ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்‌

         ஸ்ரீகிருஷ்ண தேவராயர்‌ 
                       (1509-1530)

வரலாற்று ஆதாரங்கள்‌ 

1.கல்வெட்டுகளும்‌ செப்பேடுகளும்‌ : 
தி.பி. 1510ஆம்‌ ஆண்டில்‌ வடமொழியிலும்‌, கன்னடத்‌ 
இலும்‌ எழுதப்பெற்று, ஹம்பி விருபாட்சார்‌ கோவிலில்‌ காணப்‌ 
பெறும்‌ கல்வெட்டு, கிருஷ்ண தேவராயர்‌ கலிங்க நாட்டுக்‌ கஜபதி அரசனோடு போரிட்டதையும்‌ வடநாட்டு போஜ ராஜன்‌ போன்று 
இலக்கியத்‌ திறமை பெற்றிருந்ததையும்‌ பற்றிக்‌ கூறுகிறது. 

1515-16ஆம்‌ ஆண்டில்‌ பொறிக்கப்‌ பெற்ற அமராவதிக்‌ கல்‌வெட்டு, கொண்டவீடு என்னு மிடத்தைக்‌ கிருஷ்ணதேவராயர்‌ 
கைப்பற்றியதையும்‌, மற்றுமுள்ள வெற்றிகளையும்‌ பற்றித்‌ 
தொகுத்துக்கூறுகிறது.

 ஆந்திரநாட்டில்‌ குண்டூருக்கு அருகிலுள்ள மங்களகரியில்‌ காணப்பெறும்‌ கற்றூண்‌ கல்வெட்டு, சாளுவ திம்மருடைய பெருமைகளையும்‌, கிருஷ்ணதேவராயர்‌ கலிங்க நாட்டில்‌ வெற்றித்தாண்‌ நாட்டியதையும்‌ பற்றி விவரிக்கிறது. 

கொண்ட வீடு என்னுமிடத்திலுள்ள வெற்றித்‌ தரண்‌ கல்வெட்டு, கிருஷ்ண தேவராயார்‌ ஆட்சியில்‌ வசூலிக்கப்பட்ட பலவிதமான வரிகளைத்‌ தொகுத்துக்‌ கூறுகிறது. 

வடவார்க்காட்டில்‌ உள்ள கடலடி என்னுமிடத்தில்‌ காணப்பெறும்‌ கல்வெட்டு, அச்சுதராயர்‌ அரசுரிமை எய்திய சமயத்தில்‌ நடந்த சில வரலாற்றுச்‌ செய்திகளைப்பற்றி 
விளக்கக்‌ கூறுகிறது. 

தமிழ்‌ நாட்டிலுள்ள தேவாலாயங்களில்‌ கிருஷ்ண தேவராயர்‌ ஆட்சியில்‌ பொறிக்கப்‌ பெற்ற கல்வெட்டுகளும்‌, செப்பேடுகளும்‌ சுமார்‌ 216க்கு மேல்‌ காணப்படுகின்றன. 
இக்‌ கல்வெட்டுகளில்‌ தமிழ்‌ நாட்டிலுள்ள பல கோவில்களுக்குக்‌ 
கிருஷ்ணதேவராயர்‌ செய்த திருப்பணிகளும்‌, தான தர்மங்களும்‌ குறிக்கப்‌ பெற்றுள்ளன. 

2. இலக்கிய ஆதாரங்கள்‌ :
கிருஷ்ண தேவராயர்‌ காலத்தில்‌ எழுதப்‌ பெற்ற ராயவாசகமு 
என்ற நூலும்‌ பதினேழாம்‌ நூற்றாண்டில்‌ இயற்றப்பட்ட கிருஷ்ண ராஜவிஜயமு என்ற நாலும்‌ இவ்‌வரசருடைய இராணுவ வெற்திகளைப்‌ பற்றி நிரம்பிய அளவில்‌ கூறுகின்றன.  இவருடன்‌ சம காலத்தில்‌ வாழ்ந்த திம்மண்ணா, பெத்தண்ணா என்ற. இருவருடைய நூல்களும்‌ பல வரலாற்றுண்மைகளைப்பற்றிச்‌ கூறுன்றன. கிருஷ்ண தேவராயரால்‌ எழுதப்‌ பெற்ற ஆமுக்த மால்யதா என்னும்‌ நூலில்‌ பெரியாழ்வார்‌. சூடிக்‌ கொடுத்த 
நாச்சியார்‌ என்ற ஆண்டாள்‌ ஆகியோர்‌ வரலாறுகள்‌ பற்றிக்‌ 
குறிக்கப்‌ பெற்றிருந்த போதிலும்‌ அரசனுடைய கடமைகள்‌, 
சேனையை வைத்துப்‌ பாதுகாக்கும்முறை, அமைச்சர்களுடைய 
கடமைகள்‌, வரி வசூல்‌ முறை, அரசாங்கச்‌ செலவு, அலுவலகங்கள்‌ முதலியவை பற்றிய அறவுரைகளும்‌ காணப்பெறுகின்றன. 

3.இஸ்லாமிய வரலாற்றாரியர்கள்‌ : 
விஜயநகர அரசர்களுடைய அயல்நாட்டுக்‌ கொள்கைகளைப்‌ 
பற்றிப்‌ பெரிஷ்டா கூறியுள்ள போதிலும்‌ இராமராயரைத்‌ தவிர 
மற்ற அரசர்களுடைய பெயர்களை அவர்‌ திரித்துக்‌ கூறுகிறார்‌. 

கிருஷ்ண தேவராயருடைய அரசியல்‌ மேன்மையைப்‌ பற்றிப்‌ 
பெரிஷ்டாவின்‌ கூற்றுகளிலிருந்து நாம்‌ ஒன்றும்‌ அறிந்து கொள்ள 
முடியாது. விஜயநகரத்தரசர்கள்‌ எல்லோரும்‌ பாமினி சுல்தான்‌ 
களுக்குக்‌ கப்பம்‌ செலுத்தியவர்கள்‌ என்றும்‌, அவர்கள்‌ கப்பம்‌ 
செலுத்தாமற்‌ போனால்‌ பாமினி சுல்தான்களின்‌ கோபத்திற்‌ 
குள்ளாவர்‌ என்றும்‌ அவர்‌ கூறுவர்‌. விஜயநகரத்து அரசர்களையும்‌, 
அவர்களுடைய சேனைத்தலைவர்களையும்‌ இன்னாரென்று அறியாமல்‌ 
பெருங்குழப்பத்தை அவர்‌ உண்டாக்கியுள்ளார்‌. 1564ஆம்‌ 
ஆண்டில்‌ விஜயநகரப்‌ பேரரசிற்கு எதிராக அமைக்கப்‌ பெற்ற 
இஸ்லாமியக்‌ கூட்டுறவு பீஜப்பூர்‌ அடில்‌ ஷாவினால்‌ தோற்றுவிக்கப்‌ 
பட்டது என்று பெரிஷ்டா கூறுவார்‌. ஆனால்‌, டபடாபாவும்‌ 
கோல்கொண்டா வரலாற்று ஆசிரியரும்‌ ௮தை வேறு விதமாகக்‌ கூறியுள்ளனர்‌. 

இரண்டு இஸ்லாமியப்‌ படைத்‌ தலைவர்கள்‌ விஐயநகரச்‌ சேனையை விட்டு அகன்று, தலைக்கோட்டைப்‌ போரில்‌ 
சுல்தானியப்‌ படைகளுடன்‌ சேர்ந்து கொண்ட துரோகச்‌ செயலைப்‌ 
பற்றிப்‌ பெரிஷ்டா கூறவேயில்லை. ஆயினும்‌, 1522ஆம்‌ ஆண்டில்‌ 
கிருஷ்ண தேவராயர்‌ பீஜப்பூர்‌ சுல்தான்மீது கொண்ட 
வெற்றியையும்‌ ராமராயர்‌ மற்ற இஸ்லாமியத்‌ தலைவர்களின்மீது 
கொண்ட வெற்றிகளையும்‌ பற்றிக்‌ குறிப்பிடுவார்‌. டபடாபா 
ராமராயரையும்‌, சதாசிவ ராயரையும்‌ ஒருவராகக்‌ கருதி ஆகமது நகரத்துச்‌ சுல்தான்‌ நிஷாம்ஷா என்பவரே தலைக்கோட்டைப்‌ போருக்கு முன்‌ இஸ்லாமியக்‌ கூட்டுறவை ஏற்படுத்தியவர்‌ எனக்‌ 
கருதுகிறார்‌ ; தலைக்‌ கோட்டைப்‌ போரைப்‌ பற்றி மிக விரிவாக 
வருணித்து ராமராயருடைய திறமையையும்‌, சூழ்ச்சித்‌ திறனையும்‌ 
போரில்‌ வெற்றியடைவதற்கு எடுத்துக்‌ கொண்ட முயற்சிகளையும்‌ கூறியுள்ளார்‌...

4.அயல்நாட்டவர்‌ தரும்‌ சான்றுகள்‌ : 
போர்த்துகீக்ஷிய வரலாற்று ஆசிரியர்களாகிய, பாரோஸ், கூட்டோ, கொரியா, காஸ்டன்‌ ஹடா  என்பவர்களுடைய குறிப்புகளும்‌ துளுவ ஆரவீட்டு 
வமிசத்து அரசர்களுடைய வரலாற்றிற்கு ஆதாரமாக உள்ளன... 

விஜயநகரத்தில்‌ தங்கியிருந்து பேரரசின்‌ நிலையைநன்குணர்ந்த 
லூயி என்ற பாதிரியார்‌ கிருஷ்ண தேவராயர்‌ பீஜப்பூர்ச்‌ சுல்தான்‌ 
மீதும்‌ கஜபதி அரசன்‌ மீதும்‌ போர்புரிவதற்குச்‌ செய்த ஆயத்தங்‌ களைப்‌ பற்றி நன்கு உரைத்துள்ளார்‌. துவார்த்தி பார்போசா, விஜயநகரத்தைப்‌ பற்றிக்‌ கூறும்‌ செய்திகள்‌ மிக்கதுணை செய்‌கின்றன. 

நூனிஸ்‌, பீயஸ்‌ ஆகிய இரு போர்த்துகீசிய வியாபாரிகள்‌ தரும்‌ விவரங்களைப்‌ பற்றி முன்னரே நாம்‌ கண்டோம்‌. இவ்‌விருவருடைய வரலாற்றுக்‌ குறிப்புகள்‌, பெரிஷ்டா, டபடாபா ஆகியோர்‌ குறிப்புகள்‌, கல்வெட்டுகள்‌, தென்னிந்திய இலக்கியங்‌கள்‌ முதலிய சான்றுகளைவிட உண்மையானவை என்று கூறுதல்‌ சாலும்‌. 1567ஆம்‌ ஆண்டில்‌ விஜயநகர த்தைக்‌ கண்டு மனமுருகய நிலையில்‌ சீசர்‌ பெடரிக்‌ என்பார்‌ எழுதிய குறிப்புகள்‌ விஜயநகரத்தின்‌ மறைந்த பெருமையை விளக்குகின்றன. பெனுகொண்டாவிற்குத்‌ திருமலைராயர்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ விஜயம்‌ செய்த இயேசு சங்கப்‌ பாதிரியார்‌ ஒருவருடைய குறிப்புகளிலிருந்து 
தலைக்கோட்டைப்‌ போருக்குப்‌ பிறகு விஜயநகரப்‌ பேரரசு 
முற்றிலும்‌ அழிந்துவிடவில்லை என்று நாம்‌ அறிகிறோம்‌. பெனுகொண்டாவிலிருந்து சதந்திரகிரிக்கு விஜயநகரப்‌ பேரரசின்‌ தலை 
தகரம்‌ மாற்றப்பட்ட பிறகு, சந்திரகிரியில்‌ இரண்டாம்‌ வேங்கட தேவராயர்‌ இறந்த பிறகு, ஜெக்கராயன்‌ என்பார்‌ இரண்டாம்‌ 
ஸ்ரீரங்கனையும்‌ அவருடைய குடும்பத்தினரையும்‌ கொன்று குவித்‌த கொடுஞ்செயலைப்‌ பற்றிப்‌ பாரதாஸ்‌ பாதிரியார்‌ தரும்‌ வரலாறு தம்முடைய மனத்தைத்‌ தொடும்‌ உண்மையாகும்‌.

Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)