கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் பாஞ்சாலங்குறிச்சியும், அதன் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனும் அவரது சகோதரர்கள் மற்றும் அவரது மந்திரி, தளபதிகள், ஓற்றர்கள், படைவீரர்கள், குடிமக்கள், சக பாளையக்காரர்கள் ஏனையோரும் இம்மண்ணின் மானம் காக்க வெள்ளையரை எதிர்த்து போராடி உயிர் துறந்தனர். அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் மக்கள் மனதில் ஏற்றிக்கொண்டு கதை பாடல்களாகவும், கும்மி பாடல்களாகவும் நாடுதோறும் பாடி இந்த மக்களின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர். மேலும் நேருக்கு நேர் எதிரிகளாய் நின்ற வெள்ளையர்களின் பதிவுகள் இம்மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், மாண்புகளையும் உலகம் போற்றும் விதமாய் எழுதி வைத்துள்ளனர். அவற்றை ம.பொ.சி அவர்கள் வெள்ளையரை எதிர்த்த முதல் வீரன் கட்டபொம்மன் என்று அவர் நூலாக எழுதி அது பெரும் வரவேற்ப்பை பெற்றது. ம.பொ.சி க்கும் தமிழ்வானனுக்கும் உள்ள அரசியல் பகையை நேரடியாக எதிர் கொள்ள திராணியில்லாமல் அவரது நூலை விமர்சிக்கும் வகையில் கட்டபொம்மனை தனது நூலின் மூலம் விமர்சிக்க தொடங்கினார். அதற்கு ம.பொ.சி மற்றும் பல பெருந்தலைவர்களும் தமிழ்வாணன்...