1.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - முதல் பாஞ்சை போரும், முடிவும்

முதல் பாஞ்சை போரும், முடிவும்

---------------------------------------------------------

Follow: விஜயநகர பேரரசு வரலாற்று களஞ்சியம் https://www.facebook.com/profile.php?id=100077963244931

 ________________________________________

பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஜெகவீர கட்டபொம்மு, ஆறுமுகத்தம்மாள் தம்பதியரின் மகனான வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பட்டமேற்று1790-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு  ஊமைத்துரை (குமாரசாமி), துரைசிங்கம் (சுப்பா நாயக்கர்/சிவத்தையா) என்ற 2 தம்பிகள் இருந்தனர்.இவர்கள் இருவரும் அண்ணன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உறுதுணையாக இருந்து வந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையர்களை எதிர்த்து அவர் களுக்கு வரி கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை பிடித்து தூக்கிலிடவேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்கள் அவரை பிடிக்க முயற்சி செய்தனர்.

கர்னல் பானர்மேன் தலைமையின் கீழ்வந்த படை கோட்டையை முற்றுகை இட்டு முதல் பாஞ்சை போரை துவக்கினர். தீரத்தோடு எதிர்த்து போரிட்டு கோட்டையையும் மக்களையும் காக்க போராடினர். போரின் முடிவில் தளபதி வெள்ளையதேவன், வீரன் சுந்தரலிங்கம், அமைச்சர் தானாபதி பிள்ளை ஆகியோர் உயிர் தியாகம் செய்திருந்தனர். கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. துரோகிகளின் துணையோடு 1799-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அவரை புதுக்கோட்டையில் கைது செய்தனர். கயத்தாறுக்கு அழைத்து வந்து பானர்மேன்தலைமையில் போலி விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி தூக்கிலிட்டனர். இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரை வீட்டுக்காவலிலும், சிறையிலும் அடைத்தனர்.


வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி குமாரசாமி என்ற ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். சிறையில் முதலில் அவருக்கு கைக்கும், காலுக்கும், கழுத்துக்கும் விலங்கு போடப்பட்டு இருந்தது.




#முரசு1


Comments

Post a Comment

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)