"கட்டபொம்மு சரித்திரக்கும்மி”2

"கட்டபொம்மு சரித்திரக்கும்மி”2
                  பாஞ்சைவளம்‌ 
சுத்தவீர சூரன்‌ கட்ட பொம்முதுரை 
துலங்கும்‌ பாஞ்சை வளங்கள்‌ சொல்வேன்‌  
நாட்டுவளங்களைச்‌ சொல்லுகிறேன்‌ 
பாஞ்சைசக்‌ கோட்டை வளங்களைக்‌ கேளுமையா 
கோட்டைகளாஞ்‌ சத்துக்‌ கோட்டைகளாம்‌ மதில்க்‌ 
கோட்டைகள்‌ தான்‌ கெட்டி வேலைகளாம்‌ 
வீட்டிலுயர்‌ மணிமேடைகளாம்‌ மெத்தை 
வீடுகளா மதிலோடை களாம்‌ 
பூட்டுங்கதவுகள்‌ நேர்த்தகளாம்‌ பணப்‌ பொக்கிஷ 
வீடும்‌ பார்‌ சாஸ்இகளாம்‌” 
சக்கதேவி கோவிலாலய மாந்தேவி 
சன்னதி வாசல்‌ விலாசங்களாம்‌” | 

மிக்க நெடுந்‌ தெரு வீதிகளாம்‌ வெகு 
விஸ்தாரமாய்க்‌ கொலு மண்டபம௱ம்‌ 
சப்ரகூடட மஞ்சமேடை களாம்‌ இத்ரச்‌ 
்‌. சாலையுஞ்‌ சந்தனச்‌ சோலைசளாம்‌
புஷ்ப மலராலே பந்தல்களாம்‌ வெரு 
செப்ப முடனே ஆசாரங்களாம்‌ 
ஆசார வாசலலங்காரம்‌ துரை ராசன்‌ 
கட்ட பொம்மு சிங்காரம்‌. 
ராசாதி ராசன்‌ அரண்மனையில்‌ பாஞ்சை 
நாட்டரசன்‌ கொலுவீற்றிருந்தான்‌, 

பூவாசம்‌ வீசும்‌ புகழ்வீசும்‌ யெங்கும்‌ 
பொன்வாடை வீசம்‌ பன்னீர்விகும்‌. 
வாவிக்கரைகளும்‌ கோலைகளும்‌ தந்த 
வனமான விலாசங்களும்‌ 
வாமை பலாவும்‌ பழஞ்‌ சோரியும்‌ நல்ல 
மாவுங்கமுகும்‌ வளர்ந்‌ தோங்றாம்‌ 
தூாமைமலர்சளும்‌ பூச்சொரியும்‌ நத 
தாமரை பூத்திடும்‌ மேன்மைகளும்‌ 
விந்தையாகத்‌ கெருவீதுகளும்‌ வெகு 
விஸ்தாரமாய்க்‌ கடை வாசல்களும்‌ 

நந்தவனங்களும்‌ சந்தனச்‌ சோலையும்‌ 
நதியுஞ்‌ சென்னெல்‌ சுமுகுகளும்‌, 
வாரணச்‌ சாலை யொருபுறமாம்‌ பரி 
வளரும்‌ சாலை யொருபுறமாம்‌ 
கோரண மேடை. யொருபுறமாம்‌ தெருச்‌ 
சொக்கட்டான்‌ சாரியலோர்‌ புறமாம்‌ 
சோலையில்‌ மாங்குயில்‌ கூப்பிடுமாம்‌ வளஞ்‌ 
சொல்லி மயில்‌ விளையாடிடுமாம்‌ 
வாலை எனுஞ்‌ சக்க தேவி கிருபையால்‌ 
பாலும்‌ பவிசும்‌ வளர்ந்திடுமாம்‌. 

அன்பு வளர்ந்தேறும்‌ பாஞ்சால நாட்டினில்‌ 
அதிசயஞ்‌ சொல்கிறேன்‌ கேளுமையா 
தென்‌ பாஞ்சைப்‌ பதி நாட்டு முயலது 
திரும்பி நாயை விரட்டிடுமாம்‌' 
மூயலும்‌ நாயை விரட்டிடுமாம்‌ நல்ல 
முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே 
பசுவும்‌ புலியும்‌ ஒரு துறையில்‌ வந்து 
பால்குடிக்குந்‌ தண்ணீர்‌ தான்‌ குடிக்கும்‌ 

கறந்த பாலையுங்‌ காகங்‌ குடியாது 
கட்டபொம்மு துரை பேருசொன்னால்‌ 
வரந்தருவாளே சக்க தேவி திருவாக்கருள்‌
செய்வாளே சக்க தேவி.

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)