திருமலை நாயக்கர் வழங்கிய அரச(இராஜ)கம்பளி அதிகாரம்

திருமலை நாயக்கர் வழங்கிய கம்பளி அதிகாரம் (ஆதாரம்:-தருமத்துப்பட்டி செப்பேடு - கி.பி.1655) எட்டு நாட்டின் தலைவராகப் பட்டம் சூட்டப்பட்ட பின்னத்தேவருக்கு கம்பளி, பிடிசெம்பு, பிரம்பு, பாதகட்டை, காளாஞ்சி செம்பு போன்றவை அரசுசின்னங்களாக வழங்கப்பட்டன. அவர் நாட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொழுதும் தனிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைமை தாங்கும் பொழுதும் அரசரால் கொடுக்கப்பட்ட அந்த இராச அரசுகம்பளத்தினை விரித்தே அதன்மீது அமர்வார். அரசர் கொடுத்த பாதக்கட்டையை அணிந்து கொண்டும், பொற்பிரம்பினைக் கையில் பிடித்துக் கொண்டும்தான், கூட்டங்களை நடத்துவார். இனி அவரின் அதிகாரங்கள் பற்றிக்காண்போம். திருமலை நாயக்கர் வழங்கிய கம்பளி அதிகாரம் (பின்னத்தேவன் வாரிசு பேட்டி) தவமணி கல்யாணி தேவர் என்கிற முக்குபாரி, அரசர் திருமலை நாயக்கர் தனது மூதாதையரான திருமலை பின்னத்தேவனுக்கு வழங்கிய கலைப்பொருட்கள்