சாமராஜ உடையாரின் பெங்களூர் செப்பேடு : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ #கொல்லவார் #ஸ்ரீரங்கப்பட்டிணம்_இராஜ்ஜியம் #சாமராஜ_உடையார் செப்பேடு குறிப்பு : ~.~.~.~.~.~.~.~.~.~.~ கர்நாடக மாநிலம், பெங்களூரு பளேபேட்டையில் உள்ள வேணுகோபாலசுவாமி திருக்கோவிலில், ஆலயம் சுத்தம் செய்யும் போது கிடைத்த செப்பேடு இதுவாகும். இந்த செப்புப் பட்டய சாசனத்தில் எழுத்துக்கள் முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டு பக்கத்திலும் எழுதப்பட்டுள்ளது. _ செப்பேட்டின் அவளவீடுகள் : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ நீளம் 40 செ.மீ, அகலம் 25 செ.மீ மற்றும் எடை 1.2 கிலோ, முன்பக்கம் 28 வரிகளும், பின்பக்கம் 44 வரிகளும் உள்ளன. _ மொழி மற்றும் எழுத்து : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ செப்பேட்டின் உரை கன்னட எழுத்துக்களில் உள்ளது, பயன்படுத்தப்பட்டுள்ள மொழி #தெலுங்கு (தெலுங்கு வார்த்தைகளை கன்னடத்தில் எழுதியுள்ளார்கள்). _ பொறிக்கப்பட்ட காலம், அரசு : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~ சாலிவாஹன வருடம் 1655 ஆம் ஆண்டின் பிரமாதிச்ச நாம வருடத்தின் கார்த்திகை சுத்த 15 ஆம் நாள், அதாவது கி.பி.1733ஆம் ஆண்டு நவம்பர் 10 சனிக்கிழம...