பால்நாடு ஹேஹேய யாதவர்களும் கல்யாணி சாளுக்கியர்களுக்கும் உள்ள தொடர்பு
பால்நாடு ஹேஹேய யாதவர்களும் கல்யாணி சாளுக்கியர்களுக்கும் உள்ள தொடர்பு
கோபண்ண நாயுடு - பல்நாட்டி வீர சரித்திரம் :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~
#கொல்லவார்
#பல்நாட்டி_வீர_சரித்ரா
'பல்நாட்டி வீர சரித்ரா' - ஸ்ரீநாத கவியார்
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~
"பல்நாடு ஹேஹேய அரசர் அனுகுராஜூவின் மகன் இளவரசர் #மலிதேவராஜூ அவர்கள் கல்யாணிப்பட்டின #சாளுக்கிய அரசர் #சோமேஸ்வரின் மகளாளை திருமணம் செய்யும்போது கல்யாணி சாளுக்கிய அரசவையில் பெருவீரர்களாகவும், மல்யுத்த சூரர்களாகவும் இருந்த கொல்லவாருகளின் வீரத்தை கண்டு வியந்து சாளுக்கிய அரசர் சோமேஸ்வரரிடம் இவர்கள் எங்களுடைய பல்நாடு அரசில் இருந்தால் அது எங்களுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் எனவே உங்கள் இளவரசியோடு சேர்த்து இந்த கொல்லவார் குல மற்போர் மல்லர்களையும் எனக்கு நீங்கள் திருமண சீதனமாக அனுப்பிவைக்கவேண்டும் என்று இளவரசர் மலிதேவராஜூ கேட்டுக்கொண்டதற்கிணங்க #செலகோல_சிம்ஹம் #குண்டு_போயினர் அவர்களின் மகன்களான பால கோபண்ண நாயுடுவுடன் சேர்த்து மூன்று சகோதரர்களை கல்யாணிபட்டிணத்தில் இருந்து பல்நாடு ராஜ்ஜியத்திற்கு அனுப்பிவைத்தார்.
கல்யாணி சாளுக்கிய அரசிலிருந்து பல்நாடு சீமை வந்தடைந்த #கோபண்ண_நாயுடு மற்றும் அவருடைய சகோதரர்களுக்கு மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு பல்நாடு அரண்மனையில் வாழ்ந்துவரலானார். இதே காலக்கட்டத்தில் பல்நாடு மன்னர் அனுகுராஜூவால் தன் மகன் போல வளர்த்தெடுக்கப்பட்ட வெலமவாரு குலத்திலுதித்த #பிரம்ம_நாயுடு பல்நாடு அரசின் மந்திரியாக இருந்ததால் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.
ஒருமுறை பல்நாடு சீமைக்கு வெளியே மேய்ச்சல் நிலத்திற்காக மன்னர் அனுகுராஜூவுக்கும், விவசாயி ராமி ரெட்டி என்பவருக்குமிடையே மனக்கசப்பு உண்டானது #ராமி_ரெட்டி தனது விவசாய நிலங்களை மன்னருக்கு வழங்கமுடியாது என்று பிடிவாதம் செய்ததால் பல்நாடு அமைச்சர் பிரம்மநாயுடுவால் இரவோடு இரவாக ராமிரெட்டி காட்டிற்கு குதிரையில் கட்டி இழுத்து செல்லப்பட்டு வெட்டி கொலைசெய்யப்பட்டார்.
ராமிரெட்டி கொலை செய்யப்பட்டதால் அவருடைய குடும்பம் வறுமையால் நிற்கதியானது அவருடைய 7 வயது பெண் குழந்தை #நாகம்மா தனது பிறந்த ஊர்விட்டு பயணமாகி பல்நாடு சீமையில் தன்னுடைய மாமன் வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டாள்.
இந்த சிறுமியே பிரம்மநாயுடுவை பழிவாங்கியே ஆகவேண்டும் என்கிற பகைக் கணலோடு பிற்காலத்தில் தனது தந்திரத்தால் பல்நாடு மன்னர் அனுகுராஜூவிடம் பெற்ற வாக்கின் காரணமாக பல்நாட்டு இளவரசர் மலிதேவராஜூவின் சகோதரர் இளவரசர் நலகாமராஜூவின் குரிஜாலா அரசில் மந்திரியான #நாயக்குராலி_நாகம்மா ஆவார்.
அவ்வகையில் அனுகுராஜூ இறந்த பிறகு பல்நாடு ஹேஹேய அரசு இரண்டாக உடைந்து அண்ணன் மலிதேவராஜூவுக்கு #மாச்சர்லா அரசும், தம்பி நலகாமராஜூவுக்கு #குரிஜாலா அரசும் பிரித்துக்கொடுக்கப்பட்டது.
இவற்றுள் மாச்சர்லாவுக்கு பிரம்மநாயுடுவும், குரிஜாலாவுக்கு நாயக்குராலி நாகம்மாவும் மந்திரிகளானார்கள்.
பிரம்மநாயுடுவை பழிவாங்க சமயம் பார்த்து காத்திருந்த நாகம்மா மாச்சார்லாவில் நடக்கவிருந்த திருவிழாவை பயன்படுத்திக்கொண்டாள். திருவிழாவில் அண்ணன் #மலிதேவராஜூவும், தம்பி #நலகாமராஜூவும் வந்திருந்தபோது இரு அரசுக்கும் இடையில் சேவல் சண்டை போட்டியை நடத்தும்படி நாகம்மா தூண்டினார். அவர் நினைத்தபடியே சேவல் சண்டை பந்தயம் நடத்துவதென முடிவானது.
இந்த #சேவல்_சண்டை பந்தயத்திற்கு நடுவராக இருதரப்பினருக்கும் பொதுவானரும், பெரியவரும், பிரம்மநாயுடுவின் நண்பருமான #பால_கோபண்ண_நாயுடு நியமிக்கப்பட்டார்.
கோபண்ண நாயுடு முன்னிலையில் இரு அரசுகளின் தரப்பில் இருந்தும் களத்தில் சேவல்கள் இறக்கிவிடப்பட்டன. சேவல் சண்டை கடுமையாகவும், உக்கிரமாகவும் நடந்தது, போட்டியின் இடையில் நாயக்குராலி நாகம்மா சூழ்ச்சி செய்து நீதிக்கு புறம்பாக பிரம்ம நாயுடுவின் சேவல்களை கொன்றுவிட்டாள் இதனை கேள்வியுற்று கொதித்தெழுந்த பந்தய நடுவர் பால கோபண்ண நாயுடு நாயக்குராலி நாகம்மாவின் மீது மிகுந்த கோபம் கொண்டு நாயக்குராலி நாகம்மாவின் சேனை முழுவதையும் ஒற்றை மனிதராக வெட்டிக் கொன்றுவிட்டார்.
எதிர்பாராத விதமாக நாகம்மாவின் மெய்காவலரான பீமண்ணா என்பவரால் கோபண்ண நாயுடு கழுத்தில் வெட்டுப்பட்டு மூர்சையானார். பிரம்ம நாயுடுவின் முயற்சியால் கோபண்ணா குணமடைந்து புத்துயிர் பெற்றார். இந்நிகழ்விற்கு பிறகு மலிதேவராஜூ, பிரம்மநாயுடு தரப்பினர் தேல்வியை தாங்களாகவே ஏற்றுக்கொண்டு போட்டியில் தோற்றவர்களுக்கு தண்டனையாக விதிக்கப்பட்ட 7 வருட வனவாசத்தை ஏற்றனர். இதற்கு ஆயுத்தமாக மாச்சர்லா அரசுக்கு கோபண்ண நாயுடுவை மன்னராக முடிசூட்டிவைத்துவிட்டு கோதாவரிக்கு வடக்கில் உள்ள வனத்திற்கு வனவாசம் சென்றனர். மாச்சர்லா ஹேஹேய அரசர் மலிதேவராஜூ அந்த ஏழு வருட வனவாசத்தை முடித்துவிட்டு மாச்சர்லா திரும்புவரை #பாலகோபண்ண_நாயுடுவே மாச்சர்லாவின் அரசராக இருந்தார்."
இந்த வனவாசத்திற்கு பிறகு தான் ஆந்திர வரலாற்றின் போக்கை மாற்றிய மிகப்பெரிய யுத்தமான #பல்நாடு_யுத்தம் மூண்டது.
__________
குறிப்பு :
~.~.~.~.~
♦️ கோபண்ண நாயுடுவின் பூர்வீகம் கல்யானபுரிபட்டினம் (கல்யாணி) என்பதையும் இவருடைய தந்தையார் பெயர் #குண்டா என்பதையும் மற்றும் இவருடைய பெயர் #கோபண்ணா என்பதையும், இவர்களுடைய குலத்தையும் வைத்து பார்க்கும்போது இவர்கள் விஜயநகர #சாளுவர்களோடு பூர்வகால தொடர்புடையவர்களாக இருக்கலாம். ஏனெனில் சாளுவருக்கும் பூர்வீகம் கல்யாணியே, மேலும் சாளுவரிலும் குண்டா, கோபண்ணா என்னும் பெயர்கள் வம்ச வாரியாக வருகின்றன.
அதேபோல் இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ஸ்ரீநாதகவியார் இயற்றிய இந்த "பல்நாட்டி வீர சரித்ரா" என்னும் இந்த பண்டைய இலக்கியம் விஜயநகர சாளுவர்களுக்கு முன்பே இயற்றப்பட்டுவிட்ட இலக்கியமாகும்.
__________
♦️ 'பல்நாடு யுத்தம்' ஆந்திராவின் மகாபாரதம் என்று அழைக்கப்படுகிறது.
♦️ ரோஷத்திற்காக ராஜ்ஜியத்தை பணையம் வைத்தார்கள், ஒரு துரும்பு தீண்டினாலும் வாள் எடுத்தார்கள்,
வீரம், மானம், சூழ்ச்சி, தந்திரம், ரோஷம் நிறைந்தவர்கள் வாழ்ந்தாலும், வாழ்வதாலும் பல்நாடு சீமை ஆந்திராவில் "பௌருஷால பூமி (விரம்விளைந்த மண்)" என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்திற்கு எவ்வாறு பாண்டியநாடு, மதுரையோ அதே போல ஆந்திரர்களுக்கு பல்நாடு என்பது வீரம்செறிந்த மண்.
#Golla #Gollavar #Palnadu #Heheya_Dynasty #Gopanna_Nayudu #Palnati_Veera_Charitra #Srinadhakavi
-
Comments
Post a Comment