முசிறி சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் 4 அரிய செப்புப் பட்டையங்கள் கண்டுபிடிப்பு
முசிறி சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் 4 அரிய செப்புப் பட்டையங்கள் கண்டுபிடிப்பு திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ளது சந்திரமௌலீஸ்வரர் கோயில். இக்கோயிலில் 4 பழமையான செப்புப் பட்டையங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறையின் சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார். கண்டறியப்பட்ட செப்புப் பட்டையங்கள் குறித்து அவரிடம் கேட்டபொழுது அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 46,020 கோயில்களில் உள்ள அரிய பழஞ்சுவடிகளையும் செப்புப் பட்டையங்களையும், செப்பேடுகளையும் திரட்டிப் பராமரித்து, பாதுகாத்து நூலாக்கம் செய்ய சுவடித் திட்டப் பணிக்குழுவை அமைத்துள்ளது. இச்சுவடித் திட்டப் பணிக்குழு இதுவரை 484 கோயில்களில் கள ஆய்வு செய்து முடித்துள்ளது. கள ஆய்வின் மூலம் சுருணை ஏடுகள் 1,80,280 (தோராய மதிப்பீடு), இலக்கியச் சுவடிக் கட்டுகள் 358 (32,133 ஏடுகள்), தாள் சுவடிகள் 6, செப்பேடுகள் 12, செப்புப் பட்டையங்கள் 25, வெள்ளி ஏடுகள் 2, தங்க ஏடு 1 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 48,691 ஏட...