌ நிறம்‌ பெற்றருள்‌ வேம முகத்தோனே 
சுந்தா நின்‌ பொற்‌ பதங்‌ காப்பாமே” 
செல்வம்‌ பொருந்தும்‌ பாஞ்சால நகர்‌ வளர்‌. 
இரன்‌ மேல்‌ கும்மித்‌ தமிழ்பாட 
கல்விக்‌ கருள்‌ புரி வெண்டாமரை மலர்க்‌ 
கன்னியின்‌ பொற்‌ பாதங்‌ காப்பாமே
தேசம்‌ புகழ்‌ கட்டபொம்மு துரை மீதில்‌ 
செந்தமிழ்க்கும்மி தமிழ்பாட 
வாசம்‌ பொருந்தும்‌ நளின மலர்பதம்‌ 
வாலை மனோன்‌ மணி காப்பாமே 
பூலோக மெய்க்கும்‌ பாஞ்சாலைப்‌ பதிவளர்‌ 
புண்ணியவான்‌ கட்டபொம்‌ மேந்திரன்‌ மேல்‌ 
கோலாகலச்கும்மிப்‌ பாட்டுரைக்கப்‌ பாஞ்சை 
குஞ்சரன்‌ பொற்‌ பாதங்‌ காப்பாமே 
பாஞ்சைப்‌ பதியில்‌ வளர்ந்தோங்கும்‌ வீரபாண்டியக்‌ 20 
கட்டபொம்‌ மேந்திரன்‌ மேல்‌ 
வாஞ்சையாய்‌ கும்மித்‌ தமிழ்ப்‌ பாடதிரு 
வாக்கருள்‌ செய்வாளே சக்கதேவி 
பூலோக பாண்டியன்‌ கட்டபொம்மு துரை 
மேலுங்கும்மித்‌ தமிழ்ப்‌ பாட்டுரைக்க 
சாலோக சாமீப சாரூப சாயுச்ய 
சக்கதேவி பதங்‌ காப்பாமே 
சத்தி சடாட்சரி வீரமல்லு பொம்மு 
சக்க தேவி பதங்‌ காப்பாமே

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)