சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1
சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1 வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும்! கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரை வீட்டுக்காவலிலும், சிறையிலும் அடைத்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி குமாரசாமி என்ற ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து அங்குள்ள சிறையில் அடைத்தனர். சிறையில் முதலில் அவருக்கு கைக்கும், காலுக்கும், கழுத்துக்கும் விலங்கு போடப்பட்டு இருந்தது. ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார் . ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது. புரட்சியாளர்கள் முந்நூறு பேருக்கும் மேற்பட்டோர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல...