வேங்கி சாளுக்கியர்கள் யாதவர் என்பதற்கான சான்று வேங்கி சாளுக்கியர் வம்சாவளி மரபு: --------------------------------------------------------------------- #வேங்கி_சாளுக்கி_வம்சாவளி வேங்கி சாளுக்கியர்கள் தங்களின் சந்திர வம்சாவளி மரபினை பல கல்வெட்டுகள் செப்பேடுகளிலும் வெளியிட்ட போதிலும், நாம் இங்கே மேற்கோள் காட்டவிருப்பது இரண்டு சாசனங்கள்: 1, நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியன் கல்வெட்டு 2, வீரசோழனாரின் (1091-1092) செல்லூர் செப்பேடு 4ம் விக்ரமாதித்த சாளுக்கியன் கல்வெட்டு: ---------------------------------------------------------- வேங்கி சாளுக்கிய அரசர் நான்காம் விக்ரமாதித்த சாளுக்கியரின் 38வது ஆட்சியாண்டு கல்வெட்டு சாளுக்கிய வம்சாவளியை தெளிவாக கூறுகின்றது இதன்படி சாளுக்கிய வம்சம் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியது அந்த மரபில் அத்திரிமாமுனிவர் ⇒சந்திரதேவர் ⇒ புதன் ⇒ புருரவா ⇒ ஆகியோர்களின் வம்சாவளி வரிசையில் சாளுக்கிய மரபு தோன்றியது எனக் குறிப்பிடுகிறது. வீரசோழனின் செல்லூர் செப்பேடு: -------------------------------------------------------------- சோழ மன்னன் வீரசோழனார் கி.பி.1091-1092 ஆண்டில் வெளி...