Posts

Showing posts from December, 2022

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கில ஏகாதிபத்தியம் தகர்க்க காரணமாக இருந்த அரசியல் சூழ்ச்சியும் & சதியும் - யாரும் பேசாத நுட்பமான வரலாறு.

Image
#ஆர்காட்டுநவாபு 1781-இல் ஆங்கிலேயருக்குக் கொடுத்திருந்த வரி தண்டல் உரிமையை 1785-இல் திரும்பப் பெற்றார்.  #தமிழகத்தின் தெற்குச் சீமையில் மட்டுமாவது  வரிதண்டல் உரிமையை தங்களிடம் ஒப்படைக் குமாறு  நவாபை வற்புறுக்கினர் வெள்ளையர். அவர் அதற்கு உடன்படவில்லை.  #நவாபின் விருப்பத்திற்கு எதிராக 1790-இல் தெற்குச் சீமையில் வரிதண்டல் உரிமையைத் தாங்களே ஏற்றுக்கொண்டதாக ஆங்கிலேயர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.  #திருநெல்வேலியில் ஒழுங்காகச் சம்பளம் கிடைக்கப்பெறாமல் நிலைகுலைந்து நின்ற நவாபின் படைகளையும் அவர்கள் தங்களோடு எளிதாக இணைத்துக் கொண்டனர்.  #தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நவாபு 1792-இல் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி ஆங்கிலேயர் தெற்குச் சீமைகளிலே வரிதண்டல் செய்து செலவு போக எஞ்சிய தொகையை வெள்ளையர்களுக்கு நவாபு கொடுக்க வேண்டிய கடனுக்கு வரவு வைத்துக் கொள்ளவேண்டும்.  #கடன்தொகை முழுவதும் வரவு வந்த பின்னர் நாட்டைத் திரும்ப நவாபிடம் ஒப்படைத்து விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. #இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தெற்குச் சீமையில் நிர்வாகப் பொறுப்பை...