போடி நாயக்கனூர் ஜமீன் வரலாறு:
போடி நாயக்கனூர் ஜமீன் வரலாறு: தேனி மாவட்டத்தில் உயர்ந்து நிற்கும் மலைகள், பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளதுதான் போடிநாயக்கனூர். இந்த ஊருக்கு இப்போதும் பெருமை சேர்ப்பது இங்குள்ள ஜமீன் அரண்மனைதான்! ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அரண்மனை போல அமைக்கப்பட்ட இந்த ஜமீன் மாளிகை இப்போதும் மெருகு குலையாமல் 3 அடுக்கு மாளிகையாகக் காட்சியளிக்கிறது. கலையழகுமிக்க யாழி சிற்பங்கள், எழில் மிகுந்த மூலிகை ஓவியங்கள், பிரமிப்பூட்டும் அறைகள் என பல ஆச்சரியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஜமீன் மாளிகை. ஆந்திர மாநிலம், குத்துபல்லாரி (தற்போது கொத்துபல்லாரி) மாவட்டத்தில் உள்ள கூட்டி என்ற பகுதியை ஆண்டவர்கள் போடி ஜமீனின் முன்னோர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் கம்பளத்து நாயக்கர் இனத்தில் சீலவார் பிரிவைச் சேர்ந்தவர்கள் 1376 முதல் 1413 வரையில் ராகநாயக்கர் என்ற ராமநாயக்கர், 1413 முதல் 1454 வரையில் ஜக்குநாயக்கர் என்ற சக்கன நாயக்கர், 1454 முதல் 1483 வரையில் முத்து பங்காரு நாயக்கர், 1502 முதல் 1520 வரை போடிமுத்து நாயக்கர், 1520 முதல் 1531 வரையில் ஜக்குமுத்து நாயக்கர் 15...